25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


IBM நிறுவனத்தில் ஏ.ஐ. (AI) மூலமாகவே பணியமர்த்தல் நடைபெறுவதால்,HR வேலைக்கு ஆட்கள்தேவைப்படுவதில்லை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

IBM நிறுவனத்தில் ஏ.ஐ. (AI) மூலமாகவே பணியமர்த்தல் நடைபெறுவதால்,HR வேலைக்கு ஆட்கள்தேவைப்படுவதில்லை.

ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதில் பெரும்பாலும் HR துறையைச் சார்ந்தவர்களே பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கவோ, அல்லது ஊழியரை நீக்கவோ HRன் முக்கிய பணி என்ற நிலையில், "நான் HRஐயே ஐபிஎம் நிறுவனம் வேலைவிட்டு நீக்கியுள்ளது" என கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஏற்கனவே, 200க்கும் மேற்பட்ட HRகளை கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்த ஐபிஎம் நிறுவனம், தற்போது மேலும் HR துறையை சேர்ந்தவர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.தற்போது ஏ.ஐ. (AI) மூலமாகவே பெரும்பாலும் பணியமர்த்தல் நடைபெறுவதால், HR வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதில்லை என்றும், அதனால் தான் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சில ஆண்டுகளில், முழுக்க முழுக்க HR துறையை ஏ.ஐ. ஆக்கிரமித்து விடும் என கூறப்படுவது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News