ராஜபாளையம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட் டுக்குடிநீர் திட்ட பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் பாதாள சாக்கடை திட்ட பணி முழுமை அடையாத நிலையில் உள்ளன. பலஇடங்களில் சோதனை ஓட்டத்தின் போது புதிதாகபோடப்பட்டதார்ச் சாலை, பேவர் பிளாக்கல் பதிக்கப்பட்ட தெருக்கள் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு சிலவார்டுகளில் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. தென்காசி சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பின்புறம் குடிநீர் வீணாக சாலையில் சென்றன. ராஜபாளையம் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்?எனபொது மக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply