25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் உணவுகள்.

பச்சை நிறக்காய்கறிகள் எப்பொழுதும் உடலுக்கு நல்லது. அந்தவரிசையில் இருக்கும் வெள்ளரிக் காயில்96 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. வைட்ட மின்கள் கே, சி, மெக்னீசி யம் ஆகியவையும் உள்ளன. இதை சிறிய துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முகம் மற்றும் தோலின் வறட்சியை தடுத்து பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத் திருக்க உதவி புரியும்.அதிக நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று, தர்பூசணி. இதில்92 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதை அப்படியே கடித்து சாப்பிடுவது நல்லது. இதை கூழாக்கி குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. உணவு கட்டுப் பாட்டில் இருப்பவர்களும் இதை உண்டு மகிழலாம்.

வெயில் நேரத்தில் குழந்தைகளுக்கு தாகம் அதிகமாக எடுக்கும். உடனே குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் ரசாயனம் கலந்த பானங்களை கொடுக்காமல் இயற்கையின் அற்புதபானமான இளநீரை கொடுங்கள். இதில்95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம், இரும்புச். சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. காலை நேரத்தில் இளநீரை பருகும்போது அன்றைய தினத்திற் கான அதிக ஆற்றல் கிடைக்கும். செரிமானத்தையும் எளிதாக் கும். ரத்தத்தை சுத்திகரித்தல் உள்பட பல நன்மைகளும் கிடைக்கும்.

பனை மரத்தில் இருந்து பெறப்படும்ஐஸ் ஆப்பிள்' என்ற நுங்கு அதிக நீர்ச்சத்து நிறைந்தது. கோடை காலத்தில் மட்டுமே அதிகமாக கிடைக்கும். இந்த நுங்கு உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.அதன் மேல் இருக்கும் வெள்ளை நிறத்தோலுடன் சேர்த்து சாப்பிடுவதே நல்லது. இது வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்யும். இதில் சோடியம், பொட்டாசியம், தாதுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.எலுமிச்சையில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. இதை பானமாக தயார் செய்து குழந்தை களுக்கு கொடுத்தால் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படுவார்கள். இது அவர்களை நீரிழப்பு நோய்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திட உதவி செய்கிறது.

பழங்களை போல கீரைகளி லும் அதிக நீர்ச்சத்து உள்ளது. அந்தவகையில் சிவரிக்கீரை எனப் படும் செலரி95 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள முடியும். வைட்டமின்கள் ஏ, பி, சி மற் றும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும்இதில் நிறைந்துள்ளன.பப்பாளி, முலாம் பழம், பேரிக்காய் போன்ற பழங்களும் வெயிலில் இருந்து காத்து நீர்ச்சத்து நிறைந்தவர்களாக வைத்து கொள்ள உதவுகின்றன. வெயில் காலத்தில் மட்டும் கிடைக்கும் பதனீர்,மாம்பழம். முந்திரிபழம்(கொல்லாம் பழம்) போன்றவற்றை மறக்காமல் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து நீங்களும் சாப்பி டுங்கள். வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமாக வும் கோடையை கொண்டாடுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News