தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது.
ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இம்முறை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே, அதாவது, மே, 24ம் தேதியே பருவ மழை துவங்கி உள்ளது. கடைசியாக, 2009 மே 23ல், கேர ளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியது. தற்போது, 16 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. நம் நாட்டின் விவசாயத்துக்கு தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாயிலாகவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக மழைப் பொழிவு கிடைக்கிறது.
இந்த பருவ மழையால், மக்கள் தொகையில், 42.3 சதவீதம் பேர் பயனடைகின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 18.2 சதவீத பங்களிப்பை இந்த பருவமழை வழங்குகிறது.அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவும், குடிநீர் மற்றும் மின் பயன்பாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தென் மேற்கு பருவமழை உதவுகிறது.
0
Leave a Reply