25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 13, 2025

பென்குயின்  ('பனிப்பாடி' ) பறவை

பென்குயின் பறவையினத்தை சேர்ந்தது; ஆனால் பறக்க இயலாதது. குள்ள உருவில் இறக்கையை விரித்தபடி சிறிய அடியெடுத்து, தலையை அசைத்தபடி நடக்கும். அமைதியாக காட்சி தரும் உயிரினம் பென்குயின்.இசைக்கருவியான டிரம்பட் போல் ஒலி எழுப்பும். இந்த பறவைக்கு,'பனிப்பாடி' என தமிழ் பெயர் உள்ளது.அதிகம் குளிருள்ள பூமியின்துருவ பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாக வசிக்கிறது; உலகம் முழுதும்,19 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் தெற்கில் மித வெப்ப மண்டல பகுதியிலும் வசிக்கிறது. இந்த பறவை நீந்துவது, வானில் பறப்பது போன்றே காட்சியளிக்கும்.வாழ்நாளின்,75 சதவீதம் நேரத்தை நீருக்கடியில் உணவு தேடுவதில் செலவிடும். அலகின் முன்பகுதி வளைந்து காணப்படுவதால் மீன்களை தவற விடாமல் பிடித்து உணவாக்கிவிடும்.உடல் அமைப்பால் மணிக்கு,25 கி.மீ., வேகத்தில் நீந்தும் திறன் உடையது. நீருக்கடியில் சுவாசிக்க முடியாது; ஆனால், அதிக நேரம் மூச்சை அடக்கும் திறன் பெற்றுள்ளது. கடல் உயிரினமான திமிங்கலம் போல் தோலின் அடிபகுதியில் கொழுப்பு சூழ்ந்திருக்கும். ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் இணைந்து வெப்ப நிலையை சமன் செய்து கொள்ளும்.பென்குயின் நன்னீரை குடிக்காது; கடல் நீரை மட்டுமே குடிக்கும். உடலில் உள்ள ஒருவகை சுரப்பியால், குடிக்கும் நீரில் உப்பை பிரித்து வெளியேற்றி விடும்.முட்டையிட பாதுகாப்பான இடத்தை பெண் பறவை தேர்வு செய்யும்.பின், ஆண் துணையை தேடி சேர்ந்து வாழும். இந்த சொந்தம், பல ஆண்டுகள் நீடிக்கும். பொதுவாக, இரண்டு முட்டைகள் இட்டபின், பெண் பறவை இரை தேட சென்றுவிடும்; ஆண்தான். அந்த முட்டையை அடை காக்கும்.முட்டை பொரிந்து, குஞ்சுகள் வளர்ந்ததும், கடலில் உணவு தேடும்.குட்டிக்கரணம் அடிக்கும் இயல்பு உடையது பென்குயின். அலைகள் மீது மிதக்கவும் செய்யும். இதற்கு, முதன்மை எதிரி சீல் என்ற கடல் நாய்.மனிதன் எளிதில் அண்ட முடியாத துருவப் பகுதிகளில் பென்குயின் வசித்த போதும், எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல்25ம் தேதி, உலக பென்குயின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த உயிரினத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகம் முழுதும் நடத்தப்படுகிறது.

May 12, 2025

ISRO விஞ்ஞானிகளை உருவாக்கஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு விண்ணப்பம்.

ISRO என்பது பற்றித் நமக்குத் தெரியும். ஆனால் தெரியாத ஒன்று உண்டு. பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் +2 தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணக்கில் தலா 65% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள். இதுவரை நான் என் பள்ளியில் 45 மாணவர்களை உருவாக்கியுள்ளேன். இது பெருமைக்காக அல்ல. இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து அவர்களும் சில ISRO விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.இது பற்றிய விவரம் வேண்டுவோர் திரு. பாலமோகன். ISRO SCHOOL EDUCATIONAL DIRECTOR அவர்களை78928 98919 மற்றும் 94814 22237 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

May 11, 2025

முகம் மறைக்காமல் தும்முவதனால் நோய் பரவும்.

சிறுவர்கள் முகம் மறைக்காமல் தும்மினால் பெரியவர்கள் அதனைக் கண்டிப்பதுண்டு. பெரியவர்கள் ஏன் இப்படிக் கண்டிக்கின்றனர்? ஒருவர் தும்மும் போது, அவர் நோயுற்றிருந்தால் இலட்சக் கணக்கான நோயணுக்கள் அவருக்குள்ளிருந்து புறப்பட்டு சுற்றும் பரவும். என்பது கண்டறிந்துள்ளனர். முகம் மறைத்து தும்முவதனால்  நோய் பரவும் ,தீவிரத்தைக் குறைக்க இயலும். தும்மும் போது முகம் மறைத்து தும்மவும்.

May 11, 2025

“பொழுதுபோக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிக்கு வரி விதிக்கப்படுகிறது "

இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பெங்களூரு ஐஐஎஸ்சியின் பேராசிரியரான பேராசிரியர் மயங்க் ஸ்ரீவாஸ்தவாகேட்கிறார்:"இந்தியாவிற்கு பணப் பற்றாக்குறை இல்லை. இந்தியர்களுக்கு பணப் பற்றாக்குறை இல்லை. எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான தொலைநோக்குப் பார்வை நமக்கு இல்லை."ஐபிஎல் 2023 வருவாய்: ₹11,770 கோடி,பிசிசிஐ உபரி: ₹5,120 கோடி3 ஆண்டு ஐபிஎல் லாபம்: ₹15,000 கோடி,சாத்தியமான வரி (40%): 10 புதிய ஐஐடிகளைக் கட்ட போதுமானது. உரிமையாளர் லாபம்: ₹800–1,200 கோடி/ஆண்டு → வரி சாத்தியம்: ஆராய்ச்சிக்கு ₹6,000 கோடி/ஆண்டுஆனால் இங்கே முரண்பாடு:பிசிசிஐ வருமான வரி செலுத்துவதில்லை (தொண்டு நிலை),ஆராய்ச்சி ஆய்வகங்கள் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துகின்றன. பாலிவுட், மத அறக்கட்டளைகள், விளையாட்டு லீக்குகள் = வரிச் சலுகைகள்டாக்டர் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்: “பொழுதுபோக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிக்கு வரி விதிக்கப்படுகிறது.”ஆராய்ச்சி நிறுவனங்கள் நிதிக்காக போராடும் போது,கிரிக்கெட் வாரியம் ஏன் வரி விலக்கு பெறுகிறது? நாம் ஏன் நுண்ணோக்கிகளுக்கு வரி விதிக்கிறோம், ஆனால் போட்டி டிக்கெட்டுகளை ஏன் செலுத்துவதில்லை?இந்தியா உண்மையிலேயே ஒரு தொழில்நுட்ப சக்தியாக மாற வேண்டும் என்று கனவு கண்டால், நமது பணம் இங்குதான் செல்ல வேண்டுமா?நாம் சிக்ஸர்களுக்கு ஆரவாரம் செய்கிறோம், ஆனால் அறிவியலுக்கு ஆரவாரம் செய்கிறோம்?இந்தியா தனது முன்னுரிமைகளை நிர்ணயிக்க வேண்டிய நேரம்..

May 09, 2025

கடல் ஓநாய்கள்.

கனடாவில் தென்கிழக்கு அலாஸ்காவில் காணப்படும் கடல் ஓநாய்கள் இனம் தனித்துவமான ஒன்றாகும்.நிலப்பரப்பில் காடுகளில் காணப்படும் காட்டு ஓநாய் களும், கடலோரத்தில் காணப்படும் கடல் ஓநாய்களும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால்கூட கடல் ஓநாய்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவை.பொதுவாக, காட்டு ஓநாய்கள் சிறு விலங்குகளை வேட் டையாடி உணவாக உட்கொள்ளும். ஆனால், கடல் ஓநாய் கள் நீண்ட தொலைவுக்கு தண்ணீரில் நீந்தும் திறன்கொண் டவை. இவை கடலில் தீவுகளுக்கு இடையில் நீந்தி மீன்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுகின்றன.இரையை தந்திரமாக வேட்டையாடுவதில் திறன் வாய்ந் தவை. உயிரினங்களுக்கு எந்த சந்தேகமும் வராத அள வுக்கு திருட்டுத்தனமாக நகரும். அவற்றின் முதுகு மற்றும் உடல் மட்டுமே நீரில் மூழ்கி இருக்கும்..அவற்றின் காதுகள், கண்கள் மற்றும் மூக்கு நீரின் மேற்பரப்பில் சிறிதளவு வெளியே தெரியும். இரையை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலில் பிடித்துவிடும்.கடலில் சில நேரங்களில் மீன்கள் கிடைக்காதபோது இவை கடல் பகுதியை ஒட்டிய நிலப்பரப்புக்கு வந்து கருப்பு வால் மான் மற்றும் கடமான் இனங்களை வேட்டையாடி உண்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ள னர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கடல் ஓநாய் கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம் பெற் றுள்ளன.

May 09, 2025

புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி.

உலக அச்சுறுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், கண்டறிந்து விட்டால் விரைவாக சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றி விட முடியும்.நாம் மூச்சை வெளிவிடும் போது அதில் வெளிப்படுகிற ஒருவித வேதிப்பொருளை வைத்து நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சீனாவைச் சேர்ந்த ஜிஜி யாங் பல்கலை கூறியுள்ளது.நம் உடலில் கொழுப்பானது உடைக் கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது, ஐசோப்ரின் என்னும் வேதிப் பொருள் வெளியாகும். இது நாம் விடும் மூச்சில் கலந்து உடலை விட்டு வெளி யேறி விடும். இதனுடைய அளவு குறை வாக இருந்தால், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புஉண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வேதிப்பொருள் களைக் கண்டறிவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. இது தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கடைசியில் பிளாட்டினம், இண்டியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் கலந்த ஒரு சென்சாரை உருவாக்கினர். இது மிகக் குறைந்த அளவு வெளியேறுகின்ற ஐசோப்ரினைக் கூடக் கண்டறிந்து விடும்.விஞ்ஞானிகள் 13 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஐந்து பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள். இவர்களின் வெளியிடும் போது, நுரையீரல் புற்றுநோய் உள்ள மூச்சை சென்சார் கொண்டு ஆராய்ந்தபோது நுரையீரல் புற்றுநோய் உள்ள வர்களை விட இல்லாதவர்களுக்கு  அதிகமான ஐசோப்ரின் வெளியாவது தெரிந்தது.இந்த சென்சாரை மேலும் செம்மைப் படுத்தி, நவீனமயமாக்கி, எளிமையான ஒரு கருவியாக வடிவமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.அவ்வாறு உருவாக்கப்பட்டு விட்டால் நுரையீரல் புற்றுநோயை, பெரிய பொருட் செலவு இல்லாமல், நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல்மிகச் சுலபமாக கண்டறிந்து விடலாம்.

May 09, 2025

லாட்லி அறக்கட்டளை

,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும். திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். லாட்லி அறக்கட்டளை 9871727415, 9873182468 9717231663 இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்கள் உதவலாம். கேலி செய்வதற்கு பதிலாக மக்களுக்கு செய்தியை அனுப்புங்கள். தெரிந்து கொள்ள பள்ளி புத்தகம் விரும்பும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  தொடர்பு கொள்ளவும் 9460031554                           8889995733 8889995731 9826813756 9752033255 9826858785 7489587851 9098321420 9879537809 9825700070 9727215130 9879200245 8107371224 7746851284 9001236414 9549677770 9314459474 9828926151 9328620003 9826267649 9888989746 9653150004 8889712233 9926311234 8889995733 8889995731 9826813756 9752033255 9826858785 7489587851 9098321420 9879537809 9825700070 9727215130 9879200245 8107371224 7746851284 உங்களால் முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும். உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும். அவசியம் படித்து மற்றவர்களுக்கும் அனுப்பவும்..... ஆனால் நீங்கள் ஒரு msg ஐ அனுப்பினால் அது மிகவும் நல்லது...!!!மணிராமன்.

May 09, 2025

*GRT ஜூவல்லர்ஸ் கல்வி உதவித்தொகை – 2025*

தகுதி:மாணவர்கள் 2025 இல் +2 முடித்து பட்டப்படிப்பில் சேர்பவராக இருத்தல் வேண்டும்.+2 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 70 % பெற்றிருத்தல் வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை.தமிழ் நாடு / ஆந்திரா / தெலுங்கானா / கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க: https://www.grtendowment.comமேலும் விவரங்களுக்கு:  Mobile : 91501 10384.: மின்னஞ்சல்: grtjewellersendowment@gmail.comதொடர்பு கொள்ள வேண்டிய நேரம் - 10:30 AM மற்றும் 3:30 PM.தகுதிவாய்ந்த மாணவர்கள் GRT இலவச மாணவர் விடுதிக்கும் விண்ணப்பிக்கலாம்.

May 08, 2025

முயல் அதன் குட்டிகளை மறைவான பகுதியில் பாதுகாப்பாக வளர்க்கும்.

முயல் குட்டிகள் பிறக்கும்போது அவற்றின்உடலில் ரோமங்கள் இருப்பதில்லை. அவற்றுக்கு காதும் கேட்காது, அவைகளால் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவைகளின் காதுகளும், கண்களும் மூடிய நிலையிலேயே இருக்கும். அவை பிறந்து மூன்று வாரங்கள் வரை ,தாய் முயலின் நெருக்கமான அரவணைப்பிலேயே வாழும். அதுவும் மறைவான பகுதியில் குட்டிகளை பாதுகாப்பாக வளர்க்கும்.

May 08, 2025

காலை வேளைகளில் காபி குடிப்பது, உட லுக்கு பல வகைகளில் நன்மை தரும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ட்யுலேன் பல் கலை மேற்கொண்ட ஆய்வில், மாலை வேளைகளை விட காலை வேளைகளில் காபி குடிப்பது, உட லுக்கு பல வகைகளில் நன்மை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 2 ... 94 95 96 97 98 99 100 ... 118 119

AD's



More News