25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழகத் தேர்வில் முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழகத் தேர்வில் முதலிடம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வில் கடந்த கல்வியாண்டில் மூன்று பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வில் தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி முதுகலை வரலாறு மாணவி இந்துஜா, முதுகலை வணிகவியல் மாணவி  காயத்ரி மற்றும் இளங்கலைக்  கணிதவியல் மாணவி பிரகதீஸ்வரி ஆகியோருக்கு பல்கலைக்கழகத் தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக மேதகு ஆளுநர் ஆர் என். ரவி அவர்கள்  சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  இளங்கலைக் கணிதவியல் பாடப் பிரிவை சேர்ந்த பாண்டி பிரியா, மாலினி மற்றும் நித்திய தர்ஷினி, இளங்கலை வணிகவியல் பிரிவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, இளங்கலை இயற்பியல் பிரிவைச் சேர்ந்த ஜெபக்கனி, வணிக நிர்வாகவியல் பிரிவு சேர்ந்த சுபலட்சுமி, நீலவேணி ஆகியோரும் அடுத்த தர வரிசை பட்டியலில் இடம் பெற்று தமிழக ஆளுநர் அவர்களிடம் சான்றுகளை பெற்றுக் கொண்டனர். பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளைக்  கல்லூரி ஆட்சி மன்றக்  குழுச் செயலாளர் திரு கே.ஜி. பிரகாஷ்,  கல்லூரி முதல்வர் முனைவர் சி. ராமகிருஷ்ணன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். ராமராஜ், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார்கள்.

விருதுபெற்ற மாணவிகளை இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News