25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


ராஜுக்கள் கல்லூரியில் 76 ஆவது குடியரசு தின விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜுக்கள் கல்லூரியில் 76 ஆவது குடியரசு தின விழா.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஷ்ணு சங்கர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் அரிமா சங்கத் தலைவர் சூரியநாராயணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் இன்னுயிரைத் துறந்து உயிர் நீத்த விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்து குடியரசு நாளை போற்றுகின்றோம். மாணவர் சமுதாயம் மது, போதை ஆகியவற்றிற்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். தங்களது உடல் நலனை மனதில் கொண்டு சாலை போக்குவரத்து போன்ற முக்கிய இடங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு உடல் தகுதியை பேணிக் காக்க விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை மாணவர்கள் சுஜித் கண்ணன், நவீன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடத்தை மாணவிகள் பாப்பாத்தி, ராக்கம்மாள் மற்றும் மற்றும் சக்தி ஆகியோர் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுக்கோப்பையும்,   பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாராத்தான் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் மற்றும் அபிநயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி சத்யா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் ராஜபாளையம் அரிமா சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News