விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், இராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்கம் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.சென்னை, திருச்சி, கோவை, வேலூர், கன்னியாகமரி, விருதுநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து கல்லூரி மாணவர்கள் 38 அணியும், மாணவிகள் 28 அணி என 850 போர் பங்கேற்கின்றனர் காலை 7.00 மணிக்கு தொடங்கி மொத்தம் எட்டு ஆட்டங்களில் பகல் இரவு போட்டிகளாக லீக் மற்றம் நாக் அவுட் போட்டிகளாக நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி அக்டோபர் 2ம் தேதி மாலை நடைபெறும்.போட்டிகளை எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ஊர்க்காவல் படை மதுரை சரக துணைத்தளபதி ராம்குமார் ராஜா தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக கவுரவ செயலாளர் துரைசிங், இராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் நடுவே அமைந்துள்ள சஞ்சீவி மலையில் திடீரென பற்றிய தீயை வனத்துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே தண்டவாளத்தை அடுத்து சஞ்சீவி மலை உள்ளது. இதையொட்டி வடக்கு மலையடிப்பட்டி, குலார் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகர். அண்ணா பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மலையின் வடக்கு பகுதி உச்சியில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. அதிவேக காற்றால் ஒரு பகுதியில் பற்றிய தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் மூலிகை உள்ளிட்ட பசுமையான மரங்கள் தீக்கிரையாகின. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், சேத்துார்,தேவதானம் அடுத்த பகுதிகளில் வறண்ட நிலங்கள், மழை பொழிவை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பகுதிகளுக்கு மக்காச்சோளம் ஒவ்வொரு வருடமும் கை கொடுத்து வரும். இந்நிலையில் இந்த வருடமும் ரெட்டியபட்டி, சிவலிங்காபுரம், ஆலங்குளம், வடகரை, தென்கரை, என்.புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி பயிராக ஆவணி மாதம் மக்காச்சோளம் பயிரிட்டு ஒரு மாதம் நட்டு வைத்து வளர்ச்சியை எதிர்பார்த்த சூழலில் தற்போது அடுத்து வரும் கடும் வெயில் மற்றும் பொய்த்துப்போன மழையால் கருகி நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது. கண்மாய், இரவை பாசனம் தவிர மீதி உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் உழுது ஆவணி மாத பட்டத்தில் மக்காச்சோள விதைகள் ரூ.4000, உழவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு ரூ.11,000 என ஏக்கருக்கு 15,000 என செலவிட்டும் தற்போது ஆவணி புரட்டாசி மாத மழை இல்லாததால் 15 நாட்கள் ஆன மக்காச்சோள கருதுகள் கருகிவிட்டன. கண்மாய் ஒட்டிய கிணற்று பாசன பகுதிகளில் இது ஓரளவு தண்ணீரை பாய்ச்சி தப்பித்த நிலையில் மழையை நம்பிய மக்காச்சோள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 416 குழந்தைகளுக்கு ரூ 10 லட்சம் கல்வி உதவி தொகையினை தலைமை நிதி அதிகாரி விஜயகோபால் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் சுந்தர்ராஜ், மனித வள துணைப் பொது மேலாளர் எட்வின் ஜார்ஜ் வழங்கினர். தொழிலாளர் நல அதிகாரி கவுதமன் வாழ்த்தினார். தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு 01.09.2024 ஞாயிறு மாலை இராஜபாளையம் P. S.K. ருக்மணி அம்மாள் கலையரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது 2024 வழங்கப்பட்டது.அன்புத் தோழி கவிஞர் ஆனந்தி Bhimaraja Anandhi அவர்களின் நாற்று அமைப்பிலிருந்து இந்த நிகழ்வினை மிகவும் சிறப்புற நடத்தினார்கள்.தனது தம்பி M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒரு ஆளுமைக்கு இந்த விருதினை ஆனந்தி வழங்கி வருகிறார்.ஒவ்வொரு முறையும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த முறையும் கலந்துகொள்ள இயலாதபடி ஒரு நாள் முழுக்க காய்ச்சல் வாட்டியது. நின்று பேசிவிட முடியுமா என்னும் தயக்கம் இருந்தது. முதல் நாள் இரவும், நிகழ்வு நாளிலும் மாத்திரை எடுத்துக்கொண்டு சென்றேன்.உள்ளே நுழையும் போதே, முழுக்க நனைக்காத, பன்னீர் தெளித்தது போலவே சின்ன தூறல் வரவேற்றது. காற்றினிலே வரும் கீதம் பாடல் பாடி நிகழ்வினை ஆரம்பிக்க ஒரு ஒருமுகப்படுத்தும் மனநிலைக்கு அழைத்துச் சென்றார் பாடகி சுபா. சிறப்புற வரவேற்புரை அளித்த ஆனந்தியைத் தொடர்ந்து எழுத்தாளர் கவிஞர் கலாப்ரியா அவர்கள் நிறைவான தலைமையுரை அளித்தார்.எழுத்தாளர் நரேந்திர குமார் அவர்கள் மிகவும் பொருத்தமானஅறிமுக உரை அளித்தார். எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் வருகை நிகழ்வினை மெருகூட்டியது. அவரும் அன்பு நண்பர் சண்முக சுந்தரம் அவர்களும் வந்திருந்தனர்.எழுத்தாளர் வண்ணதாசன், கொ. மா. கோதண்டம், ராஜேஸ்வரி கோதண்டம், பாவண்ணன் அவர்களின் மனைவி அமுதா மேடையில் இருக்க விருது வழங்கப்பட்டது.விமர்சகர் சுதா, பாவண்ணன் படைப்பினை வாசித்த அனுபவத்தைப் நிதானமாக நமக்குள் கடத்த, மதுமிதா வாழ்த்துரையில் கதைசொல்லியாக பாவண்ணன் அவர்களின் ஒரு கதையையும் சொல்லி முடித்தார்.எழுத்தாளர் கன்யூட் ராஜ் அவர்களின் கச்சிதமான வாழ்த்துரை முடிந்ததும், எழுத்தாளர் பாவண்ணன் மிகவும் நெகிழ்வான மனநிலையில் அற்புதமான ஏற்புரை அளித்தார். அனைவரும் அந்த மன நிலையில் இருக்க, அன்புப் பரிசு வழங்குதல் முடிந்தது.நிகழ்வினை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய தோழி ரமணி நன்றியுரை அளித்தார். தேசிய கீதத்துடன் நிகழ்வு முடிந்தது.எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை அவரது தந்தையுடன் இணைந்த சித்திரமாக வரைந்த அந்தச் சிறுவன் சிறந்த ஓவியனாக மலரும் எதிர்காலம் அந்த சித்திரத்தில் மலர்ந்திருந்தது.அன்புத் தோழி எழுத்தாளர் கலாப்ரியாவின் மனைவி எங்கள் அன்பு ஆசிரியையை சந்தித்ததில் மகிழ்ச்சி.கலை இலக்கிய பெருமன்றம், தமுஎச மன்ற உறுப்பினர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என அரங்கு நிறைந்திருந்தது. அனைவரையும் சந்தித்த மகிழ்வு மனதை நிறைத்தது.அனைவரும் நிகழ்வு முடிந்த பிறகும் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கே இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றோம்.அன்பு மக்களை சந்திக்கும் வகையில், அன்பில் நிறைந்த ஒரு இனிய மாலையை பரிசளித்த அன்புத் தோழி ஆனந்திக்கு அன்பும் நன்றியும் .நாற்று நிறைவு.
M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா"வில் பல பள்ளிகளில் இருந்து, நூற்றுக்கும் மேலாக மாணவர்கள் கலந்து கொண்டனர்.வைமா குழுமத்தின் Managing DirectorRtn.திருப்பதி செல்வன் கூறிய 5W 1H என்ற ஃபார்முலாசிறப்பாகஇருந்தது.மேலும்அவர்"மனிதர்களைநேசியுங்கள் ,பொருட்களைபயன்படுத்துங்கள்" என்று கூறிய வாசகம் மிகவும் கவர்ந்தது.திருமதி.மைதிலி அவர்கள் உ.வே.சா பற்றிக் கூறிய செய்திகள் அருமையாக இருந்தது.ஆம் அந்த ஓலைச்சுவடி மட்டும் கிடைத்திருந்தால் யானைகள் பேசும் மொழியினை நாம் தெரிந்திருக்கலாம்."அரும்புகள் " அமைப்பு நிறுவனர் திரு.மதிவாணன் அவர்கள் யானைகளைப்பற்றிக் கூறும் போது அவரின் அகமும் புறமும் குழந்தையாகிப் போனது .மேலும் அவர் யானை, குழந்தை, கடல் இந்த மூன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றார்.யானை நன்றாக நீந்தும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் இது எங்கிருந்து இதனைப் பெற்றுக் கொண்டது என்ற செய்தி தான் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.யானை கடல் பசுவிலிருந்துதான் பரிணாமம் ஆகியிருக்கிறது இதன் மூதாதையர் கடல் வாழ் உயிரிகள் என்ற செய்தியை புதிதாய் அறிந்தோம்.யானைகளின் கழிவுகளில் இருந்துதான் காடு உருவாகிறது யானைகளை நம்பி 25 உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன என்பதையும் அறிந்தோம். அவ்ளோ பெரிய பிரமாண்டம் சிறிய எலியைப் பார்த்து பயந்தது என்ற செய்தி சிரிப்பினைத் தந்தாலும் யானையின் மீது பரிவு கொள்ளவே செய்தன.ஒவ்வொரு பலத்திற்குப் பின்னும் ஒரு பலவீனம் உண்டு போல அந்த பலவீனத்தை தெரிந்து கொண்டு மனிதர்கள் அதனை அடக்கி ஆள்கிறார்கள் இன்றைய கூடல் மிகப் பயனுள்ளதாக இருந்தது
ஆகஸ்ட் 28ல் இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். 1-பள்ளியில்இருந்து 12 மாணவர்கள் 12 நூற்களைவாசித்து வருவார்கள்.(நூற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.) 9 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை மொத்தம் 108.அவர்களுக்குமுதல் சுற்று: வினா - விடை எழுதுதல்.இரண்டாம் சுற்று: க்விஸ்அதிகம் Score பண்ணியவர்களுக்கு -1st 2nd 3rd என 36 பரிசுகளும் பள்ளிக்கு - Over all Trophy ம் வழங்கப்பட்டன.இப்படியாக மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக சிறப்பான முறையில் விழா நிறைவு பெற்றது.
இராஜபாளையம் ரோட்டரி சங்கம் முன்னெடுத்தTeachers Day Celebration - PRR Hall ல் மிக கோலாகலமாக நடைபெற்றது. A.K.D தர்மராஜா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. விஜயலக்ஷ்மி அவர்கள் பெரிதும் பாராட்டப்பட்டார். நம் சங்கத்தினின்று அந்நாளைய பள்ளியின் தாளாளர் Rtn.A .R . தசரத ராஜா அவர்கள் ஆசிரியர் விஜய லஷ்மி அவர்களின் பணிகளை சிறப்புற எடுத்துக் கூறி , வளமான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.Rtn.Dr. ஜெயக்குமார் -ஆசிரியர் பணியை பாராட்டிப் பேசினார்.ஆசிரியரின் மாணவர்கள் ஆனந்தி,கார்த்திகேயன், செண்பகம், சாந்தி என அனைவரும்தங்களுடையநினைவ னுபவங்களை- கண்கள் பனிக்கப் பேசினார்கள். செண்பகம் - தம் நினைவுப் பரிசுகளை ஆசிரியர்க்கும், A. K.D. Trust க்கும், சங்கத் தலைவர்க்கும் அன்புடன் வழங்கி மகிழ்ந்தார்கள். 75,76 களில், முதன் முதலாக தங்க மெடல் வாங்கி, A. K.D.பெண்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த செண்பகத்திற்கு சிறப்பு விருந்தினர் மாலை அணிவித்து மகிழ்ந்தார்.A. K.D. Girls School ல் தான் பணியாற்றிய காலம் குறித்து விஜி டீச்சர் சுவைபடக் கூறினார்கள். மாணவர்களின் வெள்ளந்தியான நிலை பற்றிக் கூறும் போது - மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் விளையாடும் Style, Skill பற்றி சிலாகித்துப் பேசும் பொழுது, நாங்கள் அந்த Ground ல் விளையாடிக் கொண்டிருப்பது போலவே உணர்ந்தோம். ஒவ்வொருவர் பெயரையும் உச்சரிக்க - அந்த நினைவாற்றல் சிலிர்க்க வைத்தது .நம் சங்க Club Service Chairman Rtn.செல்வராஜ் அவர்கள் விழாவில் பங்கேற்றது கூடுதல் மகிழ்ச்சியானது. முன்னாள் மாணவர்கள் , விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.நிறைவில் இரண்டு சின்னச் சின்ன Games உடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அரசு ஆஸ்பத்திரி கடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ராஜபாளையம் மட்டு மின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு பொது மக்களுக்கு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கும் விதமாக ரூ.40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் அமைய ஏற்கனவே உள்ள 221 படுக்கை வசதிகளுடன் மொத்தம் 439 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக புதிய ஆஸ் பத்திரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது
ராஜபாளையம் நகரில்1888 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் "டி குழுமம்24" என்ற பெயரில் ராஜபாளையம்ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் கிருஷ்ணராஜு தலைமையில் தலைமை ஆசிரியர் சரவணனின் முன்னிலையில் நடைபெற்றது.இப்பள்ளி மாணவர் செல்வராகேஷ் குமார் வரவேற்புரை ஆற்ற,மாணவர் ஷேக் முகமது ஒளியுல்லா நன்றியுரை வழங்கினார்.விழாவில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் உட்பட சுமார் 855பேர் பங்கேற்றனர்.இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றி பள்ளியின் வளர்ச்சிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்கினார்கள் .முன்னாள் மாணவர் சங்கர சுப்ரமணியம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ரூபாய் 2.5 லட்சம் செலவில் ஆர். ஓ அமைப்பு ஏற்படுத்த நன்கொடை வழங்கினார்கள்.முதன்முறையாக முன்னாள் மாணவர் சங்கத்திற்கு நிர்வாகி தேர்வு செய்யப்பட்டனர்.25 வயது முதல்82வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்த்து முன்னாள் ஆசிரியர்களை நெகிழ்வுடன் கெளரவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்க ளுக்கும் முன்னாள் ஆசிரியர் களுக்கும் விளையாட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசு வழங்கப்பட்டன.ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், காலை முதல் மாலை வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.