25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 52 வது விளையாட்டு தின விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் 52 வது விளையாட்டு தின விழா.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 52 வது விளையாட்டு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக  விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் சி.ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமூகத்தில் மாணவர்கள் சிறப்பான ஒரு இடத்தை பெற வேண்டும் என்றால் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சமுதாயத்தில் சாதித்து காட்ட முடியும். திறமையை வளர்த்துவதற்கு வெளிப்படையாக விளையாட்டுத் திறமையை முன்னிறுத்தி தனது உடல் நலத்தையும் எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் எதிர்கால வாழ்க்கை குறித்தும் ,உடல் நலம் பேணுதலின் அவசியம் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், வாழ்வியலுக்குத்  தேவையான நெறிகாட்டுதல்கள் குறித்தும் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.

கல்லூரிச் செயலர் திரு.கே.ஜி.பிரகாஷ் அவர்கள் தலைமையுரையாற்றினார். தலைவர் திரு.கே.ஆர்.தர்மகிருஷ்ணராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி.ஆர்.ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். விளையாட்டு நிகழ்வு ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் முனைவர் எல். முத்துக்குமார் வாசித்தார். 

 ஒட்டுமொத்த சேம்பியன் கோப்பையை மாணவர் பிரிவில்நேரு அணியும், மாணவியர் பிரிவில் காவேரி அணியும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மற்றும்  நடைபெற்றன. நிறைவாக உடற்கல்வி உதவி பேராசிரியை திருமதி அபிநயா நன்றியுரை கூறினார். கல்லூரி ஆட்சி என்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகிய கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News