25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 26, 2025

'பைட்சாட்' (BITCHAT) புதிய செயலி  அறிமுகம் இண்டர்நெட் இல்லாமல் CHAT செய்ய முடியும்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உட்படப் பல சாட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் இருந்தாலும், அவை செயல்படுவதற்கு இன்டர்நெட் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இன்டர்நெட் இல்லாமல் தகவல்களை பகிர முடியும் என்ற வகையில் ஒரு செயலியை, ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். இதனால், இனிமேல் இன்டர்நெட் இல்லாமலேயே சாட் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.இன்டர்நெட் சேவை இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில்'பைட்சாட்'(BITCHAT) என்ற புதிய செயலியை ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சங்கிலி தொடர் போல பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இயங்குவதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்டர்நெட் கிடைக்காத நேரங்களில் அல்லது இன்டர்நெட் செயல்படாத நேரங்களில் பயன்படுத்த ஏற்ற வகையில் இருப்பதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'பைட்சாட்' என்ற புதிய செயலி தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Jul 26, 2025

சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI!

தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே AIதொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகியுள்ளது ஓபன் AI நிறுவனம்.சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் உலகில்AI தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுOpenAI. சாட் ஜிபிடி வருகையை தொடர்ந்து கூகிளும்GEMINI,AI உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் சீனாவின்DeepSeek,GWEN,AI என பல  AI கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளும் பல துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.சாட்ஜிபிடியால் ஏற்கனவே கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூகிள் தேடுபொறியை விட பலரும் சாட் ஜிபிடியில் வெறும் வாய்ஸ் கமெண்டில் கேட்டாலே அது தகவல்களை அள்ளி வழங்குவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. மேலும் AI திரட்டி தரும் தகவல்களில் ஏற்படும் தகவல் பிழையை ப்ரவுசர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் Deep Search மூலமாக தளங்களின் தரவுகளையும் AI க்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.இந்நிலையில்தான் அடுத்த கட்டமாகAI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வெப் ப்ரவுசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஓபன் AI நிறுவனம். அதற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய AI ப்ரவுசர் பயன்பாட்டிற்கு வரும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது.இதனால் கூகிள் சூதானமாக செயல்பட்டு தனது ப்ரவுசருடனே ஜெமினியை Integrate செய்துள்ளது. ப்ரவுசரிலேயே DiveDeeperinAI,Mode மூலமாக ஜெமினிக்கு மாறி ப்ரவுசர் போல அல்லாமல் AI எக்ஸ்பீரியன்ஸில் தகவல்களை பெற முடியும். ஆனால் அதையும் ஓபன் AI சிந்தித்தே பல புதிய அம்சங்களை தனது ப்ரவுசரில் அமைத்திருக்கும் என்கிறார்கள் AI தொழில்நுட்ப ஆர்வலர்கள்.

Jul 25, 2025

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மதுரையைச் சேர்ந்த விஜய் குமார்.

மதுரையைச் சேர்ந்த விஜய் குமார், நியூயார்க்கில் "ஜேம்ஸ் பியர்ட் விருதை - உணவு உலகின் ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய உணவக சமையல்காரர் ஆவார். அவர் நியூயார்க்கின் செம்மாலில் தலைமை சமையல்காரர்.

Jul 25, 2025

குரங்கு பொம்மைகளின் பெயர்கள்.

தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்கிற கருத்துக்களை வலியுறுத்துகிற 3 குரங்கு பொம்மைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த பொம்மைகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கக் கூடிய பெயர்களை அறிந்து கொள்வோம்!தீயதை பார்க்காதே என்று கண்களை மூடியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிசாரு. தீயதை கேட்காதே என்று காதுகளை மூடிக் கொண்டிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிகாசாரு. தீயதை பேசாதே என்று வாயை பொத்தியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மசாரு. 

Jul 24, 2025

நல்லெண்ணெய், வெண்ணெய் எது நல்லது ?

நாம் சமையலுக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவையே பிரதானமாக இருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் எண்ணெயை விட அதிகமாக வெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் வெண்ணெய் தான் பல நேரங்களில் உணவின் சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைஉள்ளிட்ட சர்வதேச பல் கலைகள் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வை  மேற்கொண்டன.2,21,054 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.அவர்களுடைய 30 ஆண்டு மருத்துவ அறிக்கை பரிசோ திக்கப்பட்டது. அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்தியது வெண்ணெயா , எண்ணெயா என்பதும் கேட்டு அறியப்பட்டது.தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் யார் யாரெல்லாம் ஆலிவ், சோயா பீன்ஸ் முதலியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு 16 சதவீதம் ணந்து குறைவாக இருப்பது தெரிய வந்தது.அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன் படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு  12 சதவீதம் அதிகமாக  இருப்பது தெரிய வந்தது.எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதி லாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் பலவிதநோய்களிலிருந்து விடுபடலாம். இதனால் நமது ஆயுள் 17 சதவீதம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated fat) உள்ளது. வெண்ணெயில் நிறைவுற்றகொழுப்புகள் (Saturated fats) இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட் ரால் அளவை அதிகரிக்கும். இதுவே இதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

Jul 23, 2025

சனியில்  உள்ளபுதிய  நிலவுகள்.

பிரபஞ்சம் மிகவும் அதிசயமானது. நமது சூரியக்  குடும்பத்தில் இருக்கின்ற எண்ணற்ற விஷயங்களையே இன்னும் முழுதாகக் கண்டுபிடிக்கப்பட வில்லை. பூமிக்கு இருக்கும் நிலவு ஒன்றுதான். நமது சூரிய குடும்பத்திலேயே மிக அதிகமான நிலவுகளைக் கொண்ட கிரகம் சனி. சமீபத்தில் சனி கோளைச் சுற்றி வரும் 128 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தைவான், கனடா, அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தப் புதிய கோள்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்வதேச விண்வெளி ஒன்றியம் இந்தக் கண்டுபிடிப்பை மார்ச் 11ஆம் தேதி அங்கீகரித்துள்ளது.கனடா பிரான்ஸ் ஹவாய் டெலஸ்கோப் (சிஎஃப்ஹச்டி) எனும் தொலைநோக்கி கொண்டு சனிக்கோளை 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த ஆய்வில் 62 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல் அடுத்தடுத்த ஆண்டு களிலும் தொடர்ந்து சனிக்கோள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளில் சில மிகவும் சிறியவை. சில கிலோமீட்டர் மட்டுமே அகலம் கொண்டவை. இவை  பெரிய நிலவுகள் மோதிக் கொள்ளும்போது உடைந்து உருவான துகள்கள். இந்த ஆய்வு முடிவில் சனிக் கோளுக்கு மொத்தம் 274 நிலவுகள் உள்ளன என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Jul 22, 2025

உடல் செல்கள் ஆரோக்கியமாக இயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை மேற்கொண்ட ஆய் வில், நம் உடல்செல்கள்ஆரோக்கியமாகஇயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பொரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.

Jul 21, 2025

வரிக்குதிரைகளுக்கு உதவும்  ஒட்டைச்சிவிங்கிகள் .

இயற்கையில் ஒவ்வோர் உயிரும் மற்றோர் உயிரைச் சார்ந்து தான் வாழ்கிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். விலங்குகள், தாவரங்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. இதேபோல இரண்டு வெவ்வேறு விலங்குகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்ளும்.சமீபத்தில் வரிக்குதிரைகள் ஒட்டைச்சிவிங்கி களுக்கு இடையே இப்படியான நட்பு இருப்பது முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள புல்வெளிகளில் வாழும் வரிக்குதிரைகள் இடையே ஓர் ஆய்வை உயிரியலாளர்கள் மேற் கொண்டார்கள். ஆறு வரிக்குதிரைகளின் கழுத்துகளில் வீடியோ கேமரா வைக்கட்டி வைத்தார்கள். இதன்மூலம் அவை எங்கெல்லாம் செல்கின்றன, எந்த விலங்குகளுடன் எல்லாம் ஒருங்கிணைந்து வாழ்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகளுடன் இணைந்து வரிக்குதிரைகள் புல் மேய்வது, தண்ணீர் குடிப்பதுமாக இருந்தது தெரிய வந்தது.ஆனால் இவற்றை விட அதிகமான நேரத்தை ஓட் டகச் சிவிங்கிகளுடன் தான் வரிக்குதிரைகள் செலவிட்டுள்ளன.ஏன் இந்த இரண்டு விலங்குகளுக்கு இடையே மட்டும் இப்படியான நெருக்கம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. அதாவது ஒட்ட கச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் துாரத்தில் வரும் ஆபத்தை முதலி லேயே கண்டு உணர்ந்து எச்சரித்து விடுகின்றன.அதேபோல் வரிக் குதிரைகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதால், எதிரி விலங்குகள் அவ்வளவு சுலபமாகத் தாக்க முற்படுவதில்லை.இதனால் இவற்றுடன் சேர்ந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கிகளும் பாதுகாப்பு பெறுகின்றன. இந்த வகையில் இரண்டு விலங்குகளும் ஒன்றுக்கொன்று உதவி வாழ்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

Jul 21, 2025

இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் ஒல்லியான கார் 'பிளான் பான்டா', 

உலகின் மிக ஒல்லியான கார் இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் 'பிளான் பான்டா', சாதாரண கார்களை போல நான்கு சக்கரங்கள் உள்ளன. ஆனால் இதன் அகலம் வெறும் 50 செ.மீ., மட்டுமே. ஒருவர் மட்டுமே உட்கார்ந்து, அவரே ஓட்டிச் செல்லவும் வேண்டும். ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் கதவு உள்ளது. பின்புறம் சிறிய இடம் மட்டுமே உள்ளது. மின்சாரத்தில் இயங்கும். இதன் எடை 264 கிலோ. உயரம் 145 செ.மீ. நீளம் 340 செ.மீ. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் தான் செல்லும். இது விற்பனைக்கு அல்ல என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jul 19, 2025

14 நாடுகள் வழியாக செல்லும்,பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான சாலை NH  44.

இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலைNH  44 மிக நீளமானது, மொத்த நீளம் சுமார்4,112 கிலோமீட்டர்கள். இருப்பினும், உலகின் மிக நீளமான சாலையைப் பற்றிப் பேசும்போது,அதன் நீளம் மிக அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு500 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும், அதை முடிக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாகும். இந்தச் சாலை, ஒரு யூடர்ன் கூட இல்லாமல் மொத்தம்14 நாடுகளைக் கடந்து செல்கிறது. பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும், இந்த சாலை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாதை வட அமெரிக்காவை தென் அமெரிக்காவுடன் இணைக்கிறது. இது வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ப்ருதோ விரிகுடாவில் தொடங்கி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் முடிகிறது. ஒட்டுமொத்தமாக, இதன் நீளம் 30,600 கிலோமீட்டர்கள் அல்லது 19,000 மைல்கள்..பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை என்பது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்தமாலா, பனாமா, கொலம்பியா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட மொத்தம் 14 நாடுகளின் வழியாகச் செல்லும் ஒரு சாலையாகும். இது வெறும் சாலை அல்ல; இது பல்வேறு நாடுகளின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் இணைக்கும் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சாரப் பயணமாகும். இந்த நெடுஞ்சாலையைப் பராமரிப்பது அமெரிக்காவின் பொறுப்பு மட்டுமல்ல; அது கடந்து செல்லும்14 நாடுகளும் அதன் பராமரிப்பில் பங்கேற்கின்றன.இந்தப் பாதையில் பயணிக்கும்போது,எல்லா வகையான இயற்கைக் காட்சிகளையும், சில சமயங்களில் பாலைவனங்களையும், சில சமயங்களில் உயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும், சில சமயங்களில் கடலின் கரைகளையும் காண முடிகிறது. பயணம் மிகவும் அழகாக இருப்பதால், பயணம் எப்படி செல்கிறது என்பதை நீங்கள் உணரவே மாட்டீர்கள்பான்..அமெரிக்க நெடுஞ்சாலையின் கட்டுமானம்1920களின் முற்பகுதியில் தொடங்கியது. அமெரிக்காவில் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். 1937 ஆம் ஆண்டில், இந்த சாலையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக 14 நாடுகளும் பரஸ்பர உடன்பாட்டை எட்டின, இறுதியாக இது 1960 இல் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

1 2 ... 100 101 102 103 104 105 106 ... 136 137

AD's



More News