25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது.

பழங்களைச் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியதிற்கு மிகவும் நல்லது. பழங்களில் உள்ள சில சத்துகளைத் தனியாகப் பிரித்து அவற்றை மருந்தாகப் பயன் படுத்த முடியும், அவற்றுக் கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், பிரேசில் நாட்டில், உள்ள எஸ்.ஓ.ஆர்.சி., என்கின்ற ஆய்வு மையம் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு வாயிலாக, பலவிதமான நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த நார்ச்சத்து பழங்கள் காய்கறிகளின் செல் சுவர்களில் நிறைந்துள்ளன. பப்பாளிப் பழம், தாட் பூட் எனப்படுகின்ற பேஷன் பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகமாக இருக்கிறது.

பப்பாளிப்பழம் பழுப்பதற்கு முன்பாக இந்த நார்ச்சத்து அதில் அதிக அளவில் இருக்கும். பழுத்துவிட்டால் இதனுடைய தன்மை மாறி விடும். எனவே ஆய்வாளர்கள் பப்பாளியை விடுத்து ஆரஞ்சு, பேஷன் பழங்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும்  இடையே இருக்கின்ற வெள்ளைப் பகுதியில் பெக்டின் நிறைந்துள்ளது.

இதை விலங்குகள் மீது பரிசோதித்தபோது, அவற்றின் உடலில் நல்ல மாற்றம் தந்தது. வருங்காலத்தில் குடல்புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பொதுவாக ஆரஞ்சு முதலிய பழங்களில் சாறு எடுக்கும் போது சதைப் பகுதி வீணாகத் துாக்கி எறியப்படுகிறது. இதிலிருந்து பெக்டின் நிறைந்த வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து மாவு போல் செய்யலாம்.எனவே மருந்தாக மட்டும் இன்றி, இன்று நாம் பயன் படுத்துகின்ற புரோட்டின் பவுடர் போல் இந்த பெக்டின் மாவைப் பயன்படுத்த முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News