25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"ஆடிப்பட்டம் " விவசாய பணிகள் ராஜபாளையம் பகுதியில் தொடங்கின

சேத்தூர் பிர்க்காவில் உள்ள நகரகுளம், வாண்டையார்குளம், பெரியகுளம், வாழவந்தான் கண்மாய், நச்சாடபேரி ஆகிய கண்மாய் பகுதிகளில் தக்கை பூண்டு செடி விதைப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது. தற்போது கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளன. இதனால் விவசாயிகள் நெற்பயிர் நடுவதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் வருகிற புரட்டாசி மாதம் நடவு பணிகளுக்காக தற்போது விவசாய நிலத்தில் கொழிஞ்சி செடிகளை போட்டு உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு விவசாய பணிகள் நடைபெறுகிறது

விவசாயிகளுக்கு தட்டுப் பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது தெற்கு தேவதானம், வடக்கு தேவதானம், கோவிலூர் ஆகிய பகுதியில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிறைந்தன. இதனால் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். முதல் போக அறுவடை பணிகள் முடிந்த நிலையில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கால நடவு பணிகளை ஆரம்பிக்க வயல்களை சீரமைக்கும் பணி நிலத்தை உழுது சமன் செய்யும் பணி போன்றவை நடந்து வருகின்றன.

மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தெற்கு தேவதானம், வடக்குதேவதானம், கோவிலூர், சாஸ்தா கோவில் பகுதியில் ஆடிப்பட்டம் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News