25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமீபத்திய நிகழ்வுகள்

Dec 28, 2023

நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி

நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி இராஜபாளையம் சிட்டி பேஸ்கெட் பால் கிளப் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கூடைபந்து போட்டியில் கோவை, மதுரை, தேனி, போடி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 18 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜீக்கள் கல்லூாயில் உள்ள இரண்டுஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறகின்றன.முன்னாள் இந்திய கூடை பந்தாட்ட வீரர் ராமசுப்பிரமணிய ராஜா நேற்று போட்டியை துவக்கி வைத்தார். சந்திர ராஜா.தலைமை வகித்தார்.  டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.31,000தொகையுடன் டிராபி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இராஜபளையம் சிட்டிபேஸ்கட் பால் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த் பொருளாளர் ராம்சிங் ராஜா செய்துள்ளனர்.

Dec 26, 2023

பேரிகார்டுகளால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாயூரநாதர் சாமி கோவில் அடுத்து பள்ளி முன்பு போலிஸ் சார்பில் ரோட்டின் குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரண்டு டுவீலர் விபத்துகளை காரணம்காட்டி இதற்கு 100 மீட்டர் அருகே வளைவில் தடை ஏற்படுத்தும் விதமாக மற்றொரு பேரிகார்டை போலீசார் அமைத்துள்ளனர். இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் இதில் கவனம் செலுத்தி தடை ஏற்படும் போரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பால தடுப்பு சுவர் உடைந்துள்ளதால் குறுகலாக மாறியது. எச்சரிக்கைக்காக தற்காலிக கம்பிகளை ரோட்டில் ஒரு அடி உள்பகுதி வைத்துள்ளனர். பல்வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென எதிர்ப்படும் பள்ளம், தெரியாமல் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் அருகே ரோட்டோரங்களில் வரிசையாக நிறுத்தப்படும் லாரிகளும் இடைஞ்சலை அதிகப்படுத்துகின்றன. இரவில் இதன் நிலை இன்னும் சிக்கல், மாதக்கணக்கில் தீர்வின்றி தொடரும் பாதிப்பை தடுக்க விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 25, 2023

பாலித்தீன் பைகளில் உள்ள உணவுப் பொருள்களை சாப்பிட்டு பாதிப்பிற்கு உள்ளாகும் வன விலங்குகள்

அய்யனார் கோவில் ஆறு அதன் அருகே அமைந்துள்ள நீர்காத்த அய்யனார் கோவில் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சுற்றுலா தளமாக உள்ளது. பொது மக்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களில் உணவுகளை கொண்டு வந்து வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதுடன் கழிவுகளை ஆற்றின் அருகே போட்டு செல்கின்றனர்.இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் யானை, மான், கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளது.இளைஞர்கள் ஆற்றின் அருகே சமைத்து போதையில் பாட்டில்களை உடைத்து விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசிசெல்வதும் தொடர்கிறது. குருங்குகள், இரையைத் தேடி காட்டிற்குள் செல்லாமல் அங்கு கீழே விழுந்து கிடக்கம் பாலிதீன் பைகளில் உள்ள உணவுகளை பையுடன் சேர்த்து சாப்பிடுகிறது. இதனால் வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகின்றன்.இதைத் தவிர்க்க ஆற்றிற்கு வருபவர்களை நன்றாகக் கண்காணித்தும் சோதனைக் கூடத்தை தீவிரக் கண்காணிப்பிற்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என வனவிலங்கு சமூக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். எத்தனை கண்காணிப்பாளர்கள் இருப்பினும் மக்களாகிய நாமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.

Dec 22, 2023

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜபாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.மாநிலத் தலைவர் அழகு சுந்தரம் தலைமையில் ,பொதுச்செயலாளர் வீரணன் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி போக்குவரத்து போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கி,டிரைவர்கள் ஆட்டோ போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது, உள்ளிட்ட விழிப்புணர்வை வலியுறுத்தினார். 

Dec 18, 2023

மருத்துவ சாதனையாளர் விருது பெற்ற  டாக்டர் கு.கணேசன்

.உலகதமிழ்சங்கம்சார்பில்சர்வதேசவாழ்நாள்மருத்துவசாதனையாளர்விருதுராஜபாளையத்தையத்சேர்ந்தடாக்டர்கு.கணேசன்அவர்களுக்குவழங்கப்பட்டது.விருதுபெற்றதற்காகராஜபாளையம்ரமணமெட்ரிக்,சி.பி.எஸ்.இ.,பள்ளிநிர்வாகம்சார்பில்பாராட்டுவிழாநடந்தது.பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்து விருது பெற்ற  டாக்டர் கு. கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கினார்

Dec 18, 2023

ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி யில் பட்டமளிப்பு விழா

  ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.பல்வேறு துறைகளை சேர்ந்த 266 மாணவர்கள் பட்டம், பாராட்டு சான்று பெற்றனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். கல்வி குழும தலைமை அதிகாரி வெங்கட்ராஜ், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் பங்கேற்றனர்.ராம்கோ குரூப் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை வகித்து பேசுகையில், "ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்கள் ராம்கோ சிமென்ட்ஸ், ராம்கோ டி.சி.எஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். சர்வதேச மட்டத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட ஒப்பந்தத்தின் உறுப்பினராக கல்லுாரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவு, திறன்களை சமூகம், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என்றார்.அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் பேசுகையில்,"அறிவியல் துறைகளில் இந்திய மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சுற்றுச்சூழலை சீர்குலைக்காமல் நிலையான வளர்ச்சியை உண்டாக்க வேண்டும்"என்றார்.துணை முதல்வர் ராஜ கருணாகரன் நன்றி கூறினார்.

Dec 14, 2023

இராஜபாளையம் நகராட்சியில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு சேதம் அடைந்ததால் பாதிப்பு

இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளும் முழு அளவில் தோண்டப்பட்டு 80 சதவீதம் புதிய ரோடு அமைக்கப்பட்டு விட்டது. ரோடு பணிகளின் போது வாறுகால், பக்கவாட்ட கவரை உயர்த்தாமல் ரோடு அமைத்துள்ளனர். இதனால் வாறுகாலை விட ரோடு உயர்ந்து முழுமை அடையாமல் சாலைகள் பக்கவாட்டில் சரிந்தும் பல இடங்களில் சேதம் அடைந்தும் உள்ளது. இதனால் குறுகலான தெருக்கலில் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டில் கூரைபிள்ளையார் கோவில் தெரு, பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட சந்துகள் அடங்கியுள்ளது. தூய்மைபணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை பெறுவதில் கடுமை காட்டுவதாகவும், கழிவுநீர் தேக்கத்தை அகற்றுவதில் மெத்தனம் உள்ளதாக கூறுகின்றனர். திருவள்ளுவர் தெரு தொடக்கத்தில் பேவர் பிளாக் ரோடு சிதைந்தும், தெருவின் நடுவே வாறுகால் தலைப்பாலம் உடைந்தும் விபத்து ஏற்படுத்துகிறது.பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு பகுதி சந்துகளில் மேம்பாட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு புதிய ரோடு போடப்படவில்லை. குடியிருப்பு இடையே குவிக்கப்படும் குப்பை முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி சரி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 11, 2023

அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்கனவே இராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில்  மழையால்  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஆற்றில்நீர்வரத்துஅதிகரித்துவெள்ளப்பெருக்காகமாறியது.மழையைதொடர்ந்துஆற்றில்நீராடிமகிழவந்தசுற்றுலாபயணிகள்பாதுகாப்புகருதிவனத்துறையினரால் அய்யனார் கோவில் அருகே உள்ள ஆற்றைக் கடக்க அனுமதி மறுக்கப்பட்டது.

Dec 05, 2023

இலவச கண் சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கல்லமநா யக்கர்பட்டி அரசு மருத்து வமனை, சிவகாமிபுரம் சாலியர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தலைமை மருத்துவர் சுபாஷினி தலைமை வகிக்க,. சாலியர் ஊர் தலைவர் குரு பாக்கியம் வரவேற்றார். அரசு கண்  மருத்துவமனை மருத் துவ உதவியாளர்கள் பால் ராஜ், அழகர் ராஜ், ஆறுமுகம், காதர் குழுவினர் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற150 பயனாளிகளுக்கு ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, சொட்டு மருந்து, மாத்திரை வழங்கினார். ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக10 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். சாலியர் உறவின்  முறை துணைத்தலைவர்  மன்னன் நன்றி கூறினார்.

Dec 04, 2023

இராஜபாளையத்தில் திருப்பாவை ஒப்புவித்தல் ஓவிய, பேச்சுப் போட்டிகள்

இராஜபாளையத்தில் நம் நகரில் அகத்தியர் தமிழ் சங்கம் கோதை நாச்சியார் தொண்டர்குழு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் பேச்சு, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. அகத்தியர் தமிழ் சங்க தலைவர் அனிதா முன்னிலையில்   பாஜ மாநில விவசாய திட்டக்குழு ராமச்சந்திரராஜா துவக்கினார்  கோதை நாச்சியார் தொண்டர் குழு. அகத்தியர் சங்க உறுப்பினர்கள் தமிழ் ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.இராஜபாளையம் சுற்று வட்டார பள்ளி கல்லூரி மாணவர்கள் 200 பேர் திருப்பாவை ஒப்புவித்தல் ஓவிய, பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.தேர்வு பெற்ற மாணவர்கள் இம்மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்கும் முற்றோதல் நிகழ்ச்சியில் வைத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளனர்.மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்இராஜபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தன.

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News