சைமாவில் 6 விருதுகளை வென்ற ‘டூரிஸ்ட் பேமிலி’.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான 14-வது சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் தமிழ் திரைப்படப் பிரிவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை ‘பைசன்’ திரைப்படத்துக்காக துருவ் விக்ரம் பெற்றார். சிறந்த திரைப்படத்துக்கான விருது ‘டிராகன்’ படத்துக்கு வழங்கப்பட்டது.
0
Leave a Reply