டெல்லி போராட்டம்: அமெரிக்கா குறித்து எழுந்த சர்ச்சை.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதற்கிடையில், போராட்டத்திற்கு முன்பாக மத்திய டெல்லி மற்றும் நாடாளுமன்றம் சுற்றுவட்டாரத்தில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.
0
Leave a Reply