25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


AI அசுர வளர்ச்சியால் ,25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI அசுர வளர்ச்சியால் ,25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel

25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

செலவுகளை குறைக்கும் நிறுவனத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக ,இன்டெல் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதமே 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும்25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் சிப் சந்தையில் முன்னணி இடத்திலிருந்த இன்டெல், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது. 1990களில் மைக்ரோபிராசஸர் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஸ்மார்ட்போன்களின் எழுச்சியை இந்நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதுவே இன்டெல் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

தற்போது உலகின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் பிரிவில், என்விடியா (Nvidia) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இன்டெல் பின்தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.AI தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இன்டெல் நிறுவனத்தின் சிப் தயாரிப்புகள் இந்தச் சந்தையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News