25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


குடியரசு தினம் – 2027 முன்னிட்டு பத்ம விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடியரசு தினம் – 2027 முன்னிட்டு பத்ம விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

குடியரசு தினம் -2027 ஆம் ஆண்டு முன்னிட்டு, 'சிறப்புமிக்கப் பணிகளை' அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் ,பிரிவுகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் , சேவைக்காக பத்ம விருதுகள் – 2027 வழங்கப்படுகின்றன.

இனம், தொழில், பதவி அல்லது பாலினம் என்ற வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளுக்குத் தகுதியானவர்கள். இதனடிப்படையிலான விளையாட்டுத்துறை சார்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்ம விருது நாட்டின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருது என்பதால், விண்ணப்பிக்கக்கூடிய நபர் தத்தமது துறையில் இதற்கு முன்னர் ஏதேனும் தேசிய விருதோ அல்லது மாநில விருதோ பெற்றிருத்தல் வேண்டும்.மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட மற்ற அரசு ஊழியர்கள் பத்ம விருதுக்குத் தகுதி பெறமாட்டார்கள்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் ராஷ்ட்ரிய புரஸ்கார் இணையதளமான https://awards.gov.in வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  பத்ம விருதுகளுக்கு இணையவழி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.07.2026  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News