ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சில கண்மாய்கள் நிரம்பி மதகு வழியாக மறுகால் பாய்ந்து மற்ற கண்மாய்களுக்கு செல்கின்றன. ராஜபாளையம் தாலுகாவில் உள்ள அலப்பச்சேரி கண்மாய், புதுக்குளம் கண்மாய், புளியங்குளம் கண்மாய், கிருஷ்ணபேரி கண்மாய், செட்டிகுளம், கடம்பன்குளம், கொத்தங்குளம், செங் குளம் கண்மாய், மேல இழுப்பன் குளம் கண்மாய், வாண்டையார் குளம் கண்மாய், - பிரண்டைகுளம், ஆதியூர் கண்மாய், சீவலப்பேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய், தேவதானம் நகரிகுளம் கண்மாய், பெரியகுளம், சேத்தூர் பிராவடி கண்மாய், முகவூர் கண்மாய், வடகரை கண்மாய்கள் நிரம்பின. இதனால்சுற்றுப்பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர்நிலம் பாசன வசதி பெறும்.தற்போதுபெய்துள்ள மழையால் நெற்பயிர்கள், வாழை, கரும்பு, தென்னை, மா,பலா மரங்கள் அதிகமாக சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊருணிகளும் நிரம்பின.இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் அதிக அளவில் நீர் உள்ளது. விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம் மலை அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் மாவரசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.குடிநீர் தேவை கருதி , அய்யனார் கோயில் ஆற்றில் பெருகிய நீரை ,ராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள 6வது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணை மூலம் திருப்பி விடப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சில நேரம் தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது. மழை தொடர்ந்தால் நகராட்சியின் 42 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளைக்கு பிரச்னை இருக்காது, என நகராட்சி குடிநீர் சப்ளை அதிகாரிகள் மகிழ்ச்சி.
நம் மொழி மற்றும் கலாச்சார பெருமையை இளம்தலைமுறையினருக்கு தன் இலக்கிய படைப்புகளால் கொண்டு சென்று “சாகித்ய அகாடமி", "கலைமாமணி" என உயரிய விருதுகளை பெற்று இராஜபாளையத்திற்கு பெருமை சேர்த்த அன்னாரின் மறைவிற்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நான்கு வழிச்சாலையின் ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்வே மேம்பால பணிகளின் ஸ்டீல் ஆர்க் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.முதல் கட்டமாக ராஜபாளையம் வரைதிருமங்கலம் கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார், ராஜபாளையம் முதுகுடி ரயில்வே லைனை கடக்கும் மேம்பால பணிகள் தாமதமாக தொடங்கியதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.ரயில்வே மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் ராஜபாளையம் புது ஸ்டாண்ட் அடுத்துள்ள முதுகுடியில் முடிந்துள்ளது. தற்போது ரயில்வே லைன் இணைப்பிற்கு ஸ்டீல் ஆர்க் வெல்டு பணிகள் வேகமாக ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும். கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் ,அடுத்து முதுகுடி வரையிலான நான்கு வழிச்சாலையில் தடையின்றி பயணிக்க முடியும். இதன் மூலம் இரண்டு நகர்ப்பகுதிகளிலும் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் சுற்றியுள்ள நகரக்குளம், பெரியகுளம், வாண்டையார்குளம் உள்ளிட்ட கண்மாய்கள்நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 33 அடி உயரம் உள்ள சாஸ்தா கோயில் நீர் தேக்கம் தற்போது பாதி அளவை எட்டி உள்ளது. இந்நிலையில் இதை நம்பியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய பகுதிகளில் நெல் நடவு பணிக்காக வயல்களில் நாற்று தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ராஜபாளையம் அடுத்த தேவதானம், சேத்துார் பகுதி விவசாயிகளுக்கு சாஸ்தா கோயில் நீர் தேக்கம் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாத நிலையில் கிணற்று பாசன விவசாயிகளும் அருகிலுள்ள விவசாயிகள் நீரை வாடகைக்கு வாங்கியும் நெல் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் பருவ மழையைஎதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டம் ரயில்வே பணிகள் தவிர மீதம் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. அவ்வழியே வரும் வாகனங்கள் ஊருக்குள் நுழைய இந்த ரோட்டையே பயன் படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கிலோ மீட்டர் துார ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராகவிரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓடை மீது அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள பாலங்களை அகற்ற வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப் பட்டது.இந் நிலையில் சங்கரன் கோவில் ரோட்டில் நீர்வழி ஓடையில் உள்ள பொதுத்துறை வங்கி, திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட 45 அனுமதியற்ற பாலங்களை 15 நாட்களுக்குள் அகற்ற ,தவறும்பட்சத்தில் அரசு சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குரிய தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம், வசூல் செய்யப்படும் எனநெடுஞ்சாலைதுறைசார்பில் நோட்டீஸ்வழங்கப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை முதல் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சங்கரன்கோவில் முக்கு, மாரியம்மன் கோயில்பஸ்ஸ்டாப்உள்ளிட்டபகுதிகளில்முதியோர், சிறுவர்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு உள்ளாகினர். 22 JAN மட்டும் 39 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.கடிபட்ட 32 நபர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், பாதிப்பு அதிகம் உள்ள ஏழு பேருக்கு இமினோ குளோபிலின் மருந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில் பாதிப்பு அதிகமானவுடன் மாவட்ட மருத்துவ துறைக்கு தகவல் அளித்து சுகாதார துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கரில், ராஜபாளையம் அருகே கோபாலபுரம், வடகரை, நரிக்குளம், கலங்காபேரிபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரியாக மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பயிரிடப்பட்ட நாளில் இருந்து போதுமான மழை இல்லாமல் இருந்தது. தற்போது கிணறுகளில் போதுமான அளவில் உள்ள தண்ணீரை மக்காச்சோளத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். இதன் காரணமாக பயிர்கள் நன்கு விளைந்து ,பல இடங்களில் மக்காச்சோளம் கதிர் வீட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சில இடங்களில் காட்டுப்பன்றிகள் தாக்குதல் இருந்தாலும் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம் நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வித்யா பவன் நர்சரி பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் மன்ற விழா நடந்தது.
சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில், அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேச்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரஸ்வாமி திருக்கோவில், இராஜபாளையம்.விநாயகர் சதுர்த்தி பூஜை.நிகழும் மங்களகரமான விஸ்வாவஸு வருடம் ஆவணி மாதம் 11ம் தேதி 27.08.2025 புதன்கிழமைஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.நிகழ்ச்சி நிரல்காலை 6.00 மணி-அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம் கணபதி ஹோமம்.காலை 7.15 மணி-பூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்காலை 08.35 மணி-தீபாராதனை ப்ரசாதம்.இப்படிக்குபி.ஆர். வெங்கட்ராம ராஜாசேர்மன் - ராம்கோ குரூப்.