25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Oct 11, 2024

வெண்டைக்காய், துவையல்!

தேவையான பொருட்கள்:வெண்டைக்காய்250 கிராம்,கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு1 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய்3,தேங்காய் துருவல், புளி- சிறிதளவு,எண்ணெய், உப்பு,கறிவேப்பிலை, தண்ணீர் தேவையான அளவு.செய்முறை:வாணலியில், எண்ணெய் சூடானதும், வெண்டைக்காயை நன்கு வதக்கவும். கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை தனியாக எண்ணெயில் வறுக்கவும். இவை ஆறியதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சுவைமிக்க, 'வெண்டைக்காய் துவையல்!' தயார். சத்துக்கள் நிறைந்தது. இட்லி, தோசைக்கு, பக்க உணவாக பயன்படுத்தலாம்.

Oct 11, 2024

வெண்டைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் - வெண்டைக்காய் - அரை கிலோ, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.செய்முறை:வெண்டைக்காயைத் தண்ணீரில் நன்கு கழுவித் துடைக்கவும். ஈரமே இருக்கக்கூடாது. வெண்டைக்காயின்தலைப்பகுதியையும், வால் பகுதியையும் நீக்கிவிட்டு இரண்டாகக் கீறவும் .நடுவில் இருக்கும் விதைகளைக் கூடியமட்டும் நீக்கவும். மேலும் மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கவும். இப்படியே எல்லா வெண்டைக்காய்களையும் நறுக்கிய பிறகு.மசாலாப் பொருட்கள், கடலை மாவு, அரிசி மாவு. தேவையான உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசைந்தால், மசாலாக் கலவை வெண்டைக்காய்களுடன் நன்கு ஒட்டிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், வெண்டைக்காய்களை எடுத்துச் சிறிது சிறிதாக உதிர்த்துப் போட்டு வேக வைக்கவும். இருபுறமும் திருப்பிப்போட்டு எடுக்கவும். மொறுமொறுப்பான சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.

Oct 11, 2024

வெண்டைக்காய் வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்: - 1/2 கப் வெண்டைக்காய் வற்றல்,1/2கப் சாம்பார் வெங்காயம்,10 பல் பூண்டு,1 தக்காளி,1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் தனியாத்தூள், 1/2டீஸ்பூன் சீரகத் தூள், 1கப் புளி கரைசல்அரைப்பதற்கு - 1டேபிள்ஸ்பூன் பச்சரிசி, 1/4 டீஸ்பூன் வெந்தயம்,1/4கப் தேங்காய் தாளிக்க - 3டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்,1/4 டீஸ்பூன் கடுகு  கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்செய்முறை - வெண்டைக்காய் வற்றல் குழம்பு செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், வெண்டைக்காய் வற்றல் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்து வைக்கவும்.பச்சரிசி, தனியா, வெந்தயத்தை வரும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேங்காய்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.பின்னர் வாணலியில் எண்ணை சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு வதக்கவும்.அத்துடன் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.வெண்டைக்காய் வற்றல் ,மசாலா நன்கு வதக்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.குழம்பு நன்கு கொதித்து எண்ணை பிரிந்து வரும் போது கடுகு வற்றல் தாளித்து சேர்த்து, மல்லி இலை தூவி இறக்கவும்.இப்போது தயாரான வெண்டைக்காய் வத்தல் குழம்பை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.இந்த வெண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் அருமையான சுவையில் ,சூடான சாதத்தில் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.

Oct 04, 2024

கல்கண்டு சாதம்

தேவையான பொருட்கள் - பச்சரிசி  400 grams , பால் 2 லிட்டர், சீனாகற்கண்டு 1 கிலோ, நெய் ஒன்னே கால் படி, முந்திரிப்பருப்பு 20 எண்ணம், கிஸ்மிஸ்பழம் 1 மேஜைக்கரண்டி, ஏலப்பொடி கால் தேக்கரண்டி, தேங்காய் 1 மூடி,செய்முறைபச்சரிசியை750 மில்லி லிட்டர், தண்ணீரில்(ஒரு பங்கு அரிசிக்கு3 பங்கு தண்ணீர்) போட்டு நன்றாக குழைய வேக விட வேண்டும். பின்2லிட்டர் பாலை ஊற்றி ,நெய்யில் பொரித்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்பழம், வதக்கி தேங்காய்த் துருவலையும் சாதத்துடன் கலந்து பொடி செய்த சீனா கற்கண்டையும் கலந்து, சிறு தணலில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி ஏலப் பொடி கலந்து இறக்கவும். குறிப்பு- சீனாகற்கண்டிற்குப் பதிலாக 500 grams, சீனியை கலந்து சீனிச் சாதம் தயாரிக்கலாம்.

Oct 04, 2024

மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள் - 150கிராம் வெள்ளை கண்டல்1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்தேவையான அளவு உப்பு1 பெரிய வெங்காயம் கட் செய்தது2 பச்சை மிளகாய் கட் செய்தது1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்1/2 டீஸ்பூன் கறிமசால் தூள்1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 4டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை3டேபிள்ஸ்பூன் எண்ணெய்1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது செய்முறை- சுண்டலை குறைந்தது8மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பின் உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி வைக்கவும்(5விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்)ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு,தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் உப்பு, கறிமசால் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, காரம் சேர்ந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி.

Oct 04, 2024

பச்சை பயறு சுண்டல்

தேவையான பொருட்கள்பச்சைபயறு- 2கப்தேங்காய்துருவல் -அரைகப்கடுகு -கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு- அரைஸ்பூன் பெரியவெங்காயம்-1வரமிளகாய்-2கருவேப்பிலை-1கொத்து உப்புத்தூள்-தேவைக்குசமையல் எண்ணெய் தாளிக்கசெய்முறை- முதலில்பச்சை பயறை சுத்தம் பண்ணி வேகவைத்துக்கொள்ளவும். வடிகட்டி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தாளிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கட்பண்ணிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.அதிலேயே தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த பச்சைப்பயறையும் சேர்த்து ,நன்கு எல்லாம் கலக்கும்படி கலந்துவிடவும். பச்சை பயறு சுண்டல் ரெடி.

Oct 04, 2024

பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்1/2ஸ்பூன் கடுகு1ஸ்பூன் கடலை பருப்பு1ஸ்பூன் உளுத்தம் பருப்பு3 பச்சை மிளகாய்ஒரு கப் காய்ந்த பச்சை பட்டாணி2 வெங்காயம்2 ஸ்பூன் தேங்காய் துருவல்தேவையானஅளவுஉப்புசமையல் எண்ணெய் தாளிக்கசெய்முறை- எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தூள் உப்பு போட்டு, நன்றாக வதக்கவும்.பச்சை பட்டாணியை ,8 hoursஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெந்த பட்டாணியை போட்டு கிளறவும். நன்றாக தாளித்த பிறகு, மேலே தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். பச்சை பட்டாணி சுண்டல் ரெடி.

Oct 04, 2024

தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்:வெள்ளை பட்டாணி - 1 கப் (உலர்ந்த ரகம்) மாங்காய்  (துருவியது) -1/4 கப் + 1 டீஸ்பூன்தேங்காய் - 1/4 கப்(துருவியது)மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பகொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)எலுமிச்சை - அரை   பிழிந்தது (விரும்பினால்)எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு -1 தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்) செய்முறை:வெள்ளைப் பட்டாணியை இரவில் அல்லது குறைந்தபட்சம்8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து3 விசில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். அழுத்தம் வெளியேறும்போது, தண்ணீரில் இருந்து பட்டாணியை வடிகட்டி வைக்கவும்.மாங்காயைத் துருவி, தயாராக வைக்கவும்.வேகவைத்த பட்டாணி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். பிறகு துருவிய மாங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து2 முதல்3 நிமிடம் கிளறவும். இறுதியாக, எலுமிச்சையை பிழிந்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும், தீயை அணைக்கவும்.சூடாக இருக்கும் போது பரிமாறவும்.வதக்கிய பிறகு துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சிறந்த சுவைக்காக நொறுக்கப்பட்ட இஞ்சியை ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம். இது செரிமானத்திற்கும் உதவுகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் எலுமிச்சையை தவிர்க்கலாம்.

Oct 04, 2024

கொண்டைக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்: கொண்டைக்கடலை - 200 கிராம்மிளகாய் வற்றல் - 2தேங்காய் துருவல் - 1 கப்கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுபெருங்காயம் - ½ டீஸ்பூன்கறிவேப்பிலை - ஒரு கீற்றுஎண்ணெய் - தாளிக்க செய்முறை: கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும், அல்லது வெந்நீரில்2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும். சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

Sep 27, 2024

பீட்ரூட் சாதம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை மதியம் சாப்பிடுவதற்காக கொடுத்தனுப்ப வேண்டும். தினமும் ஒரு காய்கறிகளை வைத்து எளிமையான உணவு வகையை குறைந்த நேரத்தில் மிகவும் சுவையாக செய்து முடிக்கலாம். காலையில் எழுந்தவுடன் சாதம், குழம்பு, பொரியல் என்று  செய்வதற்கு சற்று நேரம் அதிகமாக செலவாகும். குக்கரில் EASY யா சாதத்தை எப்படி செய்ய வேண்டும் தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 200 கிராம், பாஸ்மதி அரிசி – ஒன்றரை டம்ளர், சின்ன வெங்காயம் – 15, இஞ்சி பூண்டு விழுது – அரை  ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், ஏலக்காய் – 1, கிராம்பு – 1, பட்டை சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து. செய்முறை:  பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி, மறுபடியும் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட்டை தோல் சீவி தேங்காய் துருவல் பயன்படுத்தி துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது போல பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பை பற்ற வைத்து, அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.அதன் பின் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி அரிசியை மட்டும் இதில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லி  சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு குக்கரை மூடி விடவேண்டும். குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட வேண்டும். 2 விசில் வரும் வரை அப்படியே விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சாதம் தயாராகிவிட்டது. இவ்வாறு பீட்ரூட் சாதத்தை நீங்களும் ஒருமுறை குக்கரில் செய்து பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும்.

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 70 71

AD's