25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி 78 வது சுதந்திர தின விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி 78 வது சுதந்திர தின விழா.

.இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இராஜபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் திருமதி ஆனந்தி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின உரையாற்றினார். அவர் தனது உரையில், நாட்டுக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்தார். அதோடு இன்னும் வெளியில் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் கண்டறிந்து அவர்களையும் போற்ற வேண்டும் என்றும், உலகையே அச்சுறுத்தி வரும் நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் எடுத்து கூறினார். அதோடு நம் ஊரின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முன் வரவேண்டும் என்றும், குறிப்பாக முடங்கியார் ரோட்டில் அமைந்துள்ள கல் மண்டபத்தை  சுத்தம் செய்வதற்காக உங்களைப் போன்ற மாணவர்களோடு இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொறுப்பு திரு.ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திருமதி சத்யா வரவேற்புரையும், பிரசன்னா நன்றியுரையும் வழங்கினார்கள்.

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டி மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து முடங்கியார் ஆற்றுப்பாலம் வரையிலும், மாணவிகளுக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் வைத்து நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் நவீன் முதல் இடத்தையும் மற்றும் பெண்கள் பிரிவில் மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவி அன்னபூரணி முதல் இடத்தையும் பெற்று, சிறப்பு விருந்தினரால் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்‌ திரு.முத்துக்குமார் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் திரு. சக்திவேல் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News