25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி

Oct 17, 2024

இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி)

இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி) வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் வேதியல் துறை தலைவர் திரு ரமேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் முனைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் செயலர் திரு சோமசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். திரு குமாரசாமி ராஜா உரிமையாளர் பேஷன் வேர்ல்ட் ராஜபாளையம் தனது சிறப்புரையில் இன்டர்ன்ஷிப் என்றால் என்ன அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் பயிற்சிகள் நடைமுறை அனுபவத்தை வழங்குகின்றன, திறன்களை மேம்படுத்துகின்றன மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துகின்றன. அவை நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், தொழில் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவு மற்றும் வகுப்பறை அறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஒரு தொழில்முறை விண்ணப்பத்தை உருவாக்கவும் இன்டர்ன்ஷிப் உதவுகிறது மற்றும் வேலை வாய்ப்புகள் அல்லது மதிப்புமிக்க குறிப்புகளுக்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாக, அவை கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன என்று தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் திரு சுரேந்திரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 

Oct 09, 2024

இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி நுகர்வோர் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் எபி ஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவள்ளி கலந்து கொண்டு, சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் நாம் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் குறித்தும், சாலை விபத்துக்கு மனித தவறுகள் தான் முக்கிய காரணம் எனவும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா நன்றியுரை வழங்கினார். நிகழ்வினை மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை  மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.

Oct 07, 2024

சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் சாம்பியன்

பீஜிங்கில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. சீன ஒபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் கோகோ காப், செக்குடியரசின் கரோலினா முசோவா மோதினர் .முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய கோகா காப், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில், கோகோ காப் 6-1, 6-3, என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ,இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.

Sep 25, 2024

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. Dr.D எபி ஜேம்ஸ் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் வரவேற்புரை வழங்கினார். மாணவர்களுக்கு உணவுப்பொருட்களின் கலப்படம் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விளக்கினார். Dr.S. ராமகிருஷ்ணன், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையேச் சார்ந்ததாகும். ஆனால் இன்றைய நவீன காலத்தில் மக்கள் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திரு.S. சுப்பிரமணியம், மாநில தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. உணவு மூலம் பரவும் நோய்கள் ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன.உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் காய்கறிகளை நாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்று வலியுறுத்தினார்கள். சிறுதானிய உணவுகளையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை செல்லாதவனே உண்மையான செல்வந்தர்கள். இதற்கு காரணம் நம்முடைய பாரம்பரிய உணவு முறையே ஆகும். நம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களே நமக்கு அதிக ஆரோக்கிய தரும் உணவாகும். இந்நிகழ்ச்சியின் இறுதியாக எம். கார்த்திகா , மூன்றாம் ஆண்டு மாணவி நன்றியுரை வழங்கினார். இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் என்.காவியா, மூன்றாம் ஆண்டு மாணவி தொகுத்து வழங்கினார்.  

Aug 16, 2024

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி 78 வது சுதந்திர தின விழா.

.இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இராஜபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் திருமதி ஆனந்தி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின உரையாற்றினார். அவர் தனது உரையில், நாட்டுக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்தார். அதோடு இன்னும் வெளியில் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் கண்டறிந்து அவர்களையும் போற்ற வேண்டும் என்றும், உலகையே அச்சுறுத்தி வரும் நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் எடுத்து கூறினார். அதோடு நம் ஊரின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முன் வரவேண்டும் என்றும், குறிப்பாக முடங்கியார் ரோட்டில் அமைந்துள்ள கல் மண்டபத்தை  சுத்தம் செய்வதற்காக உங்களைப் போன்ற மாணவர்களோடு இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு.ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திருமதி சத்யா வரவேற்புரையும், பிரசன்னா நன்றியுரையும் வழங்கினார்கள்.சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டி மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து முடங்கியார் ஆற்றுப்பாலம் வரையிலும், மாணவிகளுக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் வைத்து நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் நவீன் முதல் இடத்தையும் மற்றும் பெண்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவி அன்னபூரணி முதல் இடத்தையும் பெற்று, சிறப்பு விருந்தினரால் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்‌ திரு.முத்துக்குமார் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் திரு. சக்திவேல் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Aug 14, 2024

RAJAPALAYAM RAJUS' COLLEGE RAJAPALAYAM 78th Independence Day Celebration

RAJAPALAYAM RAJUS' COLLEGE RAJAPALAYAM78th Independence Day CelebrationChief Guest  ,Rtn.R.ANANTHI,  PRESIDENT Rotary Club of Rajapalayamwill hoist the National Flag, deliver the Independence day address inaugurate the Independence day "Environmental Awareness Mini Marathon Race"Date: 15.08.2024 (Thursday)Time: 08.30 A.M.All are Invited 

Aug 01, 2024

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வையொட்டி  அறிவியல் கட்டிடத் திறப்பு விழா 

 இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வையொட்டி  அறிவியல் கட்டிடத் திறப்பு விழா கல்லூரியில் வைத்து நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாகலாந்து ஆளுநர்  மேதகு இல.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு 2.5 கோடி மதிப்புள்ள புதிய அறிவியல் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்வில் கல்லூரித் தலைவர் திரு.கே.ஜி.பிரகாஷ் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கல்லூரிச் செயலர் முனைவர்.எஸ்.சிங்கராஜ் அவர்கள்  கல்லூரியின் 51 ஆண்டு கால சாதனைகளை விளக்கிப் பேசினார். பழைய பாளையம் ராஜூக்கள் மகுமைப் பண்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.ராம்கோ நிறுவன மேலாண்மை இயக்குனர்  திருமதி நிர்மலா வெங்கட்ராம ராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் புதிய அறிவியல் கட்டிடம் நிதி உதவி வழங்கிய கொடையாளர்களை    நாகலாந்து ஆளுநர் மேதகு இல‌. கணேசன் அவர்கள் பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். அவர் தனது சிறப்புரையில்,இராஜபாளையம் ராஜூக்களின் வழி சமுதாய மரபுகள், கட்டுப்பாட்டுகள் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை. ஏழை, எளிய மாணவர்களுக்கான இலவச கல்வி சேவையை கல்லூரி வழங்கி வருகிறது., இராஜபாளையத்தின் மண்ணின் மாண்பில் கல்லூரி வளர்ந்த விதம், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில், எதிர்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களின் மன உறுதியை நினைவு கூர்ந்தார். சுதந்திர இந்தியா கடந்து வந்த பாதை மற்றும் இளைய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றும்  நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலு நாச்சியார் , கட்டபொம்மன், ஜான்சிராணி,  பாரதியார்,  வ.உ. சி. போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறி பூரண சுதந்திரம்  பெற்றுத்  தேசத்தை வளர்ச்சிப்  பாதையில் எடுத்துச் செல்லும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும்  தேசிய ஒருமைப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.விழாவின் நிறைவாகக்  கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.ரமேஷ் குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கு சிவகாசி துணை ஆட்சியர் திருமதி பிரியா அவர்கள்,  கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பழைய பாளையம் மகுமைப் பண்டு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jul 31, 2024

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு அறிவியல் கட்டட திறப்பு விழா

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு அறிவியல் கட்டட திறப்பு விழா JULY  31. 7 . 24  MORNING 10.30 A.Mஇடம் - முன்னாள் மாணவர்கள் சங்கக் கலையரங்கத்தில் பொன்விழா ஆண்டு அறிவியல் கட்டட திறப்பு விழா நடைபெறவுள்ளது 

Apr 08, 2024

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ஆண்டு விழா

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ஆண்டு விழா முன்னாள் மாணவர் சங்க கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. துணை முதல்வர்  ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்‌. கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழுத் தலைவர் கே.ஜி.பிரகாஷ் தலைமை உரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் எஸ்.சிங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஐஜி. எம் எஸ்.முத்துசாமி ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில், கல்வி என்பது ஒரு ஆயுதம் அதை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். படித்த அனைவருக்கும் இன்று வேலைவாய்ப்புகள் உண்டு. இளங்கலை பட்டம் படித்தவர்கள் இன்றைக்கு எத்தனையோ பெரிய,பெரிய பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாணவர்கள் கல்லூரி வேலை நாட்களை முழுவதும் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொழியை பிரதானப்படுத்தி ஆங்கிலம் தெரியவில்லை என்று  தாழ்த்தி விடாமல் முன்னோக்கி வளர வேண்டும்.திருவள்ளுவர் திருக்குறளை தமிழ் மொழியில் எழுதினார். தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறளை உலக பொதுமறை ஆக போற்றப்படுகிறது. எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல என்ன பேசுகிறோம் என்பது தான் முக்கியம் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். நிறைவாக மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பழையபாளையம் மகமை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mar 21, 2024

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 51ஆவது ஆண்டு விளையாட்டு தினவிழா.

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 51 ஆவது பொன்விழா ஆண்டு விளையாட்டு தின விழா கல்லூரி மைதானத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.  கல்லூரி ஆட்சி மன்ற குழுச் செயலர் சிங்கராஜ் தலைமை உரையாற்றினார்.விழாவினுடைய சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது, ஆசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற திருநெல்வேலி தமிழ்நாடு மின்சார வாரிய மூத்த விளையாட்டு அலுவலர் மணத்தி கணேசன்  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்த அளவிற்கு  முன்னேற காரணம் என்றால் விளையாட்டின் மீதான எனது ஆர்வம் அர்ப்பணிப்பும் தான். விளையாட்டின் மூலம் நமது திறமையை வளர்த்து நமது கிராம மண்ணின் பெருமையை உலகறிய செய்யலாம். பல திறமைகளை கொண்டுள்ள நீங்கள் இன்னும் பல பயிற்சிகளை பெற்று சாதனை பெற வேண்டும் என்று வாழ்த்து கூறினார். சீருடை அணிந்த தேசிய மாணவர்களின் படை அணிவகுப்பு நடைபெற்றது. ஆண்களுக்கான ஒட்டுமொத்த மொத்த சாம்பியன் பட்டத்தை பாரதியார் அணியும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை காவேரி அணியும் வென்றது. தனிநபருக்கான சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மணிகண்டன், பெண்கள் பிரிவில் பாப்பாத்தி ஆகியோர் சாம்பியன் பட்டத்தை  வென்றனர். மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த கல்வி ஆண்டின் விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் வாசித்தார். விழாவின் நிறைவாக  உடற்கல்வி உதவிப் பேராசிரியை அபிநயா நன்றியுரை கூறினார்.இந்நிகழ்வில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் பழையபாளையம் மகமை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2

AD's



More News