25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமீபத்திய நிகழ்வுகள்

Feb 06, 2024

கோவை ஈஷா யோக மையம் சார்பில் ஆதியோக ரத யாத்திரை

இராஜபாளையத்தில் ஆதியோகி ரத யாத்திரையை பக்தர்கள் வரவேற்றனர். இரண்டு நாட்களாக மக்கள் தரிசனத்திற்காக ரத பவனி ராமமந்திரம், ஜவஹர் மைதானம், பி.எஸ்.கே. நகர் ,சொக்கர் கோயில், பெரிய சாவடி, சங்கரன்கோவில் வழியாக சுரண்டை சென்றது. ஏற்பாடுகளை ஈஷா அமைப்பினர் செய்திருந்தனர்.

Feb 06, 2024

இராஜபாளையம் சேவையாளர் R. சங்கர் கணேஷ்க்கு பாராட்டு சான்றிதழ்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 26.01.2024 அன்று வியாழக்கிழமை குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் தேசம் முழுவதும் விவசாயம், கால் நடைகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும் இராஜபாளையம் R. சங்கர் கணேஷ்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வாழ்த்த - 94424 79611

Feb 02, 2024

"FOCUS GIVES SUCCESS "

“FOCUS GIVES SUCCESS ”என்பதைப் பற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையத்தில் Dr.A.வேலுமணி (Creater Thyrocare) சிறப்புரை ஆற்றினார்.  அப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர். தன் பள்ளிப் படிப்பை தன் கிராமத்தில் உள்ள ஒற்றை ஆசிரியரிடம் படித்தவர். காலேஜ்க்கு பீஸ் கட்ட பணமின்றி B.com படித்தார். பி.காம் ஏன் படிக்கிறாய் இன்ஜினியரிங் படிக்கலாமே என்று கூறிய ஆசிரியரிடம் பண வசதி இல்லை என்று கூறியுள்ளார். அந்த புரொபசரும் அவருக்காக 100 ரூபாய் கட்டியதால்  B.Sc யில் சேர்ந்து படித்தார். அனைத்து பாடங்களிலும் full mark எடுத்து சாதித்து உள்ளார். கோயம்புத்தூரில் 150 ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்திருந்தார். முதலில் வேலைக்கு சென்று பின் விஞ்ஞானி ஆக மாறி, எழுத்தாளராகி, பின் வியாபாரம் செய்து வெற்றி பெற்றார் .   வெறும் 500 ரூபாய் எடுத்துக் கொண்டு மும்பை சென்று பல வருடங்கள் அயராது உழைத்து இன்று 5000 கோடி மதிப்புள்ள தைரோ கேர் நிறுவனத்தின் அதிபராகி இருப்பதை உலகமே வியந்து பார்க்கிறது. தமிழ் மீடியத்தில் கல்வியைக் கற்று இன்று உலக அளவில் போற்றும் பெரிய பணக்காரராக மாறியுள்ளார். தைரோ கேர் நிறவனத்தின் நிறுவனர் வேலுமணி.ஆங்கிலம் ஒரு மொழியே தவிர, அது Knowledge இல்லை என்று கூறினார். வாழ்வில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும், குழந்தைகள் கஷ்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கொடுங்கள். நான் சிறு வயதில் அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை என்றார். கஷ்டப்படாத பிள்ளைகள் பிற்காலத்தில் பிரகாசிக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு எதுவுமே கொடுக்காதீர்கள். ஆனால் அவர்களை சுதந்திரமாக விடுங்கள். அதுவே பெற்றோரின் கடமை. கடன் வாங்காதீங்க. EMI கட்டியே காலத்தை வீணடித்து விடுவீர்கள். யாரோ ஏமாத்திட்டாங்க என்று ஒரு நாளும் வருத்தப்படக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும் என்றால் யாரையும் கலந்தாலோசிக்காமல் முடிவெடுங்கள். ஏழைகளுக்கு அடைய வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் பணக்காரர்களுக்கு இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும். தற்கால இளைஞர்களுக்கு, தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்களை கூறி, சிறப்பாக உரையாற்றினாார். இராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராகவும், பதவி ஏற்றார். இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்து பதவிப் பிரமானம் செய்து வைத்தார்  .Rtn. M. பார்த்தசாரதி President அவர்கள் தலைமையில், Rtn. K. R. ஆனந்தி  Secreatary அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

Jan 29, 2024

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு

இராஜபாளையம் வடக்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் இராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு   போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு தெருக்கூத்து, நாடகம், நடைபெற்றது. ராஜூக்கள் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மது போதையில் லைசென்ஸ் இன்றி, அதிவேகமாக வாகனம் ஒட்டுவது. வாகனங்களை நடுவீதிகளில் நிறத்துவதுபற்றியும், சீட்டு பெல்ட்அணிவதன் அவசியம் குறித்தும் ஊமை நாடகம் மூலம்பொது மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து விதிகள் ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். ...இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள்,இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.உயர் கற்றை ஒளியினைத் தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.எதிரே வாகனங்கள் வரும் போதும்,அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.

Jan 29, 2024

இராஜபாளையத்தில் மன அழுத்தத்தை போக்கும் புத்தாக்க பயிற்சி

புத்தாக்க பயிற்சிஇராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு,மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமையில் மன அழுத்தத்தை போக்கும் புத்தாக்க பயிற்சி நடந்தது. போக்குவரத்து சம்பந்தமான வழிமுறை பயிற்சிகள் வழங்கினர். ரத்த தானம்ஜவுளி வர்த்தக சங்க தலைவர் கணேசன் தலைமையில் இராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்பர சுகாதார நிலையம், இராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

Jan 27, 2024

குடியரசு தின விழா

குடியரசு தின விழாவை ஒட்டி இராஜபாளையம் நகராட்சியில் தேசிய கொடியை நகராட்சி தலைவர் பவித்ரா ஏற்றி வைத்தார். நகராட்சி அலுவலகர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இனிப்பு வழங்கப்பட்டது. இராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி, ராஜீக்கள் கல்லூரி, ந.அ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம் ஸ்ரீராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளி, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் சிபிஎஸ்இ. பள்ளி, மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம், தர்மாபுரம் காந்திஜி வாசகர் சாலை நூலகம், சார்பில் விழாவை சிறப்பாக கொண்டாடி போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின் இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை சிறப்புறச் செய்தனர்.

Jan 26, 2024

ராகவேந்திரா பிருந்தாவன பிரதிஷ்டை

 ஜனவரி 24 ,காலை மூன்றாம் கால யாக பூஜை அபிஷேகம் தொடங்கி காலை 10.00 மணிக்கு ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவன பிரதிஷ்டை நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்காரம், அன்னதானம் நடைபெற்றது. இரவு பிரகலாதர் வீதி உலா தீப ஆராதனை நடந்தது. இராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தில் ராகவேந்திரா பிருந்தாவன பிரதிஷ்டை விழா நடந்தது.

Jan 23, 2024

பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா

ராஜபாளையம் டி.பி.,மில் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் பழைய பஸ் ஸ்டாண்டு பஸ்ஸ்டாப் அருகே டைகர் வுட் பர்னிச்சர் ஷோரூம் பாம்பே குரூப் அதிபர் இஸ்மாயில் தலைமையில், நகராட்சி தலைவர் பவித்ரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கடை உரிமையாளர் டைகர் சம்சுதீன் வரவேற்க,விழாவில் சென்னை தொழிலதிபர் ராம்சிங் ராஜா, பாபி மேட்ரஸ் நிர்வாக இயக்குனர் பாலமுருகன், எம்.எல்.ஏ., தங்க பாண்டியன், எம்.பி., தனுஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.ராஜன், வைமா கல்வி குழும தலைவர் திருப்பதி செல்வன், நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Jan 18, 2024

விவசாயிகள் வேதனை, கண்மாய் ஷட்டர் கசிவுகளால், வீணாகும் தண்ணீர்.

தொடர் மழையால் கண்மாய் பெருகி மறுகால் பாய்கிறது. இதனால் பாசனப்பகுதி, நெல்விவசாயிகள் தற்போதைய தண்ணீர் தேவைக்கு பிரச்சனைஇன்றி உள்ளனர். இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைக்குளம்கண்மாயில் ஷட்டர்களில் கசிவால் தண்ணீர் வீணாக வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோடை விவசாயத்திற்கு தேக்கி வைக்க வேண்டிய கண்மாய் நீர் கலுங்கல் அருகேஉள்ள இரண்டு ஷட்டர்களில் உள்ள கசிவுகளால் கண்காணிப்பின்றி பெருமளவு வெளியேறி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Jan 18, 2024

ராம்கோ குரூப் பொங்கல் விழா

இராஜபாளையம் மில்ஸ் ஊழியர்கள் மனமகிழ்மன்ற விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் நிர்மலா ராஜீ, ஸ்ரீகண்டன்ராஜா, ராமராஜீ சர்ஜிகல் நிர்வாக இயக்குனர் ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிஷன் இயக்குனர் மோகன் ரெங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 15 16

AD's



More News