கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழா இராஜபாளையத்தில் கொடியேற்றத்துடன் நேற்று, மார்ச் 10 முதல் 10 நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கொடியேற்றத்தை முன்னிட்டு ,அதிகாலை முதல் சுவாமிக்கு அபிஷேகம், பாராயணத்தை தொடர்ந்து, கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை தொடர்ந்து கொடியேற்றப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது. மார்ச் 16-ல் திருக்கல்யாணம், 18-ல் தேர்த்திருவிழா நடைபெறும் விழாக்குழுவினர் கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
.இராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டியும், அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் உள் நோயாளிகள் விரைவில் நலம் பெறவும் ,சிவபுராணம் உள்ளிட்ட பதிவுகள், பாராயணம் செய்யப்பட்டன. சுவாமிக்கு தூப தீப ஆராதனைகள் செய்து அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அரசுமருத்துவமனைக்கு சென்று உள் நோயாளிகளுக்கு பிரசாதம், வேட்டி, சேலை, பழங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார் .கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் ,செயலர் கணேசன், பொருளாளர் முத்தையா தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர்.
மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் நேற்று மாலை பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இரவு 7.32 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன் வரவேற்றார்.பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. பொற்றாமரை குளத்தை பிரதமர் பார்வையிட்டார். அம்மன் சுவாமி சன்னதியில் வழிபட்டார். சிறப்பு பூஜை நடந்தது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின், என் மண் என் மக்கள் நடைபயணத்தின்நிறைவு விழா நேற்று திருப்பூரில் நடந்தது. ஹெலிபேடில் இருந்து திறந்த வாகனத்தில் வந்த மோடியை இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.நாட்டின் அரசியல் மாற்றத்தில் புதிய மையமாக தமிழகம் உருவாகிறது. லோக்சபா தேர்தலில் புதிய சரித்திரம் படைப்போம் என பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
இராஜபாளையம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறந்த வெளி கூரை, லிப்ட், பேரங்காடி பகுதி, புட், கோர்ட், குழந்தைகள் விளையாடும் பூங்கா, தனித்தனியாக நுழைவு, வெளியேறும் வாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், காத்திருப்பு கூடம் போன்ற வசதிகளுக்கான பணிகள் நடைபெற உள்ளது. இவற்றை துவங்கியும், புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்து விட்டார். துவக்க நிகழ்ச்சியை பிரதமர் மோடி கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலத்தில் இருந்து இராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் திருமங்கலத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை ரோட்டில் இருபுறமும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு இந்த வழித்தடமே உருமாறி காணப்படுகிறது. கிருஷ்ணன் கோவிலில் இருந்து வலையப்பட்டி, பாட்டக்குளம், மீனாட்சிபுரம் அச்சங்குளம், கடம்பன்குளம், தைலாகுளம், அத்திகுளம், செங்குளம் தெய்வேந்திரி, அயனாச்சியார்கோவில், பிள்ளையார்குளம், எஸ்.ராமலிங்காபுரம் வழியாக முதுகுடி வரை புதிய ரோடு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.2025 மார்ச் மாதத்திற்கள், பணிகள் முடிவடைந்த, ஏப்ரல் மாதம் முதல் நான்கு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நான்கு வழிச்சாலை திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் மில்ஸ் ரோட்டில் ஹரிஷ் இன் புதிய தங்கும் விடுதி திறப்பு விழா ,நகராட்சி தலைவர் பவித்ரா திறந்து வைக்க ,சென்னை அடையார் ஆனந்த பவன் சேர்மன் வெங்கடேஸ்வரராஜா ,சீனிவாச ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விடுதி உரிமையாளர் அழகு பாண்டியன் வரவேற்க ,டாக்டர் ஹரிஷ் நன்றி கூறினார்.
இராஜபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் நாகராஜன், பொறியாளார் முகமது ஷெரீப், வருவாய் ஆய்வாளர் முத்து செல்வம்,சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.ஒப்பந்ததாரர் பணிக்காக தோண்டிவிட்டதாக பாதியில் விட்டுச் சென்ற சாலையில் குடியிருப்பு வாசிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 16 தெருக்களில் நான்கு ரோடு மட்டும் போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் 90 சதவீதம் பணி முடிந்ததாக கூறுகின்றனர். என்று கவுன்சிலர்கள் வாக்குவாதம் நடந்தது.நகராட்சி தலைர் பவித்ரா அவர்கள் அனைத்து வார்டுகளிலும் சமமாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. எந்த பாரபட்சமும் இல்லை விரைவு படுத்த கூறி இருக்கிறோம். என்றார். இப்பணிகள் எப்போது சரியாகும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இராஜபாளையம் இலை துளிர் அமைப்பில் சிறிய அளவில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு அருகே கைவிடப்பட்ட பழமையான கிணறுகளை தூர் வாரி, கழிவுகளை வெளியேற்றி ,பாதுகாப்பு வேலி அமைத்தனர் . அதனைத் தொடர்ந்து அரசின் பங்களிப்புடன் ,கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர் .. தெருவின் ஒரு பக்கத்தில் பெரியோர்களால் வைக்கப்பட்ட மரங்களை பராமரித்து ,புதிய மரக்கன்றுகளை நட்டு அவற்றின் தண்ணீர் தேவைக்கு சொட்டுநீர் குழாய் பதித்து பசுமையை தொடர்ந்து பேணி காப்பது போன்ற பணிகள் மூலம் இலை துளிர் அமைப்பின் இளைஞர்கள் மேல் சமூகத்தில் நம்பிக்கை பிறந்துள்ளது.
இராஜபாளையம்.P.A. சின்னைய ராஜா ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி P.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள் Τ.Α.Κ.Μ. ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி.ஸ்தாபகர்-ஸ்ரீதர்மரக்ஷகர்-ஸ்ரீ பி .ஏ .சி .ராமசாமி ராஜா ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜாஅன்புடையீர்,நமது பள்ளிகளின் எழுபத்து நான்காவது ஆண்டு விழா வருகிற 12-02-2024 திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்கு P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. Dr. V.P. ஜெயசீலன் I.A.S. அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கவும்.திருமதி. Dr.பவித்ரா ஜெயசீலன், அவர்கள் பரிசுகள் வழங்கவும் அன்புடன் இசைந்துள்ளார்கள். தாங்கள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.ஸ்ரீமதி. R.சுதர்சனம் N.K.ஸ்ரீகண்டன் ராஜா பள்ளிகளின் நிர்வாகிகள் இராஜபாளையம்.தங்கள் அன்புள்ள, P.R.வெங்கட்ராம ராஜா மேனேஜிங் டிரஸ்டி.
ரயில் சோதனை ஓட்டம் விருதுநகர் தென்காசி ரயில் வழித்தடத்தில் தற்போது பயணிகள் ரயிலின் வேகம் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டரில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்ர் உயர்த்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இதற்காக பழைய தண்டவாளங்கள் மாற்றப்பட்டு அதிக வேகத்தை தாங்கும் திறன் கொண்ட பலமான தண்டவாளங்களை பொருத்துவது. அடித்தள மண்ணை பலப்படுத்துவது அதிர்வுகளை தாங்க ஐல்லிக்கற்கள், வளைவுகளை சற்று நேராகி குறுக்கீடு பகுதிகளில் தடுப்புச் சவர் அமைப்பது பணிகள் நடந்து முடிந்துள்ளது.தற்போதுள்ள ரயில்களில் வேகத்தை 110 கிலோ மீட்ர் அதற்கான சோதனை ரயில் நேற்று காலை தென்காசியில் இருந்து கிளம்பி மதியம் 12.10 மணிக்கு இராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றது. சோதனை ரயிலில் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.பி.ஏ.சிராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்.முகாம் இராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்ராயில் என்.எஸ்.எஸ். முகாம் புதுசெந்நெல் குளம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமை முதல்வர் சீனிவாசன் தொடங்கி வைத்து தலைமை ஆசிரியர் ராஜீ அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். முகாமில் பள்ளி மைதானம் சீரமைப்பு, உழவாரப்பணி, மரக்கண்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஊர்வலம்,பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.