25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 06, 2025

AI அசுர வளர்ச்சியால் ,25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel

25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.செலவுகளை குறைக்கும் நிறுவனத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக ,இன்டெல் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதமே 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும்25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சிப் சந்தையில் முன்னணி இடத்திலிருந்த இன்டெல், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது. 1990களில் மைக்ரோபிராசஸர் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஸ்மார்ட்போன்களின் எழுச்சியை இந்நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதுவே இன்டெல் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.தற்போது உலகின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் பிரிவில், என்விடியா (Nvidia) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இன்டெல் பின்தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.AI தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இன்டெல் நிறுவனத்தின் சிப் தயாரிப்புகள் இந்தச் சந்தையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Sep 05, 2025

பழங்குடி மக்கள் வாழ்வதற்காக நடிகை, சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்

ஆப்பிரிக்காவின் புலாசா என்ற கிராமத்திற்கு நடிகை, சமந்தா  சென்றபோது, அந்தக் கிராமத்தில் இருந்த பழங்குடி மக்களுக்கு வாழ வீடு இல்லாமல் தவித்தது. பழங்குடி மக்கள் வாழ்வதற்காக சமந்தா தனது சொந்தப் பணத்தில் 80 வீடுகளைக் கட்டினார்.பழங்குடியினருக்காக சமந்தா செய்த நல்ல பணிகளுக்கான  சேவையை பாராட்ட வேண்டும்.

Sep 05, 2025

SENIOR CITIZEN மன அழுத்தத்தை குறைக்க 10 வழிகள்.

ஒரே இடத்தில் வெகு நேரம் அமராமல் ,உடலை இயக்கி கொண்டே இருங்கள்.  சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மனதை ஒருமைப்படுத்துங்கள். அதிகமாக நகையாடுங்கள். புதுமையான செயல்களில் ஈடுபடுங்கள். இனிமையான பாடல்களை கேளுங்கள் அல்லது புத்தகங்கள் படிங்கள். வெளியே சென்று நடைபயிற்சி செய்யுங்கள். . தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். தோணும்பொழுது ஆனந்தமாக நடனமாடுங்கள். இயற்கையின் அமைதியை அனுபவியுங்கள்.

Sep 04, 2025

நடிகர் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள  "லே" பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது  இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், 2008-ல் "3 இடியட்ஸ் "ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம்.மாதவன் தற்போது பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வானிலை சூழ்நிலைகள் மேம்பட்டவுடன் அவர் மும்பை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sep 04, 2025

ரஷ்யா அனாதை குழந்தைகளின் கல்விக்காக ஆண்டுக்கு 10 கோடி செலவிடும் நடிகை,சமந்தா.

 ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக   நடிகை,சமந்தா ரஷ்யா சென்றார். ஆனால் உக்ரைனில் நடந்த போரில், பெற்றோர் இறந்துவிட்டதால் பல அனாதை குழந்தைகள் ரஷ்யாவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அந்தக் காட்சியைப் பார்த்த சமந்தா, ரஷ்யாவில்உள்ளஅனைத்துஅனாதைகுழந்தைகளையும் தத்தெடுத்தார்.அனாதைகுழந்தைகளின்கல்விக்காகசமந்தாஆண்டுக்கு 10 கோடி செலவிடுகிறார்.அனாதைக் குழந்தைகளுக்கான சமந்தாவின் கல்வி பணி  சேவையை பாராட்ட வேண்டும்.

Sep 03, 2025

திருப்பூர், நொய்டா மற்றும் சூரத்தில் உள்ள ஜவுளித் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்திய ஏற்றுமதியாளர்கள் .

.FIEO தலைவர் எஸ்.சி. ரால்ஹான் கூறுகையில்,50 சதவீத அமெரிக்க வரிகள் இந்தியப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைக்கு வருவதை கடுமையாக பாதிக்கும். இந்த வளர்ச்சி ஒரு பின்னடைவு என்றும், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்ததன் காரணமாக, திருப்பூர், நொய்டா மற்றும் சூரத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு(FIEO)  தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மொத்த வரிகள்50 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது உலகளவில் மிக உயர்ந்ததாகும்."திருப்பூர், நொய்டா மற்றும் சூரத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் விலை போட்டித்தன்மை மோசமடைந்து வருவதால் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இந்தத் துறை வியட்நாம் மற்றும் பங்களாதேஷின் குறைந்த விலை போட்டியாளர்களிடம் தோல்வியடைந்து வருகிறது. கடல் உணவுகளைப் பொறுத்தவரை, குறிப்பாக இறால், அமெரிக்க சந்தை இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை உறிஞ்சுவதால், கட்டண அதிகரிப்பு கையிருப்பு இழப்புகள், விநியோகச் சங்கிலிகள் சீர்குலைவு மற்றும் விவசாயிகளின் துயரத்தை ஏற்படுத்தும்" என்றுFIEO தலைவர் எஸ்.சி. ரால்ஹான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.உலகளாவிய பிராண்டிங், தரச் சான்றிதழ்களில் முதலீடு மற்றும் ஏற்றுமதி உத்தியில் புதுமைகளை உட்பொதித்தல் மூலம் பிராண்ட் இந்தியா மற்றும் புதுமைகளை மேம்படுத்துவது மற்றொரு அணுகுமுறையாக இருக்கலாம், இதனால் இந்தியப் பொருட்களை உலகளவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற முடியும்," என்றுFIEO தெரிவித்துள்ளது.50 சதவீத அமெரிக்க வரிகள் இந்தியப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைக்கு வருவதை கடுமையாக பாதிக்கும் என்று ரால்ஹான் கூறினார். இந்த வளர்ச்சி ஒரு பின்னடைவு என்றும், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கலாம் என்றும் அவர் கூறினார். இப்போது 30–35 சதவீதம் விலை நிர்ணய குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ளதால், சீனா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருட்கள் போட்டியற்றவையாக மாற்றப்பட்டுள்ளன" என்று ரால்ஹான் கூறினார்.இதற்கிடையில், ஆகஸ்ட்27 முதல் அமலுக்கு வந்த இந்தியப் பொருட்களுக்கு50 சதவீத அமெரிக்க வரி விதிப்பதன் மூலம் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடமிருந்து உடனடி ஆதரவை எதிர்பார்க்கிறார்கள் .என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தெரிவித்துள்ளது."இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து அரசாங்கம் தொழில்துறையினருடன் விவாதித்து வருகிறது.."இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களின் எதிர்காலமும், அதன் விளைவாக நாட்டிற்கு அந்நியச் செலாவணி வருவாய் இழப்பும் மட்டுமல்லாமல், ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் எண்ணற்ற வேலைகளும், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி என்ற தேசிய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளும் ஆபத்தில் உள்ளன" என்று மெஹ்ரா கூறினார்.உடனடி அரசாங்க ஆதரவு தேவை, இதில் வட்டி மானியத் திட்டங்கள் மற்றும் பணி மூலதனம் மற்றும் பணப்புழக்கத்தைத் தக்கவைக்க ஏற்றுமதி கடன் ஆதரவு ஆகியவை அடங்கும். இதை மேலும் ஆதரிக்க, சிறப்பு அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகளின் கீழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் ஆதரிக்கப்படும்MSME களுக்கு முக்கியத்துவம் அளித்து குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கடன் அவசியம்," என்று ரால்ஹான் கூறினார்.ஒரு வருடம் வரை கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு சிஐடிஐ அரசாங்கத்திடம் ஒரு வருடம் வரை தடை விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Sep 02, 2025

: இந்தியாவின் முதல் 9  பணக்கார பெண்மணிகள்.

சாவித்ரி ஜிண்டால்- ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால், இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். அவரது நிகர மதிப்பு சுமார் $43.7 பில்லியன் ஆகும். வினோத் ராய் குப்தா- (மற்றும் அவரது மகன் அனில் ராய் குப்தா) வினோத்தின் மறைந்த கணவர் கீமத் ராய் குப்தாவால் நிறுவப்பட்ட முதன்மை ஹேவல்ஸ் இந்தியாவில் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளனர். அவர்களின் நிகர மதிப்பு சுமார்$9.5 பில்லியன் ஆகும்.ரேகா ஜுன்ஜுன்வாலா-இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார்$9.3 பில்லியன் ஆகும்.வினிதா குப்தா-வினிதா குப்தா மருந்து நிறுவனமான லூபினின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். குப்தா குடும்பத்தின் நிகர மதிப்பு சுமார்$5.75 பில்லியன் ஆகும்.ரேணுகா ஜக்தியானி - மத்திய கிழக்கு சில்லறை விற்பனை நிறுவனமான லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவராக ரேணுகா ஜக்தியானி பணியாற்றுகிறார். அவரது நிகர மதிப்பு சுமார்$5.6 பில்லியன் ஆகும்.அனு அகா-பொறியியல் நிறுவனமான தெர்மாக்ஸின் தலைவராகப் பணியாற்றிய அனு அகாவின் நிகர மதிப்பு சுமார்$4.7 பில்லியன் ஆகும்.பால்குனி நாயர் -நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயரின் நிகர மதிப்பு சுமார் $3.64 பில்லியன் ஆகும்.கிரண் மஜும்தார்-ஷா -பயோகானின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான கிரண் மஜும்தார்ஷாவின் நிகர மதிப்பு சுமார்$3.6 பில்லியன் ஆகும்..மஹிமா தத்லா -தனியார் வசம் உள்ள தடுப்பூசி தயாரிப்பாளரான பயோலாஜிக்கல் E இன் நிர்வாக இயக்குநரான மஹிமா தத்லா, சுமார் $3.3 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.

Sep 02, 2025

நம்ம ₹100 நோட்டுல இருக்கும் இந்த மலை எங்க இருக்குனு தெரியுமா?

ஒரு ஜெர்மன் டூரிஸ்ட்₹100 நோட்டை காட்டி"இந்த மலை உங்க நாட்டுல எங்கே இருக்கு தெரியுமா?" என்று5-6 இந்தியர்களிடம் கேட்டாராம். ஆச்சர்யமா,யாருக்கும் பதில் தெரியல! அது தான் காஞ்செஞ்ஜங்கா மலை.உலகில் மூன்றாவது உயரமான மலை. இந்தியா (சிக்கிம்) மற்றும் நேபாளத்தில் இரண்டும் சேர்ந்த இடத்தில் இந்த மலை  உள்ளது .

Sep 02, 2025

இந்தியாவிற்கு பெரு மையான தருணம்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா, 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்ட த்தை வென்ற புதியவர். 

Sep 01, 2025

'கேட்போர் வட்டம்' (Audience Enclave)

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில், அல்ட்ராசோனிக் அலைகளை குவித்து அனுப்பக் கூடிய, 'கேட்போர் வட்டம்' Audience Enclave)என்ற  தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம், பொது இடங் களில் ஹெட்போன்கள் இல்லாமல் தனிப்பட்ட முறையில், இசை, உரைகளை கேட்க உதவும்.காது இரைச்சலை ஆங்கிலத்தில் 'டின்னிடஸ் ' என்பர். இந்த தொந்தரவுக்கு திட்டவட்டமான  சிகிச்சை இல்லை .சமீபத்திய ஆய்வு ஒன்று, பழங்கள், நார்ச்சத்து, பால் பொருட்கள், காபி போன்றவை, டின்னிடசை தடுக்கக்கூடும் என்று கூறுகிறது.

1 2 ... 95 96 97 98 99 100 101 ... 137 138

AD's



More News