25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jan 12, 2025

பழங்களின் தமிழ் பெயர்கள்

Apple - குமளிப்பழம் Cherry - சேலாப்பழம் Kiwi - பசலிப்பழம் Lichee - விளச்சிப்பழம் Melon - வெள்ளரிப்பழம் Orange - கமலாப்பழம் Peach - குழிப்பேரி Strawberry - செம்புற்றுப்பழம்  Wood apple - விளாம்பழம்  Pine Apple  - புற்றுப்பழம்  Raspberry - முசுக்கட்டைப்பழம்  Mulberry - செந்தாழை

Jan 10, 2025

அஞ்சி காட் செனாப் பாலத்தின் சுமை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அஞ்சி காட் ரயில் பாலம் உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் ஸ்ரீநகர் ரயில் பாதையின் ஒரு பகுதியாகும்.ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தின் சுமை சோதனையை ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தினர்.அஞ்சி காட் ரயில் பாலம் உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் ஸ்ரீநகர் ரயில் பாதையின் ஒரு பகுதியாகும்.வரவிருக்கும் வாரங்களில் ரியாசி மற்றும் கத்ரா இடையே காணாமல் போன ரயில் பாதையை முடிப்பதன் மூலம், ஸ்ரீநகர்-ஜம்மு ரயில் பாதையை ஸ்ரீநகர் வரை ரயில் இயக்குவதற்கான பாதையை முழுமையாக செயல்படுத்த இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.சுமை சோதனையின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை, ரயில் பாலத்தின் மீது சரக்கு கேரியர் ரயில் நகர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில வாரங்களில், இந்த பாலம் மற்றும் கத்ரா,ரியாசி ரயில் பாதையில் பாதுகாப்பு நெறிமுறைகளில் முக்கிய கவனம் செலுத்தி பல சோதனைகள் நடத்தப்பட்டன.இந்த சரக்கு கேரியர் ரயில், கத்ரா,ரியாசி ரயில் பாதையில் வியாழக்கிழமை நகர்ந்ததாகவும், வெள்ளிக்கிழமை அஞ்சி காட் ரயில்வே பாலத்தின் மீது சென்றதாகவும், சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Jan 07, 2025

மழை காலத்தில் 'ஷாக்'கைத் தவிர்க்க….

மின் கம்பிகள் செல்லும் இடங்களுக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் வெட்டுவது ஆபத்து. வெட்டுவதற்கு முன், அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து, அந்த மின் பாதையில் மின்சாரத்தைத் துண்டித்த பிறகே மரங்களை வெட்ட வேண்டும்மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள் மற்றும் மின் இழுவைக் கம்பிகள் அருகில் செல்லக் கூடாது.தேவையில்லாமல் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்கவும். அவசியம் போக வேண்டும் என்றால், ரப்பர் காலுறைகளை அணிந்து செல்வது. பாதுகாப்பானது.மழை பெய்யும்போது, பழமையான வீடுகள் சிலவற்றில், சில  இடங்களில் சுவர்களில் ஈரம் கோர்த்துக் கொள்ளும். அதுபோன்ற இடங்களில் சுவிட்ச் மற்றும் பிளக் பாயின்ட்டுகளைப் பொருத்த- கூடாது. அங்கே இருக்கும் மின் சாதனங்களை மழை நாட்களில்  தொடாமல் தவிர்ப்பது நல்லது.வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனங்கள் எதிலாவது, 'ஷாக்  அடிப்பதை உணர்ந்தால், உடனடியாக உலர்ந்த ரப்பர் செருப்பை  கால்களில் அணிந்து, வீட்டுக்கு மின்சாரம் தரும் மெயின்  சுவிட்சை அணைக்கவும். இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, மிக்ஸி, கிரைண்டர்  கம்ப்யூட்டர் மற்றும் 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லதுவீடுகளில் மின் இணைப்பு பெறும்போதே, 'எர்த் வீக்கேஜ் ' வசதிகளைச் சரியாகச் செய்ய வேண்டும். மின் இணைப்பில்  'சர்க்யூட் பிரேக்கர்'களும் பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு  அறைக்கும் தனித்தனியாக, 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்த முடியும். ஏதாவது ஓர் அறையில் மின்கசிவு ஏற்பட்டால், இந்த  சர்க்யூட் பிரேக்கர்' அந்த அறைக்கான மின் இணைப்பை மட்டும்  துண்டித்து விடும்.வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு. 'எர்த்' இணைப்புடன்  கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலம் மின் இணைப்பு கொடுத்தால், 'ஷாக்'கைத் தவிர்க்கலாம். மழைபெய்யும்போது,வீட்டுஜன்னல்மற்றும்கதவுகளை மூடிவைக்கவேண்டும். ஈரமானகைகளோடுசுவிட்ச்களைப் போடவோ, நிறுத்தவோகூடாது.ஒரேபிளக்பாயின்ட்டில்பேன், மொபைல்போன்சார்ஜர்கம்ப்யூட்டர்என, எல்லாவற்றின்பிளக்கையும்சொருகக் கூடாது. மின்சாதனங்கள்குறிப்பிட்டஅளவுமின்சாரத்தையே தாங்கும்அளவுக்குவடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக பயன்பாடு, அவற்றை வெடிக்கச் செய்யும்.

Jan 07, 2025

இரவில் தூங்குவதற்கு என்னவெல்லாம் செய்யலாம்...

முதலில் காலையில் சீக்கிரம் எழும்பலாம் தானாகவே இரவில் தூக்கம் வந்து விடும்.மனதை ரிலாக்ஸ் செய்வதோடு உடலையும் ரிலாக்ஸ்செய்துகொள்ளுங்கள்.குளித்துவிட்டுதூங்குங்கள்.நீங்கள்தூங்கும்அறையில்வெளிச்சம்அதிகம்இல்லாதவாறுபார்த்துக்கொள்ளுங்கள்.புத்தகம் வாசியுங்கள், கண்டிப்பாக தூக்கம் வரும். சிலருக்கு புத்தகம் வாசித்தால் தூக்கம் வரும்.உங்கள் பிளேலிஸ்ட்(PLAYUST) ஐ தட்டிவிடுங்கள். 'முடிந்தவரை ஒரு மணி நேரம் தூங்கும் முன், தொலைபேசி, தொலைக்காட்சி, கணிப்பொறிகுறைந்த பட்சம் அனைத்து சாதனங்களையும் தவிர்த்து விடுதல் நல்லது.இவை எல்லாமே செய்தும் தூக்கம் வரவில்லை என்றால், வீட்டை ஒட்டடை எடுத்து சுத்தமாக பெருக்கி துடைத்து, பாத்திரங்களை கழுவி வையுங்கள்.எல்லாமே முடிக்க சுமார் 3-4 மணி நேரம் எடுக்கும். அசதியில் தானாக தூக்கம் வந்து விடும். காலையில் அம்மா , மனைவியிடம் பாராட்டுக்கள் குவியும்.

Jan 05, 2025

பழங்களின் தமிழ் பெயர்கள்

 Apple - குமளிப்பழம்Cherry - சேலாப்பழம்Kiwi - பசலிப்பழம்Lichee - விளச்சிப்பழம்Melon - வெள்ளரிப்பழம்Orange - கமலாப்பழம்Peach - குழிப்பேரிStrawberry - செம்புற்றுப்பழம் Wood apple - விளாம்பழம் Pine Apple  - புற்றுப்பழம் Raspberry - முசுக்கட்டைப்பழம் Mulberry - செந்தாழை

Jan 05, 2025

ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொத்து எழுதி வைக்காதீர்கள்.

பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள்.பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே பிள்ளைகளுக்கு சொத்து எழுதி வைக்காதீர்கள்.முதலில் சம்பாதித்து சொத்து சேர்க்க கற்றுக் கொடுங்கள்.சம்பாதித்த சொத்தினை பாதுகாக்கவும் கற்றுக் கொடுங்கள்.அதற்கு பின் நீங்கள் எழுதி வைத்தால் 'பத்திரமாக பராமரிப்பார்கள்'.அதைவிட சம்பாதித்துக்கொடுத்த உங்களையும் போற்றுவார்கள்.

Jan 03, 2025

அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர் ஈஎல் (NREL) ஆய்வகம்  சுற்றுச்சூழலைக் காக்கும் ஒரு புதிய பிசினை உருவாக்கியுள்ளது

காற்றாலை மின்சாரத் தயாரிப்பு என்பது சுற்றுச்சூழ லுக்குத் தீங்கு விளைவிக்காதது தான். என்றாலும் காற்றாலை விசிறிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை அல்ல. ராட்சத விசிறிகள் சேதமடைந்துவிட்டால் பெரும்பா லும் நிலங்களில் புதைக்கப்பட்டு சூழலை மாசாக்குகின்றன. இவற்றில் கார்பன் நார்களும், ஃபைபர் கண்ணாடியும் பயன்படுகின்றன. இவற்றை இணைக்க ஈபாக்ஸி பிசின் உபயோகப்படுகிறது.20 ஆண்டுகள் வேலை செய்து சேதமடைந்த விசிறியின் இறக்கை யிலிருந்து மேற்கண்ட பொருட் களைப் பிரித்தெடுப்பது என்பது சுலபமானதல்ல. அப்படியே பிரித்தெடுத்தாலும் எடுக்கப்பட்ட கார்பன் நார்கள் மறு பயன்பாட்டிற்கு உதவாது. இதைச் சரிசெய்ய அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர் ஈஎல் (NREL) ஆய்வகம் ஒரு புதிய பிசினை உருவாக்கியுள்ளது. இதன் பெயர்பெகான்(PECAN).உண்ணப்படாத சர்க்கரை,வீணாக்கப்பட்ட க்ளிசரால் ஆகிய வற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பெகான் பிசின் எந்த வகையிலும் இயற்கை, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கா தது. இதைக் கொண்டு 29.5 அடி நீளமுள்ள இறக்கையைச் செய்து சோதித்துப் பார்த்தனர். பழைய இறக்கைகள் போலவே இதுவும் நல்ல வலிமை கொண்டிருந்தது. கடுமையான தட்பவெப்ப சூழலையும் தாக்குப் பிடித்தது. இதன் பிறகு இறக்கையை வெட்டிச் சில வேதி வினைகளுக்கு உட்படுத்தினர். இதில் பயன்பட்ட கார்பன் நார்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சேதமின்றிப் பிரித்தெடுக்கப்பட் டன. அவை மறுபயன்பாட்டிற்கு உரிய தரத்துடன் இருந்தன. இந்தப் புதிய பிசினை இனி காற்றாலைகளில் பயன்படுத்துவதன் வாயிலாக சுற்றுச்சூழலைக் காக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Jan 01, 2025

நீங்கள் நீங்களாகவே இருப்பது சால சிறந்தது

தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள நினைக்காதவர்களுக்காக, உங்களை மாற்றிக் கொண்டு,உங்களின் நேரங்களையும்,உங்களின் சொந்த நல்ல குணங்களையும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.மாற்றவும் வேண்டாம். மாறவும் வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருப்பதே சால சிறந்தது என்று அவர்கள் உங்களுக்கு உணர்த்தும் முன்பே விழித்துக் கொள்ளுங்கள். இதை அனுபவிக்கும் முன் இந்த அறிவுரையை.மனதில் கொள்ளுங்கள். யாரையும் உங்களுக்காக மாற்ற வேண்டும் என்றோ ,உங்களை போல் மாற்ற வேண்டும் என்றோ. நினைத்து விடாதீர்கள்.

1 2 ... 93 94 95 96 97 98 99 100 101 102

AD's



More News