25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்! மதுரையில் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்! மதுரையில் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப். 17) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தங்கள் வீட்டு விழாவாகக் கருதி லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டுள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரைக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை நேரில் தரிசிக்க கோயில் மேல்தளத்தில் 9,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்குப் பிறகு பொதுத் தரிசனத்திற்காக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த சிறப்புமிக்க கும்பாபிஷேகத்தை காண மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News