ஜீன் 1-ம் தேதி முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளி 10-JUNE தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பின், நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருகை தந்தனர். சில பள்ளிகளில் வந்த அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் ,பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர். எல்.கே.ஜி. யூ.கே.ஜி, மழலை வகுப்புகளுக்கும் குழந்தைகள் வந்தனர்.
இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், தேவதானம், பகுதிகளில் நீர் வரத்து காரணமாக கரும்பு சாகுபடி அதிகம். எனவே இங்கு சாகுபடியாகும் கரும்புகளை விருதுநகர். தென்காசி மாவட்ட எல்லையில் செயல்பட்ட தனியார் கரும்பு ஆலைக்கு ஒப்பந்த முறையில் வழங்கி வந்தனர்.இந்நிலையில் விவசாயிகளின் 2018 2019 ம் ஆண்டிற்கான கரும்பு அனுப்பியதில் வட்டியுடன் நிலுவைத் தொகை ரூ.30 கோடி இதுவரை நிலுவையில் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஆலை நிர்வாகம் சார்பில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அசல் தொகையான ரூ.21 கோடியில் பாதியை விவசாயிகள் கணக்கில் செலுத்தியுள்ளனர்.மீதமுள்ள தொகையை தவனை முறையில் செலுத்துவதாக கூறியதை அடுத்து அடுத்த வருடத்திற்கான ஆலை திறப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசல் தொகை முழுவதையும் விவசாயிகளிடம் வழங்கிய பின் ஆலையை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் அருகே சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நகரியாறு தண்ணீரை கொண்டு அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை 36 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.இந்த அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேவதானம், கோவிலூர், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் அமைந் துள்ள பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், முகவூர் கண்மாய் வரை 20-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சாஸ்தா கோவில் அணையின் நீர் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும்.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் 'மதுரை கோட்டத்தில்12வது ரயில் மின்தட பராமரிப்பு பணி மனை ராஜபாளையத்தில் துவக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது. விருதுநகர் - தென்காசி பிரிவில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் மின்சார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் ராஜபாளையத்தில் கடந்த மே 24 ல் ரூ 1.5 கோடி செலவில் பணிமனை உருவாக்கி, துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பாதையில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று நவீன உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம், கோவிலூர், சேத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்பேரில் கொள்முதல் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் முன்னிலையில்தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 300 நெல் மூடைகள், கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலம் தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்துநெல்கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தஅதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் மலைப்பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 17 அடியை எட்டி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நம் நகரில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை காரணமாக அக்னி நட்சத்திர வெயிலிலிருந்து நாம் தப்பித்துள்ளோம். இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழைபெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக பகலிலும், இரவு நேரத்திலும், ஒரளவு இடியுடன் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதுடன், வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. குடிநீர் தேக்கத்தில் நீர் திருப்பி விடப்படும் .ஆற்றின் அதிக நீர்வரத்தால் அருகாமையில் உள்ள புதுக்குளம் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து காணப்பட்டது.கோடை மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு , இத்தொடர் மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.
இராஜபாளையம் புதுப்பாளையம் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா இரண்டு நாள் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மதுரை ராஜா கடைதெரு, பிஎஸ்கே பார்க். அங்கையராஜா தெரு, வளையல் செட்டியார் தெரு, சிதம்பர மூப்பனார் தெரு, வழியே வீதி உலா வந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 397 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று ,திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.44 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டுமான பணிகள் 15 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தற்காலிக பஸ் ஸ்டாப் இயங்கி வருகிறது.பயணிகள் வெயில், மழையில் இருந்து ஒதுங்க தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. அவை மழை வெயிலில் ஒதுங்க போதிய அளவு இல்லை. தற்போது கான்கிரீட் தூண்களுடன் அமைத்து பஸ்ஸ்டாப் கட்டுமானத்திற்கு பணிகள் தொடங்கின. பணிகளை முடிக்க எதிர்பார்க்கும் சூழலில் கிடப்பில் போட்டுள்ளதோடு, இதற்காக அள்ளப்பட்ட மண் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் முன்பு இடையூறாக குவித்து வைத்துள்ளனர்.ஏற்கனவே இடம் இன்றி ரோட்டை அடைத்து பஸ்கள் ஆக்கிரமிக்கும் நிலையில், குவிந்துள்ள மண்ணும் தடையாக மாறியதால் கர்ப்பிணிகள், மாணவிகள், பெண்கள், பஸ் நிற்கும் போது மண் குவியலை கடந்து செல்ல சறுக்கி விழுவதுடன் இடம் இன்றிதவிக்கின்றனர்.