25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 16, 2025

எறும்புகள் காகத்தின் மீது ஃபார்மிக் அமிலத்தைத் தெளிக்கின்றன.

.மிகவும் புத்திசாலி  காகம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, ​​அது ஒரு எறும்புக் கூட்டைக் கண்டுபிடித்து அதைத் தொந்தரவு செய்கிறது. எறும்புகள் காகத்தின் உடலில் ஊர்ந்து செல்கின்றன, ஆனால் காகம் அதன் இறக்கைகளை விரித்து அசையாமல் இருக்கும். எறும்புகள் காகத்தின் மீது ஃபார்மிக் அமிலத்தைத் தெளிக்கின்றன, இது கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் கொல்ல உதவுகிறது. இது ஒரு இயற்கை மருந்தாக வேலை செய்கிறது. எறும்புகள் சாப்பிட்ட பிறகு, காகம் நன்றாக உணர்கிறது.

Sep 15, 2025

ஆடைகளை துவைப்பதற்கு விண்வெளியில் வாஷிங் மெஷின்.

 சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்கள்பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் ,ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஆடைகளை துவைப்பதற்கு இதற்கேற்ற பிரத்யேக வாஷிங் மெஷினை சீன வானியல் ஆராய்ச்சி பயிற்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பனி, ஒசோனை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷின்ஆடைகளை சுத்தம் செய்கிறது இதற்கு வாஷிங் பவுடர், தண்ணீர்தேவையில்லை..கனசதுரம்வடிவிலானஇந்தமெஷின்,12 கிலோ எடையுள்ளது.400 மி.லி., தண்ணீரில்,800 கிராம் எடையுள்ள துணிகளை துவைப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

Sep 15, 2025

பனிக் கடல் யானை.

 கடல் பாலூட்டிகளில்,  பனிக் கடல் யானை. துடுப்புகாலி இனத்திலேயே பெரியதான இது தந்தம் போன்ற நீண்ட பற்களைக் கொண்டுள்ளது. இவை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வட துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் நிறைந்த இடங்களில் காணப்படுகின்றன.பின்னங் கால்களால் நீந்தும் ஆற்றல் கொண்டவை. உட்பொதிந்த காதுகள் உண்டு.  துடுப்புகள் போன்ற கால்களால் தரையிலும் தவழ்ந்து செல்லும், தடிமனான தோல் கொண்டிருப்பதால் கடும் குளிர், பனி சூழல்களில் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த யானைகளின் தொண்டையின் அடியில் பெரிய காற்றுப்பைகள் உள்ளது. எதிரிகளை துரத்தி அடிப்பதற்கு இதன் நீண்ட தந்தம் போன்ற பற்கள் ,பனிக்கட்டிகளை துளையிட்டு கடலில் இறங்கவும், கடலில் இருந்து பனிக்கட்டிகளின் மேல் ஏறுவதற்கும் பயன்படுகிறது. இதன் பற்கள் 15 ஆண்டுகள் வரை வளரக்" கூடியது. இந்த பற்கள் மூலம் பனிக்கரடி மற்றும் திமிங்கலத்திடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. 

Sep 13, 2025

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன் படுத்தினால்பாதிப்புகள் ஏற்படாது.

நீண்ட நேரம் மொபைல் போன் பயன் படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன் படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி,வலி,கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும் போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன் படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது. செல்போனுக்கும், கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்..

Sep 13, 2025

சிரிப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.

பெண்கள்  ஆண்களை விட அதிகமாக சிரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு ஆராய்ச்சியின்படி, சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு 62 முறையும், அதே நேரத்தில் ஆண் ஒரு நாளைக்கு 8 முறை மட்டுமே சிரிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இரு பாலினத்தவரின் புன்னகை விகிதத்திலும் ,உள்ள வேறுபாடு இளமையாக இருக்கும்போது அதிகமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம், தொழில் அல்லது சமூக பொறுப்புகளில் ஆண் - பெண் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும்போது, இரு பாலினருக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. புன்னகையைப் பொறுத்தவரை வயது, கலாசாரம் மற்றும் இனம் போன்ற பல காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

Sep 13, 2025

'ரிங் மவுஸ்' என்ற அணி கருவி (Wearable Gadget) .

'ரிங் மவுஸ்' என்ற அணி கருவி (Wearable Gadget) புதிதாக வந்திருக்கிறது. இதை விரலில் மாட்டிக்கொண்டு, அசைத்தால், தொடு திரையைத் தொடாமலேயே, மொபைல் திரையில் ஸ்க்ரோல், கிளிக், நேவிகேட் செய்யலாம்.

Sep 12, 2025

ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படும் வேப்பமரம்.

உலகில் பல நாடுகள், வேப்பமரம் தங்கள் மண்ணில் வளராதா என்று ஏங்குகின்றன. இதன் தாவரவியல் பெயர் 'அசாதி ராச்தா இண்டிகா' ஆகும்.சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வீக்கம், தொற்று நோய், காய்ச்சல், தோல் நோய்கள், பல் சார்ந்த பிரச்சினை உள்பட பல நோய்களுக்கு வேம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கடும் வெயிலால் ஏற்படும் பித்த பாதிப்புகளை தணித்து உடலை குளிர்விக்கும் இயல்பை கொண்டது.  வெயில் காலத்தில் வேனல் கொப்புளங்கள், அம்மை கட்டிகள் வராமல் இருக்க வேப்பிலை குளியல் அருமருந்து. தோலை மென்மையாக்கும் தன்மை வேம்புக்கு உண்டு என்பதால் இது ஆயுர்வேத மருத்துவத்தில் 'தோலின் ராணி' என்று அழைக்கப்படுகிறது.வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி, வாயில் உள்ள கிருமிகளை நீக்கலாம். வேம்பில் உள்ள தாவர வேதிக்கூறுகளான நிம்பிடின், நிம்பின். நிம்போலைடு, அசாடிராக்டின், காலிக் அமிலம், எபிகா டெசின், கேட்டசின் மற்றும் மார்கோலோன் ஆகியவை மனித வாயில் உள்ள கிருமிகளை முற்றிலும் ஒழிக்கும் திறன் வாய்ந்தவை.அவ்வப்போது, டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில் வேப் பிலைச்சாறு குடித்து வந்தால் உடலின் செல்கள் புதுப்பிக்கப்பட்டு இளமையான பொலிவு ஏற்படும்.சில வாரங்களுக்கு காலையில் வேப்பங்கொழுந்தை மென்று சாப்பிடுவது ரத்த சர்க்கரை உயர்வை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Sep 12, 2025

பாலூட்டி வகை விலங்கினம் பாண்டா கரடி.

பாண்டா என்பது பாலூட்டி வகை விலங்கினம். ஆசிய நாடான சீனாவின் மத்திய பகுதி மலைகளில் அடர்ந்த மூங்கில் காடுகளில் மட்டும் காணப்படுகிறது. சிறிய விலங்கு மற்றும் மீன்களை உணவாக்கும். அதே வேளை பெருமளவில் மூங்கிலையும் தின்னும், ஒரு நாளில் 12 மணி நேரம் உண்டு வயிற்றை நிரப்பும். நாள் ஒன்றுக்கு, 12 கிலோ மூங்கிலை உண்பதாக புள்ளி விபரம் உள்ளது.பாண்டாவின் அறிவியல் பெயர், ஐலுரோபோடா மெலனோகா இதை கருப்பு, வெள்ளை காயும் பூனை என்றும் கூறுவர். இது ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். எடை,135 கிலோ வரை இருக்கும்.38 ஆண்டுகள் வரை வாழும் பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பிறந்து எட்டு வாரங்களுக்குப் பின் தான் கண்களைத் திறக்கும். அதுவரை பார்க்கும் திறன் இருக்காது.பெண் பாண்டா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு குட்டிகள் வரை ஈனும் குட்டி தாயின் அரவணைப்பில்13 மாதங்கள் வரை இருக்கும். சீன அரசின் பாதுகாப்பு முயற்சியால் பாண்டா எண்ணிக்கை காடுகளில் அதிகரித்து வருகிறது.

Sep 11, 2025

மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் நோய்க் கிருமிகளின் பரவல்ஏற்படும்.

நீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் ஏற்படும் முக்கியப் பிரச்னை நோய்க் கிருமிகளின் பரவல் தான். இவற்றை நீரிலிருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆபத்தான நுண்ணுயிர்கள் நெகிழிகள் மீது தங்கி, பெருகிப் பரவும். இது சுகாதாரத்திற்கு ஆபத்து. ஆனால், நுண்ணெகிழிகளின் இந்தத் தன்மை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுகள் நீக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீர் பாதுகாப்பாக உள்ளதா என்று கண்காணிப்பது அவசியம். இந்த நீரின் மாதிரிஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதில் ஆபத்தான கிருமிகள் உள்ளனவா என்று ஆராயப்படும். இதில் உள்ள சிக்கல் என்னவென் றால், இந்த ஆய்வு24 மணி நேரத் திற்கு ஒருமுறை மட்டுமே செய்யப் படும். ஒவ்வொருமணிநேரமும்கண்காணிக்கும்நடைமுறைஇல்லை.ஏனென்றால், கழிவுநீரில் கிருமிகள் இருந்தாலும் அவை பெருகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.கிருமிகள் குறிப்பிட்ட எண்ணிக் கையில் இருந்தால் தான் சோதனை யில் தெரியவரும். எனவே அவை சீக் கிரம் பெருகுவதற்கு வழி செய்தால் அவற்றைக் கண்டறிவது எளிதாகிவிடும். இதை உணர்ந்த ஸ்காட்லாந்து பல்கலை ஆய்வாளர்கள், நுண்ணெகிழிகளை இவற்றுக்குப் பயன்படுத்தினர். அதாவது, நுண்ணெகிழிகளாலான2 மி.மீ., அகலம் கொண்ட சிறிய உருண்டைகளை வடிகட்டியில் வைத்து நீரில் இட்டனர்.கிருமிகள் உருண்டைகள் மீது படிந்து வேகமாக வளரத் துவங்கின.  அவற்றை ஆராய்ந்து அவை எந்த வகையைச் சேர்ந் தவை என்று  கண்டறிந்தனர்.எனவே மிகக் குறுகிய காலத்தில் கிருமிகளைக் கண்டறிய இப்படியான நுண்ணெகிழிகளைப் பயன் படுத்த முடியும் என்று ஆய்வுப்  பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Sep 10, 2025

வெப்பம் ஏற்படுத்தாத ஒளி.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் 'பயர்ப்ளை' என அழைப்பர். இது 'கோலியாப்டிரன்' குடும்பத்தைச் சேர்ந்தது. மின்மினிப் பூச்சிகளில் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. இவை வெளிப்படுத்தும் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது.இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும் இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.

1 2 ... 92 93 94 95 96 97 98 ... 136 137

AD's



More News