25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமீபத்திய நிகழ்வுகள்

Dec 09, 2024

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம்

ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம்11.12.2024  ,கார்த்திகை மாதம் ஏகாதசி திதி நாளன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜீனனை நிமித்தமாகக் கொண்டு ஸகல ஜீவர்களும் பயன்பெறும் வகையில் வேதாந்த ஸாரத்தை ஸ்ரீமத் பகவத்கீதையாக உபதேசிக்கப்பட்ட நன்னாள். அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்க்கு பிரியமான ஸ்ரீமத் பகவத்கீதையை அனைவரும் இணைந்து பாராயணம் செய்து இறையருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.இடம்:ஸ்ரீமதி P.S.K.ருக்மணியம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம் வளாகம்)நிகழ்ச்சி நிரல்மாலை 4.00 மணிக்குஸ்ரீமத் பகவத்கீதை பாராயணம் ஆரம்பம்மாலை 7.00 மணிக்குதீபாராதனை, ப்ரசாதம். இப்படிக்குபி.ஆர். வெங்கட்ராம ராஜாகுறிப்பு: அனைவரும் ஸ்ரீமத் பகவத்கீதை புத்தகம் கொண்டு வரவும்.

Dec 01, 2024

ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள்

ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில், ருக்மணியம்மாள் அரங்கத்தில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமையில் 'முப்பதும் தப்பாமே' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான திருப்பாவை போட்டிகள் பரிசளிப்பு விழா நடந்தது. இம்பீரியல் பேட்டரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகிக்க ,சங்கத் தலைவர் அனிதா வரவேற்றார். மாவட்டத்தின் சிவகாசி, விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளி கல்லுாரிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பாவை பாடல், ஓவியம், பேச்சுப் போட் டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அகத்தியர் தமிழ் சங்கம் கோதைநாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Dec 01, 2024

ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது.

ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கினார். தொழில்முனைவோர் சங்கத் தலைவர் அர்ச்சிதா வரவேற்றார். இதில் 18 முதல் 36 வயதிற்கு உட்பட்ட இளம் தொழில் முனைவோர் 120 பேர் பங்கேற்று ஆடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், உணவு, பேக்கரி, கட்டடக்கலை, அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த விற்பனை புதிய வாய்ப்புகள் குறித்து கண்காட்சி நடத்தினர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் விஜய் ராஜா, சிவகணேஷ் செய்திருந்தனர். கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

Nov 29, 2024

பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா

சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.எஸ். குமாரசாமிராஜா சுதந்திர போராட்டத்திற்காக, ஆந்திர சிறையில் இருந்த போது, பூபதி ராஜூ மூலம் கூட்டுறவு வங்கி பற்றி அறிந்து ,1924ல் அவரது பெயரிலேயே தொடங்கி 23 வருடம் தலைவராக இருந்து வழி நடத்தினார். தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு நகர வங்கிகளில் விவசாய விளை பொருட்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கியால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட இரண்டு வங்கிகளில் இதுவும் ஒன்று என்று . விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் * செந்தில்குமார் வாழ்த்தி பேசுகையில் கூறினார்.வங்கி தலைவர் ராதா கிருஷ்ணராஜா வரவேற்றார். நுாற்றாண்டு விழா மலர்  வெளியிடப்பட்டு, பி.எஸ் குமாரசாமி ராஜா உருவப் படம், கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, துணைப் பதிவாளர் வீரபாண்டி, வங்கி இயக்குனர்கள், ராஜூகள் மகாசபை நான்கு கோட்டை தலைவர்கள், வங்கி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வங்கி துணைப்பதிவாளர் ஜான் கபிரியேல் நன்றி கூற விழா  நடைபெற்றது .

Nov 25, 2024

ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா.

ஆர்.ஆர் நகர் குடியிருப்பு சங்கத்தினர்  இணைந்து அரசின் நமக்கு  நாமே  திட்டத்தின் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 53 கேமராக்கள்  பொறுத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் பவித்ரா திறந்து வைத்தார். தொழில் அதிபர் குவைத் ராஜா தலைமை வகித்தார். கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகிதார். குடியிருப்பு சங்க தலைவர் ஜெகநாத ராஜா, செயலாளர் அழகர்சாமி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.  .ராஜபாளையம் நகராட்சி ஆர். ஆர் நகர் குடியிருப்பு, சத்திரப்பட்டி மெயின் ரோட்டில் 9 தெருக்களுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இங்கு கடந்த ஆறு மாதமாக தொடர் திருட்டு  கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.

Nov 14, 2024

வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும்

இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ், வார்அமைப்பு, இந்திய வன அறக்கட்டளை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையும், மேகமலையும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல்பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ் சுற்றுச்சூழல், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். தலைமை செயல்பாட்டு அதிகாரி கிரிதரன் வாழ்த்தினார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்து பேசினார். கிரீன் ப்யூச்சர் பவுன்டேசன் இயக்குனரான ஐஸ்டஸ் ஜோஸ்வா மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் துவங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வரை செல்கிறது. இந்தியாவின் பரப்பில் 5 சதவீதம் உள்ளது. இதில் 51-வது புலிகள் சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 149 வண்ணத்து பூச்சி வகைகளும், 252 பறவை வகைகளும், 63 பாலூட்டி வகைகளும், 100 ஊர்வன வகைகளும், 44  நீர் ,நில வாழ்வனவும், உள்ளன.விலங்குகள் நம்மை விட நுண்ணுணர்வு கொண்டவை. அவை ஒரு போதும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியது இல்லை. இயற்கையை பாதுகாக்க தான் செய்யும், அதே போல் மனிதர்களான நாமும் மலையை பாதுகாக்க வேண்டும் என்றார்.சிவகங்கை பசுமை குழுஉறுப்பினர் மணிவண்ணன் மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு பல வற் றாத ஜீவ நதிகளை தரு • கிறது. இன்று மதுரையின் வைகையும், விருதுநகர் மாவட்டத்தின் வைப்பா றும் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிலைகளை காக்க மேற்கு தொடர்ச்சி மலை அவசியம் .இதை பாதுகாத்தால் வைகை, வைப்பாறு நதிகள் புத்துயிர் பெற்று 5 மாவட்டங்களுக்கான குடி நீர் தேவை பூர்த்தி ஆகும், என்றார்.   

Nov 14, 2024

இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள்.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர்வரத்து பகுதிகளை ஒட்டி பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக நெல் நடவு பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.தேவதானம், சாஸ்தா கோவில் ஒட்டிய பகுதிகளில் விவசாய பணிகளை முதலில் தொடங்கியதும், சேத்தூர், அயன் கொல்லங்கொண்டான், முகவூர், இராஜபாளையம் பகுதி விவசாயிகள் கிணற்று நீர் இருப்பு, கண்மாய் நீர் வரத்தை பொறுத்தும், பணிகளை தாமதித்து தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாய பணிகளுக்கு முன்பு போல் ஆட்கள் கிடைக்காததுடன் கூலியும், அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக இயந்திரம் நடவுக்கு பரவலாக பலரும் மாறி வருகின்றனர்

Nov 07, 2024

(நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி

 ராஜபாளையத்தில் மதுரை மீனாட்சி புக் ஷாப், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் இணைந்து காந்தி கலை மன்றத்தில் நடத்தும் புத்தக கண்காட்சி (நவ. 6) முதல் துவங்கி நவ. 20 வரை  தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம் ஞாயிறும் விற்பனை  உண்டு.  அறிவியல் புனைவு கதைகள், இலக்கியம், நாவல்கள், சிறுகதைகள், வர லாற்று கதைகள், போட்டி தேர்வு உள்ளிட்ட வகையான பல புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இங்கு தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள் ளுபடியில் கிடைக்கும்.

Nov 04, 2024

அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?.

தொடர்மழையால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வெள்ள நீர் ஆற்றில் செல்வதை கண்டுகளித்து குளித்து மகிழ சிவகாசி, விருதுநகர், சேத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன், இராஜபாளையம் அய்யனார் கோயில், அணைத்தலை ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் இரண்டு நாளாக குவிந்து வருகின்றனர்.ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் மற்றும் கன மழையால் வனத்துறையினர் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் தடையை மீறி குளிக்க முற்பட்டு வருகின்றனர். தடுப்பவர்களிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இராஜபாளையத்தில் வனத்துறையினரின் உத்தரவை மீறி வனப்பகுதி ஆறுகளில் விபரீதம் தெரியாமல் குளிப்பதற்காக குவியும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வனத்துறையினர் ஆளாகியுள்ளனர்.

Oct 29, 2024

எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா

ராஜபாளையம்  அக்டோபர் 28  2024 எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் எ.கே.டி .கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார் .சிறப்பு விருந்தினராக மாவட்ட மாநாட்டு தலைவர் ரோட்டரியன் சண்முக நடராஜ் அவர்கள் கலந்து கொண்டு ரோட்டரி அறக்கட்டளையின் உண்மையான நோக்கத்தை தெளிவாக விளக்கி ,இது எவ்வாறு அவரது வாழ்க்கையில்  மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நலனுக்காக பணியாற்றும் வழியை அமைத்தது என்பதை மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் .ராஜபாளையம் ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்தி அவர்கள் எங்கள் கல்லூரி மாணவி  ஸ்ரீராஜலட்சுமியை ரோட்ராக்ட் கிளப்பின் தலைவராக நியமித்து கௌரவபதக்கத்தை அணிவித்தார் .இதனை தொடர்ந்து தலைவரின் ஏற்கும் உறையும்,குழு உறுப்பினர்களின் அறிமுகமும் நடைபெற்றது .ரோட்டரி கிளப் செயலர் கார்த்திகேயன் ரோட்டரி பிரார்த்தனையை நிறைவேற்றினார் .கல்லூரி முதல்வர் முனைவர்.ஜமுனா அவர்கள் வரவேற்புரையாற்றினார் .ரோட்ராக்ட் கிளப்பின் செயலர் காயத்ரி லட்சுமி நன்றியுரை கூறினார் .

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 21 22

AD's



More News