100 வருடப் பழமையான பூஷ்பபந்த அரண்மனையை ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்
திரிபுராவில் 100 வருடப் பழமையான பூஷ்பபந்த அரண்மனை ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் முன்னெடுக்கிறது.
பழைய காலத்தில் அரசர்கள் நாட்டை ஆட்சி செய்த போது, அவர்களதுஅரண்மனைகள் ராஜா-ராணிகளின் ஆடம்பர மாளிகைகளாக இருந்தன. அந்த அரண்மனைகள் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் கட்டிடங்களின் அடையாளமாக உள்ளன.
இந்த ஹோட்டல் தயாராகும் போது, அதை "தாஜ் பூஷ்பபந்த அரண்மனை" என அழைக்க வேண்டும் என்று , இந்த மாற்றத்திற்கு முன், திரிபுர அரசு டாடா குழுமத்துடன் வ்ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்தது. இதில் 100 அறைகள் மற்றும் 5 ரீகல் ஸ்டைல் சூட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையை 1917-ஆம் ஆண்டு மஹாராஜா பிரேந்திர கிஷோர் மனிக்யா பகதூர் கட்டியுள்ளார். இதை குஞ்ஜாபான் அரண்மனையாகவும் அறியப்படும். இது பல ஆண்டுகளாக அரச குடும்பவாழ்விடம் ஆக இருந்தது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் இது ஆளுநரின் இல்லமாக பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2018-ல் ராஜ்பவனத்தை வேறு இடத்திற்கு மாற்றியதும், இந்த அரண்மனை பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 5 நட்சத்திர ஓட்டலாக மாறியுள்ளது.
0
Leave a Reply