25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கடலிலே கரையக்கூடிய பிளாஸ்டிக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடலிலே கரையக்கூடிய பிளாஸ்டிக்

கடலிலேகரையக்கூடிய பிளாஸ்டிக்கை ஜப்பானைச் சேர்ந்த ரிக்கென் ஆய்வு மைய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.உணவுப் பொருட்களில் பயன்படும் சோடியம் ஹெக்ஸா மெட்டா பாஸ் பேட் உரத்தில் பயன்படும். குவானிடியம் அயனிகள் இரண்டையும் இணைத்து ஒரு புதுக் கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை வேண்டிய வடிவில் திரட்டி, தேவைப்பட்ட பொருட்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கலவையைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் அப்படியே பிளாஸ்டிக் போலவே இருக்கும். எளிதில் தீப்பிடிக்காது. நிறமற்றதாக, ஒளிபுகக் கூடியதாக இருக்கும்.உப்புத் தண்ணீரில் போட்டு விட்டால் எட்டரை மணி நேரத்தில் கரைந்துவிடும். எனவே இது வழக்கமான பிளாஸ்டிக்கை விட மிகவும் நல்லது.

இந்தக் கலவையால் செய்யப்பட்ட குவளைகள் அல்லது தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் ஒட்டாத வகையில் சில வேதிப் பொருட்களைப்பூசி விடுவார்கள். இதனால், இவற்றில் ஊற்றப்படும் தண்ணீர் இவற்றைப் பாதிக் காது. இவற்றைப் பயன்படுத் தித் துாக்கி எறியும்போது லேசாகக் கீறிவிட்டால் போதும். இந்தக் கீறல் வழியாகக் கடலின் உப்பு நீர் உள்ளே சென்று குவளையைக் கரைத்து விடும்.

அதேபோல இவற்றை நிலத்தில் போட்டாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத் தாது. உப்புத் தண்ணீர் பட்டுக் கரைந்து நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றை வெளிப்படுத்தும்இவை இரண்டும் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் என்பதால் சுற்றுச் சூழலுக்கு நன்மையே. விரைவில் இவற்றாலான பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News