ஸ்வீட் கார்ன் பிரியாணி.
தேவையான பொருட்கள் -
2 கப் பாசுமதி அரிசி,
ஒன்றரை கப் ஸ்வீட் கார்ன் கர்னல்கள்,
பட்டை, கிராம்பு ஏலக்காய்,
1 வெங்காயம்,1தக்காளி,
1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
1 டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலாத்தூள்,
1டீஸ்பூன் தனியாத்தூள்,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,
1/4 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,
தேவையான அளவு - உப்பு, தேங்காய் பால்
1டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு,
4டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்,
மல்லி இலை,புதினா இலை.
செய்முறை :
ஸ்வீட் கார்ன் மேல் உள்ள சருகை உரித்து,பின் சோளத்தை பிரித்து தயாராகவைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி, புதினா இலைகளை நறுக்கிவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, சூடானதும் நெய் சேர்த்து, சூடானதும்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை,ஸ்டார், முந்திரி பருப்பு சேர்த்துவறுத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்குவதக்கவும்.
பச்சை வாசம் போனதும், நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாயை சேர்த்துவதக்கவும்.
பின்னர் மேலே கொடுத்துள்ள மசாலா தூள் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் பிரித்து வைத்துள்ள சோளத்தை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் தயாராக வைத்துள்ள தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர்சேர்த்து கலந்து விடவும்.
தேவையான அளவு கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துமிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி சாதம் தயாரானதும் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து இறக்கினால்ஸ்வீட் கார்ன் பிரியாணி தயார்.
கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து ஒரு பரிமாறும் தட்டில்சேர்க்கவும். ஆனியன் தக்காளி ரைதாவுடன் சேர்த்து பரிமாறவும்.இப்போதுமிகவும் சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் பிரியாணி சுவைக்கத் தயார்.
0
Leave a Reply