25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள்  (29.07.2026) விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பெரிய கண்மாய், பிசிண்டி, விருதுநகர் கௌசிகா நதி, சாத்தூர் வைப்பாறு மற்றும் படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos.16485 & 14699 of 2015 மற்றும் W.P. No.3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற சிறப்பு முன்முயற்சியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, அரசு நிலங்கள், ஆறுகள், கண்மாய்கள், கால்வாய்கள், நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் இதர பொதுநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, அவற்றிற்குப் பதிலாக உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர இனங்களை நடவு செய்து பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இப்பணிகளை மாவட்டம் முழுவதும் விரைவாகவும், தரமான முறையிலும் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, துறைவாரியாக செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. மேலும், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அகற்றும் பணிகள் திட்டமிடப்பட்டன.

அதன் ஒருபகுதியாக, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், விவசாய நிலங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் (Mass Eradication of Prosopis juliflora) இயக்கம் கடந்த 15.07.2026 அன்று மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் நடவடிக்கையாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள், சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராத வகையில் வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட பகுதிகளில் உடனடியாக பூர்வீக மரக்கன்றுகள் நடவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், நீர்நிலைகளின் இயற்கை நீரோட்டம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஆக்கிரமிப்பு தாவரங்களையும் முழுமையாக அகற்றி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த கள ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) அ.நாச்சியார் அம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.முருகன், உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News