உலக பாரா துப்பாக்கி சுடுதல்: இந்திய அணிக்கு தங்கம்.
தென் கொரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான ‘ஆர்-2’ 10 மீ., ‘ஏர் ரைபிள்-எஸ்.எச்.1’ பிரிவு இறுதிப்போட்டியில், அவனி லெஹரா (629.4), மோனா அகர்வால் (626.8), மில்லி ஷா (622.4) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.
பெண்களுக்கான தனிநபர் ‘ஆர்-2’ 10 மீ., ‘ஏர் ரைபிள்-எஸ்.எச்.1’ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் 250.0 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், அவனி லெஹரா 229.4 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். சிறப்பாக செயல்பட்ட மோனா அகர்வால், லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் (2028) போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய நட்சத்திரமாகி உள்ளார்.
ஆண்கள் அணிகளுக்கான ‘ஆர்-1’ 10 மீ., ‘ஏர் ரைபிள்-எஸ்.எச்.1’ பிரிவு இறுதிப்போட்டியில், ஆனந்த கிருஷ்ணா (620.8), ஸ்வரூப் மஹாவீர் (618.0), ராகேஷ் (617.5) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,856.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
0
Leave a Reply