போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு
இராஜபாளையம் வடக்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் இராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு தெருக்கூத்து, நாடகம், நடைபெற்றது. ராஜூக்கள் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மது போதையில் லைசென்ஸ் இன்றி, அதிவேகமாக வாகனம் ஒட்டுவது. வாகனங்களை நடுவீதிகளில் நிறத்துவதுபற்றியும், சீட்டு பெல்ட்அணிவதன் அவசியம் குறித்தும் ஊமை நாடகம் மூலம்பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து விதிகள்
ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். ...
இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்
தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது.
மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள்,இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.
உயர் கற்றை ஒளியினைத் தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.எதிரே வாகனங்கள் வரும் போதும்,அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
0
Leave a Reply