சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., தலைமையில் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியினை விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் (24.07.2026) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனையே பெரிதும் முக்கியத்துவமாக கருதி செயல்பட்டு வருகிறார்கள். நாங்கள் அனைவரும் சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதற்கு மக்களாகிய உங்களுடைய பெருத்த ஆதரவே காரணம். அதனால் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், குறைகளை தீர்ப்பதற்கும் 24 மணி நேரமும் களப்பணியாற்ற தயாராக இருக்கின்றேன். அதனால் நீங்கள் எந்நேரமும் உங்களது குறைகளை தெரிவிக்கலாம் நிறைவேற்ற தயாராக உள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் சமூகப் பொருளாதாரப் வேறுபாடின்றி அனைத்து குடும்பங்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத்தின் அடிப்படையில் அரிசி மற்றும் கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக, 727 முழு நேர நியாய விலைக் கடைகளும், 235 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 962 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் 5,51,793 அரிசி குடும்ப அட்டை தரார்கள், 10,060 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், 5,933 முதியோர் உதவித் தொகை குடும்ப அட்டைதாரர்கள், 2,518 காவலர்கள் குடும்ப அட்டைதாரர்கள் ஆக மொத்தம் 6,18,619 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நியாய விலைக்கடைகளின் மூலம் 8,723 மெட்ரிக் டன் அரிசியும், 740 மெட்ரிக் டன் சர்க்கரையும், 890 மெட்ரிக் டன் கோதுமையும், 485 மெட்ரிக் டன் துவரம்பருப்பும், 5,02,415 பாக்கெட் பாமாயிலும், லிட்டர் மண்ணெண்ணையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசின் சார்பாக 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடங்கிய 5,311 குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொதுவிநியோக பொருட்கள் நேரடியாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஒரு நபர் மட்டும் இருக்கும் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
01.05.2026 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு உத்திரவு வரப்பெற்ற உடன் வெகு விரைவில் தகுதியான நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படவுள்ளன.தமிழக முதல்வர் அவர்களால் கடந்த வாரம் புதிய குடும்ப அட்டை வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று (24.07.2026) இந்த விழாவில் கடந்த 16.12.2025 முதல் 30.04.2026 வரை புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்த நபர்களில் தகுதியான 3,992 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமையுள்ள AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
தற்பொழுது மத்திய அரசு மூலமாக மானியம் பெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு AAY, PHH, NPHH ஆகிய முன்னுரிமை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18,00,580 நபர்களில் 16,35,694 நபர்கள் கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 1,64,886 நபர்களும் உடனடியாக கைரேகை பதிவு செய்யவும். தங்களது குடும்பத்தில் கைரேகை பதிவு செய்யாத நபர்களை உடனடியாக பதிவு செய்யவும் படிப்பு சம்மந்தமாக மற்றும் பணி சம்மந்தமாக தங்களது குடும்பத்தில் உள்ள நபர்கள் வெளியூரில் இருக்கும் பட்சத்தில் அந்த ஊரில் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்திட வேண்டும் எனசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் I A S.,
மாவட்ட வழங்கல் அலுவலர் சு.சோமசுந்தர சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply