25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் .

ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் வரும் செப். 19 முதல் அக். 4 வரை 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.

இந்தியா சார்பில் 35 வகையான விளையாட்டுகளில் 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் களமிறங்குகின்றனர். தடகளத்தில் அதிகபட்சமாக 79 பேர் (36 வீரர்கள், 43 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். இவர்களுடன் 265 உதவியாளர்களும் சென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு வரலாற்றில், கடந்த முறை (2022) 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என அதிகபட்சமாக 106 பதக்கங்களைக் கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

இதேபோல, இம்முறையும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் கூறுகையில், “ஆசிய விளையாட்டில் இம்முறை டென்னிஸில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் உறுதி. ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்கள் கிடைக்கும்” என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News