25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 13, 2026

மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.

தானம் என்பது கேட்ட பிறகு கொடுப்பது, தர்மம் என்பது கேட்கும் முன் கொடுப்பது. கர்ணனின் காதில் கவச குண்டலம் இருக்கும் வரை, தன் உயிர் பிரியாது என தெரிந்தும் இந்திரனுக்கு தானமாக கொடுத்தார். தன் வாழ்நாள் முழுவதும் தர்மம் செய்த கர்ணனுக்கு கடைசி நேரத்தில் உயிர் பிரியவிடாமல், அவர் செய்த தர்மம் காப்பாற்றியது .அந்த நேரத்தில் வந்த கிருஷ்ணன் நீ செய்த தர்மம் அனைத்தும் எனக்கு வேண்டும், என்று கேட்ட உடன் தானமாக கொடுத்தார். கர்ணன் இறப்பதற்கு முன்தன் விஸ்வரூபத்தை காட்டிய மகாவிஷ்ணு, கர்ணன் இறந்த பிறகு உடலை தகனம் செய்தார். மகாவிஷ்ணுவின் கையால் தகனம் பெற்ற பாக்கியவான் கர்ணன்.

Apr 13, 2026

திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்டுகள் இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.

திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை இனி 9552300009 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பக்தர்கள் எளிதாகப் பெறலாம். இந்த எண்ணிற்கு "hi" என அனுப்பி, 'TTD Temple Service' மூலம் விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இந்த புதிய வசதியால் பக்தர்கள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Apr 11, 2026

வாழும் தெய்வங்களின் வலி .

14 ஆண்டுகள் காத்திருந்து பிறந்த குழந்தைகளை முத்தமிடும் முன்பே, விபத்தில் பிரிந்து சென்ற கணவரின் உயிர், மனைவியாக மனமுடைந்தாலும், ஒரு அதிகாரியாக சீருடையில் கணவருக்கு இறுதி வணக்கம் செலுத்திய தீபிகா சவுகான். திரையில் காண்பது அல்ல, இது தான் உண்மையான தேசப்பற்று மற்றும் தியாகம்,இவரின் மன உறுதிக்கு ஒரு வணக்கம்.

Apr 11, 2026

உயிர் காக்கும் அவசர கால முதலுதவி.

1. மயங்கி விழுந்தால் செய்ய வேண்டியவை (Do's):பாதிக்கப்பட்டவரை உடனடியாக மரநிழல் அல்லது காற்றோட்டமான இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.அக்குள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஐஸ் கட்டிகளை வைத்து உடல் சூட்டை விரைவாகத் தணிக்கவும்.உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். 2. தவறியும் இதைச் செய்யாதீர்கள் (Don'ts):மயக்கத்தில் இருப்பவருக்குக் கட்டாயப்படுத்தி தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது.மயக்க நிலையில் தண்ணீர் தருவது மூச்சுத்திணறலை (Choking) ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம். 3. வெயிலில் இருந்து தப்பிக்க வழிகள்:நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.துணை: வெளியே செல்லும்போது மறக்காமல் குடை மற்றும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுங்கள்.ஆடை : பருத்தி ( cotton) ஆடைகளை அணிவது உடல் சூட்டைத் தவிர்க்க உதவும்.

Apr 11, 2026

கடுமையான வெயில் நேரம், இதை மட்டும் சாப்பிடாதீங்க...

புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளைதவிர்ப்பது நல்லது. உடல்சூட்டையும். பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால்வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர்க்கடுப்பு, நீரில் இரத்தம் வெளியேறுதல் பிரச்சினைகள் ஏற்படலாம்.எண்ணெய் பலகாரங்கள், தேநீர் வெயில் நேரத்தில் பித்தத்தை ஏற்படுத்தும். அதனால் அவற்றை முடிந்தளவு அதிகமான வெயில் இருக்கும் சமயங்களில் தவிர்ப்பது நல்லது.அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு, மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் இது ஆசனவாயில் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்,கடைகளில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள், ஃபாஸ்ட்புட வகைகளை தவிர்ப்பது நல்லது.

Apr 11, 2026

கேரள கோயில் உள்கட்டமைப்பு மற்றும் விலங்குகள் நலனுக்காக , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி ₹18 கோடிவழங்கப்படும் என அறிவித்தார்.

ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 8 மணியளவில்வரலாற்றுசிறப்புமிக்கதளிபரம்பிலுள்ளராஜராஜேஸ்வரம் கோவிலுக்கு விஜயம் செய்த ஆனந்த் அம்பானி, பொன்னும்கூடம்,பட்டம், தாளி, நெய்யமுறுது உள்ளிட்ட பாரம்பரிய பிரசாதங்களை வழங்கி அஸ்வமேதநமஸ்காரம் செய்தார். ராஜராஜேஸ்வரம்மற்றும்குருவாயூர்கோயில்களுக்கு₹6கோடிநன்கொடைகள்,ராஜராஜேஸ்வரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு கோபுரத்தை புனரமைக்க₹12 கோடி ஒதுக்கீடு, அத்துடன் குருவாயூரில் உள்ள கோயில் யானைகளின்பராமரிப்புக்கான புதிய முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும் என ஏ.என்.ஐ செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.அனந்த் அம்பானி தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் வந்திருந்தார், மேலும் கோயில்அதிகாரிகளால் பாரம்பரிய மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். அனந்த் அம்பானி குருவாயூர்கோயிலுக்குச் சென்று, அங்கு குருவாயூரப்பன் பெருமானை வழிபட்டதோடு, கோயில்அறக்கட்டளைக்கு ₹3 கோடியையும் நன்கொடையாக வழங்கினார்.வந்தாரா திட்டத்தின் மூலம் விலங்குகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தனதுஅர்ப்பணிப்பிற்கு இணங்க, குருவாயூரில் உள்ள கோயில் யானைகளின் நலனுக்கானமுயற்சிகளை ஆதரிக்கும் தனது விருப்பத்தையும் அனந்த் அம்பானி வெளிப்படுத்தினார்.கோயில் மரபுகளுடன் தொடர்புடைய யானைகளுக்கு மனிதாபிமான, கண்ணியமானமற்றும் அறிவியல் பூர்வமான பராமரிப்பை உறுதி செய்வதற்காக, ஒரு பிரத்யேகயானை மருத்துவமனை, சங்கிலி இல்லாத தங்குமிடம் மற்றும் நவீன உள்கட்டமைப்புஆகியவற்றை உருவாக்குவதும் இதில் அடங்கும்.குருவாயூரில், தேவஸ்வம் தலைவர் ஏ.வி. கோபிநாத் மற்றும் பிற அதிகாரிகள் அவரை,வரவேற்று பாரம்பரிய நினைவுப் பரிசுகளும் பிரசாதமும்வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, இந்தியாவின் ஆன்மீக மரபுகள் வெறும்வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; அவை நம்பிக்கை, சமூக உணர்வு, கருணைமற்றும் இயற்கையுடனான ,நமது ஆழமான பிணைப்பை வளர்க்கும் உயிருள்ளநிறுவனங்களாகும். வருங்கால சந்ததியினருக்காக இந்தப் புனிதமானபாரம்பரியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்றார்.அவர் மேலும் கூறுகையில், “இந்த முன்னெடுப்புகள் மூலமாகவும், வந்தாராவில்நாங்கள் ஆற்றும் பணிகள் மூலமாகவும், எங்கள் மரபுகளின் இன்றியமையாதஅங்கமான விலங்குகள் மிகுந்த கண்ணியம், கருணை மற்றும் அறிவியல் பூர்வமானகவனத்துடன் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, பக்தர்களின்அனுபவத்தையும் மேம்படுத்தி, பணிவுடன் சேவை செய்ய நாங்கள் முயல்கிறோம்.கோயில் உள்கட்டமைப்பை ஆதரிப்பதன் மூலமும், புனிதமான பாரம்பரியக்கட்டமைப்புகளை மீட்டெடுக்க வழிவகுப்பதன் மூலமும், பக்தர்களின் அனுபவத்தைமேம்படுத்துவதன் மூலமும், கோயில் விலங்குகளின் நலனை முன்னேற்றுவதன்மூலமும், இந்த முன்னெடுப்புகள் இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தின்அடித்தளமாக விளங்கும் வாழும் மரபுகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Apr 11, 2026

பெண்களுக்கு உண்மையான கவசம் “ElectroShoe” .

வெறும் 17 வயதான சித்தார்த் மண்டலா உருவாக்கிய ElectroShoe -தாக்குதல் நடந்தால் உடனே மின்சாரம் தாக்கும், அதே நேரத்தில் இடம் குறித்த எச்சரிக்கையையும் அனுப்பும்.பயம் அல்ல.பாதுகாப்பே இலக்கு.இப்படிப்பட்ட உண்மையான ஹீரோக்களுக்கு நம் ஆதரவு தேவை.ஒரு லைக் செய்து இந்த ஹீரோவை பாராட்டுங்கள்.

Apr 10, 2026

பொதிகை எக்ஸ்பிரஸ்:முக்கிய அறிவிப்பு.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11ல் நடக்கும் மறு சீரமைப்பு பணி காரணமாக கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 07ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை, ரயில் எண். 12661, சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 08.02 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.

Apr 10, 2026

ஈரானின் பகிரங்க அறிவிப்பால் உலகம் அதிர்ச்சி. இந்தியா வந்தடைந்த கப்பல்.

இந்திய மூவர்ணக் கொடியையும் "IPG' என்ற வார்த்தையையும் ஏற்றிச் செல்லும் எந்தவொரு எண்ணெய் கப்பலும் அச்சமின்றி கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் வெளிப்படையாகக் கூறியுள்ளது. இது இந்தியாவின் வருகை மற்றும் புறப்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதில் மகிழ்ச்சியடைபவர்கள் கண்டிப்பாக இதை லைக் செய்ய வேண்டும்.சுமார் 47 ஆயிரம் டன் எல்.பி.ஜி. எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 'ஜாக் வசந்த்' என்ற இந்திய கப்பல் மும்பை துறைமுகம் வந்து சேர்ந்தது.போர் பதற்றம் காரணமாக எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலும், இந்திய மாலுமிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு கப்பலை கொண்டு வந்தனர்எங்கள் உயிருக்கே ஆபத்தான சூழல் இருந்தாலும், நாட்டுக்காக எரிவாயுவை கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறோம் என அதில் பணியாற்றிய மாலுமிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Apr 09, 2026

பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

வெப்ப அலை - வெளியே சென்றால் பருத்தி ஆடை அணியவும்காலை11 மணி முதல் மாலை3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் வெளியே சென்றால் பருத்தி ஆடைகள் அணிய அறிவுறுத்தல்.வெயில் காலத்தில் வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணியலாம்.கட்டட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம்.தொடர்ச்சியாக 2 நாள்கள் வெயிலில் இருந்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.வெப்ப வாதத்தால் சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.

1 2 ... 56 57 58 59 60 61 62 ... 136 137

AD's



More News