Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) Morning & Evening Batches are Available, Boys & girls SUMMER COACHING CAMP'25 , APRIL 15 TH OnwardsSpecial FeaturesIndividual Focus for all Players.Physical Fitness and Tournament based Training ProgramCamp for Beginners / Intermediate / Advanced Level Players T.P. Manicka Kumar B.A., C.P.Ed., NIS., Mentor & Head CoachG. Kanmani B.A., M.P.Ed., NIS.,Manickam's Badminton Indoor Stadium, 47F/30 Nadar Complex (1st floor) Kamarajar Nagar, (Co-Milk Society Opp.) Rajapalayam. Contact: 9791606566, 9791606567.
விருதுநகர் மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது.ராஜபாளை யம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் பகுதியிலிருந்து 6வது மைல் பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் மூலம் 28 ஆயிரம் இணைப்புகளுக்கு நபருக்கு 60 லிட்டர் வரை ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய் யப்பட்டது.தற்போது புதிதாக 10. ஆயிரம் இணைப்புகள் என 38,800 இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் 6வது மைல் தேக்க குடி நீரும், தாமிரபரணி குடிநீர் கலந்து பழைய இணைப்புகள் வழியே விநியோகிக்கப்படுகிறது.குடிநீர் வடிகால் அதிகாரிகள்: குடிநீர் விநியோகத்திற்கு நகராட்சி 18 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சோதனை முழுமை அடைந்த நிலையில் 7 மண்டலங்கள் டிச. ல் நகராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது.வரி உயர்வுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் கவுன்சில் கூட்டத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.முழுவதும் ஒப்படைக்கப்படும் சூழலில் புதியவரி நிர்ணயம் செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண் டும் என்பதால் பழைய குழாய்கள் வழியே வினி யோகம் செய்யப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு உயர்த்தப்பட்ட வரியை ' வசூலிக்க முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், புதிய வரிவசூல், தண்ணீர் திருட்டு போன்றவை கண் காணிக்க முடியாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கொளுத்தும் வெயிலில் வெளியே வரும் மக்கள் குளிர்பான கடைகளை நாடினாலும், உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு அதிகம் பருகுகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முக்கிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்கின்றனர்.அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தால் பதநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. இது குறித்து நுங்கு நுங்கு வியாபாரி கூறுகையில்: பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடும் வெயில் அதிகரித்து வரும் காலங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளது. தென்காசி, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்..அதேபோல 10 நுங்கு ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வரு வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதநீர், நுங்குவாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.
சித்திரை பூக் குழி திருவிழா, ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் MAY 1 ல் துவங்கியது.அம்மனுக்கு அபிஷேகங்கள் நடந்த பின் கொடிமரத் திற்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறு பலவேறு மண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின் பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. மகாதீபாராதனைக்கு பின் பிரசாதம்வழங்கப்பட்டது. விழாஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு ஜெய்குமார் ராஜா, கார்த்திக் ராஜா, உதயகுமார் ராஜா தலை மையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.11 நாட்கள் நடைபெறும் விழா காலங்களில் தினமும் அம்மன் பூத வாக னம்,, கண்ணாடி தண்டியல், பூ, தட்டு உள்ளிட்ட சப்பரத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட் சியளிப்பார். சிறப்பு நிகழ்வான பூக்குழி திருவிழா மே 10ல் நடைபெறும்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்படுகின்றனர். சத்திரப்பட்டி, அய்யனாபுரம், கீழ ராஜகுலராமன், கோபாலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குளம், கிழவி குளம், தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது.இதனால் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்தனர். கடைவீதிகள், முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் பெரி தும் அவதிப்பட்டனர். ஒரு சில பகுதிகளில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் கம்பங்கூழ், இளநீர், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பான கடைகளை நாடி சென்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் நிழலகம், பஸ் நிலையம், கடைவீதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 ,காலை 6:00 மணிக்கு அவரது நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி, கீர்த்தனாஞ்சலி நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜாதுவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து சொக்கர் கோயிலில் நிறுவனரின் திரு உருவ படத்திற்கும் நினைவு ஜோதிக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது.ஆர். ஆர் நகர் ராம்கோ சிமெண்ட் நிறுவ னத்திற்கு தொழிலாளர்கள் ,சொக்கர் கோயிலில் தொடங்கிய ஜோதி ஓட்டம் தென்காசி மெயின் ரோடு வழியே ராம மந்திரம் வந்தடைந்து .ராம்கோ சமூக சேவை கழகம் சார்பில் ரத்ததான முகாம், அன்னதானம் ,நேற்று மாலை ராஜபாளையம் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் சந்தீப் நாரா யணனின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ராம்கோ குழுமத்தினர் செய்திருந்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கான பத்து நாள் உண்டு ,உறைவிட பயிற்சி முகாம் ,ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் மாவட்டத்தின் பல் வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவர்கள் கலந்து கொண்டனர். இயற்கை பற்றிய அறிவு, பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை முறை, பறவைகளின் வாழ்க்கை நிலைத்தன்மை, கழிவு மேலாண்மை, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியும் நேரடியாக சென்றும் விளக்க பயிற்சி நடந்தது.ராம்கோ சுற்றுச்சூழல் சங்கம், மாவட்ட நிர்வாகம், ரோர் அசோசியேஷன், பசுமை அறக்கட்டளை, ராஜூக்கள் கல்லுாரி இயற்கை மன்றம், கார்பன் நடுநிலை சங்கங்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. கல்லூரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன் நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ராஜபாளையம் சஞ்சீவிமலை முருகன், அம்பல புலி பஜார் சுப்பிரமணியர் கோயில், மழை முந்தல் விநாயகர் கோயில், சொக்கர் கோவில் சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வழிபாடு நடந்தது. மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி, முருகன், தெய்வானை சுவா மிகளுக்கு மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மூலவருக்கு அபிஷே கங்களுடன் யாக பூஜை நடந்தது.மணமகன், மணமகள் அழைப்புக்கு பின் அம்மன் சுவாமிக்கு மாலை மாற்றப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரம் வாசிக்க , திருக்கல்யாணம் நடந்தது.மகா தீபாராதனை ,அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம்.பங்குனி பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது கோதண்டராமர், அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக் கல்யாண திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. 15-ந் தேதியன்று புஷ்பயாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்
ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.டாக்டர் கு. கணேசன்பள்ளி ஆலோசகர் தலைமையில். மாணவி சிவஸ்ரீ வரவேற்றார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து, மாணவி ஹரி விசாலினி பேசினார் "சிறகை விரிப்போம்" என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி விருதாளர் ஆயிஷா ஆர். நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் கவிசேனா, ஹன்சிகா தொகுத்து வழங்க, ஏற்பாடுகளை முதல்வர் சுதா தலைமையில் விளையாட்டுத்துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் நிர்வாகி ராமராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர். மாணவர் விஸ்வ ரோஹித் நன்றி கூறினார்.