25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 30, 2025

கடலிலே கரையக்கூடிய பிளாஸ்டிக்

கடலிலேகரையக்கூடிய பிளாஸ்டிக்கை ஜப்பானைச் சேர்ந்த ரிக்கென் ஆய்வு மைய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.உணவுப் பொருட்களில் பயன்படும் சோடியம் ஹெக்ஸா மெட்டா பாஸ் பேட் உரத்தில் பயன்படும். குவானிடியம் அயனிகள் இரண்டையும் இணைத்து ஒரு புதுக் கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை வேண்டிய வடிவில் திரட்டி, தேவைப்பட்ட பொருட்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்தக் கலவையைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் அப்படியே பிளாஸ்டிக் போலவே இருக்கும். எளிதில் தீப்பிடிக்காது. நிறமற்றதாக, ஒளிபுகக் கூடியதாக இருக்கும்.உப்புத் தண்ணீரில் போட்டு விட்டால் எட்டரை மணி நேரத்தில் கரைந்துவிடும். எனவே இது வழக்கமான பிளாஸ்டிக்கை விட மிகவும் நல்லது.இந்தக் கலவையால் செய்யப்பட்ட குவளைகள் அல்லது தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் ஒட்டாத வகையில் சில வேதிப் பொருட்களைப்பூசி விடுவார்கள். இதனால், இவற்றில் ஊற்றப்படும் தண்ணீர் இவற்றைப் பாதிக் காது. இவற்றைப் பயன்படுத் தித் துாக்கி எறியும்போது லேசாகக் கீறிவிட்டால் போதும். இந்தக் கீறல் வழியாகக் கடலின் உப்பு நீர் உள்ளே சென்று குவளையைக் கரைத்து விடும்.அதேபோல இவற்றை நிலத்தில் போட்டாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத் தாது. உப்புத் தண்ணீர் பட்டுக் கரைந்து நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றை வெளிப்படுத்தும்இவை இரண்டும் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் என்பதால் சுற்றுச் சூழலுக்கு நன்மையே. விரைவில் இவற்றாலான பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

May 30, 2025

IBM நிறுவனத்தில் ஏ.ஐ. (AI) மூலமாகவே பணியமர்த்தல் நடைபெறுவதால்,HR வேலைக்கு ஆட்கள்தேவைப்படுவதில்லை.

ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதில் பெரும்பாலும் HR துறையைச் சார்ந்தவர்களே பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கவோ, அல்லது ஊழியரை நீக்கவோ HRன் முக்கிய பணி என்ற நிலையில், "நான் HRஐயே ஐபிஎம் நிறுவனம் வேலைவிட்டு நீக்கியுள்ளது" என கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 200க்கும் மேற்பட்ட HRகளை கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்த ஐபிஎம் நிறுவனம், தற்போது மேலும் HR துறையை சேர்ந்தவர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.தற்போது ஏ.ஐ. (AI) மூலமாகவே பெரும்பாலும் பணியமர்த்தல் நடைபெறுவதால், HR வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதில்லை என்றும், அதனால் தான் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சில ஆண்டுகளில், முழுக்க முழுக்க HR துறையை ஏ.ஐ. ஆக்கிரமித்து விடும் என கூறப்படுவது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 30, 2025

100 வருடப் பழமையான பூஷ்பபந்த அரண்மனையை ஐந்து நட்சத்திர  ஹோட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்

திரிபுராவில் 100 வருடப் பழமையான பூஷ்பபந்த அரண்மனை ஐந்து நட்சத்திர  ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட்   முன்னெடுக்கிறது.பழைய காலத்தில் அரசர்கள் நாட்டை ஆட்சி செய்த போது, அவர்களதுஅரண்மனைகள் ராஜா-ராணிகளின் ஆடம்பர மாளிகைகளாக இருந்தன. அந்த அரண்மனைகள்  இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்  மாபெரும் கட்டிடங்களின் அடையாளமாக உள்ளன.இந்த ஹோட்டல் தயாராகும் போது, அதை "தாஜ் பூஷ்பபந்த அரண்மனை" என அழைக்க வேண்டும் என்று , இந்த மாற்றத்திற்கு முன், திரிபுர அரசு டாடா குழுமத்துடன் வ்ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்தது. இதில் 100 அறைகள் மற்றும் 5 ரீகல் ஸ்டைல் சூட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அரண்மனையை 1917-ஆம் ஆண்டு மஹாராஜா பிரேந்திர கிஷோர் மனிக்யா பகதூர் கட்டியுள்ளார். இதை குஞ்ஜாபான் அரண்மனையாகவும் அறியப்படும். இது பல ஆண்டுகளாக அரச குடும்பவாழ்விடம் ஆக இருந்தது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் இது ஆளுநரின் இல்லமாக பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2018-ல் ராஜ்பவனத்தை வேறு இடத்திற்கு மாற்றியதும், இந்த அரண்மனை பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 5 நட்சத்திர ஓட்டலாக மாறியுள்ளது.

May 29, 2025

நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது.

பழங்களைச் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியதிற்கு மிகவும் நல்லது. பழங்களில் உள்ள சில சத்துகளைத் தனியாகப் பிரித்து அவற்றை மருந்தாகப் பயன் படுத்த முடியும், அவற்றுக் கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், பிரேசில் நாட்டில், உள்ள எஸ்.ஓ.ஆர்.சி., என்கின்ற ஆய்வு மையம் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வு வாயிலாக, பலவிதமான நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த நார்ச்சத்து பழங்கள் காய்கறிகளின் செல் சுவர்களில் நிறைந்துள்ளன. பப்பாளிப் பழம், தாட் பூட் எனப்படுகின்ற பேஷன் பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகமாக இருக்கிறது.பப்பாளிப்பழம் பழுப்பதற்கு முன்பாக இந்த நார்ச்சத்து அதில் அதிக அளவில் இருக்கும். பழுத்துவிட்டால் இதனுடைய தன்மை மாறி விடும். எனவே ஆய்வாளர்கள் பப்பாளியை விடுத்து ஆரஞ்சு, பேஷன் பழங்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும்  இடையே இருக்கின்ற வெள்ளைப் பகுதியில் பெக்டின் நிறைந்துள்ளது.இதை விலங்குகள் மீது பரிசோதித்தபோது, அவற்றின் உடலில் நல்ல மாற்றம் தந்தது. வருங்காலத்தில் குடல்புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பொதுவாக ஆரஞ்சு முதலிய பழங்களில் சாறு எடுக்கும் போது சதைப் பகுதி வீணாகத் துாக்கி எறியப்படுகிறது. இதிலிருந்து பெக்டின் நிறைந்த வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து மாவு போல் செய்யலாம்.எனவே மருந்தாக மட்டும் இன்றி, இன்று நாம் பயன் படுத்துகின்ற புரோட்டின் பவுடர் போல் இந்த பெக்டின் மாவைப் பயன்படுத்த முடியும்.

May 29, 2025

சூப்பர் டார்லிங்ஸ் பறவை

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் ஒரு பறவை சூப்பர் டார்லிங்ஸ். பொதுவாக 13 முதல் 41 பறவைகள் வரை குழுவாக வாழும். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இவை மனிதர்கள் போலவே நண்பர்களை உருவாக்கிக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

May 28, 2025

'மைக்ரோகிரீன்' மற்றும் 'சூப்பர் புட் உணவு வகைகள்

நெருப்பை கண்டறியும் முன் காடுகளில் கிடைத்த பழங்கள், கிழங்குகளை உண்டு உயிர் வாழ்ந்து வலிமையான உடலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது உலகின் பல நாடுகளிலும் மனிதர்கள் அதேபோன்ற ஒரு உணவுமுறைக்கு திரும்பி இருக்கின்றனர். இதனை 'மைக்ரோகிரீன்' மற்றும் 'சூப்பர் புட் என அழைக்கின்றனர்.இதில் மைக்ரோகிரீன் என்பது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் மூலிகை தாவரங்களின் விதைகளை முளைப்பு செய்த நிலையில் உருவாகும் மென்மையான உண்ணக்கூடிய கீரைகள் ஆகும். மைக்ரோ கிரீன் முறையில் முளைக்க வைக்கப்படும் கீரைகள் பெரும்பாலும் இருட்டில் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட விதைகள் முளைப்பது மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. முளைத்து வரும் தளிர் இலைகள் உணவாக பயன்படுகிறது.ஒரு விதை முளைக்கும் போது உருவாகும் தளிர் இலையில் ஏராளமான நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நுண் சத்துக்கள் இருக்கின்றன. இதனை சமைக்காமல் பச்சையாக உண்ணும் போது இந்த சத்துக்கள் முழுமையாக உடலில் சேர்ந்து உடலை வலுப்படுத்துகிறது என கூறப்படுகிறது.இதனால் தற்போது மைக்ரோ கிரீன் பயிர் வளர்ப்பு மிகவும் பிரபல மாகி வருகிறது., மைக்ரோ கிரீன் தளிர் உற்பத்திக்கு குறிப்பிட்ட வகை காய்கறிகள் தான் உதவுகின்றன. காய்கறி இனங்களில் முள்ளங்கி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் வெள்ளரி ஆகியவையும் அடங்கும்.தானியங்களில் பார்லி, ஓட்ஸ், கோதுமை, சோளம் போன்றவையும், பயறுகளில் கொண்டைக்கடலை மற்றும் வெந்தயம் போன்றவையும் பயன்படுகின்றன.அதேவேளையில் தக்காளி, மிளகு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற சில காய்கறி, பயிர்கள் மைக்ரோ கிரீன்களை உற்பத்தி செய்ய ஏற்றவை அல்ல. இந்த மைக்ரோ கிரீன் முறை சிறிய இடத்தில் சத்தான, செலவில்லாத உணவு விளைவிக்கும் வேளாண்மை நுட்பமாக பரவி வருகிறது. 

May 28, 2025

வெங்காயம்தாவரங்களில் இருக்கும் நுண்ணியசெல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸ்’.

சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றக்கூடியவை சூரிய மின் தகடுகள். இவை நீண்ட நேரம்சூரிய  ஓளியில் வைக்கப்படுகின்றன. அப்போது சூரிய ஒளியுடன் சேர்ந்து புற ஊதாக் கதிர்களும் இவற்றின் மீது படுகின்றன. இதனால் இவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. எனவே சூரிய ஒளியை மட்டும் அனுமதித்து புறஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும்படியான படலங்களைமின் தகடுகள் மீது பொருத்த வேண்டி உள்ளது. தற்போது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் படலங்கள் தான் பயன்படுகின்றன." ஆனால், இவற்றின் தயாரிப்பு, பயன்பாடுஇரண்டுமே சுற்றுச்சூழலுக்கு தீங்கானவை. எனவே சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத படலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தசில முக்கியப்பல்கலைக்கழகங்கள் இதற்குத் தீர்வு கண்டுள்ளன. தாவரங்களில் இருக்கும் நுண்ணியசெல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸை' படலமாகப் பயன்படுத்தலாம். ஆனால், இதை அப்படியே பயன்படுத்த இயலாது.எனவே, வெங்காயத்தாளில் இருந்து அந் தோசயனின் என்கின்ற ஒருவித சாயத்தை எடுத்தனர். இதை நானோ செல்லுலோஸ் உடன் கலந்து, ஒரு படலத்தை உருவாக்கினர்.இதைப் புற ஊதாக் கதிர்களை வெளியிடக்கூடிய விளக்குக்கு முன்னால், 1000 மணி நேரம் வைத்துச் சோதித்தார்கள். இந்தப் படலம் 99.9 சதவீதக் கதிர்களைத் தடுத்து நிறுத்தியது.

May 28, 2025

புதுவகையான தாவரம் உல்லி டெவில் (Wooly devil) 

அமெரிக் காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் முற்றிலும் புதுவகையான தாவரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் பச்சை நிற இலைகள் மீது கம்பளி போன்ற முடிகள் மூடியுள்ளன. எனவே இதற்கு உல்லி டெவில் (Wooly devil) என்று பெயரிட்டுள்ளனர்.

May 27, 2025

தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது.

ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, அதாவது, மே, 24ம் தேதியே பருவ மழை துவங்கி உள்ளது. கடைசியாக, 2009 மே 23ல், கேர ளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியது. தற்போது, 16 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. நம் நாட்டின் விவசாயத்துக்கு தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாயிலாகவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக மழைப் பொழிவு கிடைக்கிறது. இந்த பருவ மழையால், மக்கள் தொகையில், 42.3 சதவீதம் பேர் பயனடைகின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 18.2 சதவீத பங்களிப்பை இந்த பருவமழை வழங்குகிறது.அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவும், குடிநீர் மற்றும் மின் பயன்பாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தென் மேற்கு பருவமழை உதவுகிறது.  

May 27, 2025

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் உணவுகள்.

பச்சை நிறக்காய்கறிகள் எப்பொழுதும் உடலுக்கு நல்லது. அந்தவரிசையில் இருக்கும் வெள்ளரிக் காயில்96 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. வைட்ட மின்கள் கே, சி, மெக்னீசி யம் ஆகியவையும் உள்ளன. இதை சிறிய துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முகம் மற்றும் தோலின் வறட்சியை தடுத்து பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத் திருக்க உதவி புரியும்.அதிக நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று, தர்பூசணி. இதில்92 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதை அப்படியே கடித்து சாப்பிடுவது நல்லது. இதை கூழாக்கி குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. உணவு கட்டுப் பாட்டில் இருப்பவர்களும் இதை உண்டு மகிழலாம்.வெயில் நேரத்தில் குழந்தைகளுக்கு தாகம் அதிகமாக எடுக்கும். உடனே குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் ரசாயனம் கலந்த பானங்களை கொடுக்காமல் இயற்கையின் அற்புதபானமான இளநீரை கொடுங்கள். இதில்95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம், இரும்புச். சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. காலை நேரத்தில் இளநீரை பருகும்போது அன்றைய தினத்திற் கான அதிக ஆற்றல் கிடைக்கும். செரிமானத்தையும் எளிதாக் கும். ரத்தத்தை சுத்திகரித்தல் உள்பட பல நன்மைகளும் கிடைக்கும்.பனை மரத்தில் இருந்து பெறப்படும்ஐஸ் ஆப்பிள்' என்ற நுங்கு அதிக நீர்ச்சத்து நிறைந்தது. கோடை காலத்தில் மட்டுமே அதிகமாக கிடைக்கும். இந்த நுங்கு உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.அதன் மேல் இருக்கும் வெள்ளை நிறத்தோலுடன் சேர்த்து சாப்பிடுவதே நல்லது. இது வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்யும். இதில் சோடியம், பொட்டாசியம், தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.எலுமிச்சையில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. இதை பானமாக தயார் செய்து குழந்தை களுக்கு கொடுத்தால் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படுவார்கள். இது அவர்களை நீரிழப்பு நோய்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திட உதவி செய்கிறது.பழங்களை போல கீரைகளி லும் அதிக நீர்ச்சத்து உள்ளது. அந்தவகையில் சிவரிக்கீரை எனப் படும் செலரி95 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள முடியும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற் றும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும்இதில் நிறைந்துள்ளன.பப்பாளி, முலாம் பழம், பேரிக்காய் போன்ற பழங்களும் வெயிலில் இருந்து காத்து நீர்ச்சத்து நிறைந்தவர்களாக வைத்து கொள்ள உதவுகின்றன. வெயில் காலத்தில் மட்டும் கிடைக்கும் பதனீர்,மாம்பழம். முந்திரிபழம்(கொல்லாம் பழம்) போன்றவற்றை மறக்காமல் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து நீங்களும் சாப்பி டுங்கள். வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமாக வும் கோடையை கொண்டாடுங்கள்.

1 2 ... 103 104 105 106 107 108 109 ... 131 132

AD's



More News