பேபிகார்ன் மஞ்சூரியன் .
தேவையான பொருட்கள் -
10பேபிகார்ன்,
1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,
ஒரு டீஸ்பூன்சோயாசாஸ்,
இரண்டு டீஸ்பூன்தக்காளி சாஸ்,
தேவையான அளவுஉப்பு,
ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்,
ஒரு டீஸ்பூன் இஞ்சிபூண்டு,
இரண்டு டீஸ்பூன்வெங்காய தாள்,
ஒரு டீஸ்பூன்மைதா மாவு ,
இரண்டு டீஸ்பூன்சோளமாவு,
அரை டீஸ்பூன்கரம் மசாலா.
செய்முறை -
பேபிகார்னை நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா சோளமாவு உப்பு சேர்க்கவும்.
மிளகாய்தூள் கரம்மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
பேபிகார்ன் சேர்த்து கலந்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டுசேர்த்து வெங்காயம் வெங்காய தாள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் அரை டீஸ்பூன் மிளகாய்தூள் உப்பு சோயா சாஸ் தக்காளி சாஸ்சேர்த்து நன்றாக வதக்கவும்.பேபிகார்ன் மஞ்சூரியன் .READY.
0
Leave a Reply