25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


கசப்பான உண்மை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கசப்பான உண்மை.

உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் நம்மால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள்.

வீட்டிற்கு வந்த மருமகள் உயிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும்,தன் மாமியார் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள்.

வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடம் இருக்கவே விரும்புவார்கள்.

கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ குழந்தைகளோ ஒரு குறிப்பிட்ட வயதில்'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சிங்க? என்று கேட்காமல் விட மாட்டார்கள்.

70 வயதுக்கு மேல் வாழாமல் இருப்பது உத்தமம். நான் பார்த்தவரை பெரும்பாலான வயதானவர்கள் நாய்படாத பாடு படுகிறார்கள்.

 உடன் பிறந்த அண்ணன் தம்பியை தவிர, வேறு எந்த நபரும் அடுத்த வீட்டுப் பெண்களைச் சகோதரிகளாக ஏற்றுக் கொள்வதில்லை.

தோள் கொடுக்கும் உறவுகளை விட காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News