உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. Dr.D எபி ஜேம்ஸ் நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் வரவேற்புரை வழங்கினார். மாணவர்களுக்கு உணவுப்பொருட்களின் கலப்படம் மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விளக்கினார். Dr.S. ராமகிருஷ்ணன், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.
நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையேச் சார்ந்ததாகும். ஆனால் இன்றைய நவீன காலத்தில் மக்கள் வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திரு.S. சுப்பிரமணியம், மாநில தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. உணவு மூலம் பரவும் நோய்கள் ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன.உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செயற்கை முறையில் தயாரிக்கப்படும் காய்கறிகளை நாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்று வலியுறுத்தினார்கள். சிறுதானிய உணவுகளையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை செல்லாதவனே உண்மையான செல்வந்தர்கள். இதற்கு காரணம் நம்முடைய பாரம்பரிய உணவு முறையே ஆகும். நம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களே நமக்கு அதிக ஆரோக்கிய தரும் உணவாகும். இந்நிகழ்ச்சியின் இறுதியாக எம். கார்த்திகா , மூன்றாம் ஆண்டு மாணவி நன்றியுரை வழங்கினார். இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் என்.காவியா, மூன்றாம் ஆண்டு மாணவி தொகுத்து வழங்கினார்.
0
Leave a Reply