25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெள்ளித்திரை

Dec 11, 2024

9 படங்கள் ரிலீஸ்  ( டிச. 13ல் )

டிச.6ல் நான்கு படங் கள் வெளியான நிலையில், நாளை (டிச.13) 'ஐகே லவ் ஸ்டோரி, மிஸ் யு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட் ராஸ், அந்த நாள், மௌனமே காதலாய், விடிஞ்சா எனக்கு கல்யாணம், மழையில் நனைகிறேன், தென்சென்னை,சூது கவ்வும் 2' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம்

Dec 11, 2024

பாடலாசிரியர் ரோகிணி என்பது பலருக்கும் தெரியாது

பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உனக்குள் நானே".. விஜய் நடித்த வில்லு படத்தில் 'ஷல்சா' பாடலும், மாயா திரைப்படத்தில் இடம் பெற்ற 'முன் தினம் பார்த்தேனே' மாலைப்பொழுதின் மயக்கத்திலே திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் ரோகிணி தான். 50வருடங்களாக தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாக நடித்திருந்தாலும் இவர் பல தமிழ் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ரோகிணி என்பது பலருக்கும் தெரியாது.

Dec 05, 2024

பிரபாஸ் உடன் மூன்று படங்கள்

கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம் பாலே. கேஜிஎப் 1, 2, சலார், காந்தாரா போன்ற வெற்றிபடங்களை தயாரித்துள்ளது. இந் நிறுவனம் ஏற்கனவே பிரபாஸின் சலார் படத்தை தயாரித்த நிலையில் அடுத்து இவரை வைத்து மூன்று படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இவற்றில் சலார் 2வும் ஒன்று. மேலும் 2026, 2027, 2028 ஆண்டுகளில் பிரபாஸின் மூன்று படங்கள் வெளியாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dec 05, 2024

கல்கி' இயக்குனர் வர்நாக் அஷ்வின் படத்தில் ஆலியா பட்

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் நடிப்பில் 'கல்கி 2898 ஏடி' படத்தை இயக்கிய வர்நாக் அஷ்வின். அடுத்து இதன் இரண்டாம் பாகம் பட வேலைகளில் இவர் உள்ளார். இதற்கடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை படமாக்க போகிறார். ஏற்கனவே  ஆலியா ஆர்ஆர்ஆர் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் இதில் ஹிந்தி நடிகையான ஆலியா பட்டை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

Dec 05, 2024

சினிமாவாகும் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை

இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இவரது வாழ்க்கையை படமாக்க பல முயற்சிகள் நடந்தன. இப்போது அதற்கு சம்மதம் சொல்லி உள்ளார் ஆனந்த் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பான் இந்தியா படமாக உருவாக உள்ள இதை ஏ.எல்., விஜய் இயக்க உள்ளார். ஆனந்த் வேடத்தில் மாதவன் நடிக்க வாய்ப்புள்ளது.

Dec 04, 2024

ஜமீன் போல வாழ்ந்த எஸ்.என்.லட்சுமி

சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் 20க்கு மேற்பட்ட அனாதை இல்லங்களை கட்டி உதவியவர், வருடத்துக்கு ஒரு முறை அவர் பெயரில் இன்றுவரை ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார் .மொத்த சொத்தையும் ஆசிரமம் கட்டிய ஒரே நடிகை. 

Dec 04, 2024

8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சமுத்திரகனி

இயக்குனராக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் பிஸியாக நடிக்கிறார் சமுத்திர கனி. 2016ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படத்தில் வில்லனாக நடித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தற் போது மலையாளத்தில் 'ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Nov 27, 2024

15 பக்க  வசனம் 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க மனோரமா.

இம்சை அரசன் படத்துல   15 பக்க  வசனம் மனோரமா அம்மாட்ட கொடுத்தேன்.டைம்  எடுத்துக்கங்க வசனத்தை மனப்பாடம் பண்ணிடுங்கனு சொன்னேன்.அவங்க பேப்பர்களை வாங்கிட்டு 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க அசந்து போயிட்டேன்,எப்படிமானு கேட்டேன் 1000 படம் மேல பண்ணியாச்சு இது கூட முடியலனா எப்படிபான்னு சிரிச்சாங்க,அவங்களாம் நம்ம தமிழ் சினிமால இருந்தது நமக்கு பெருமை -சிம்புதேவன் 

Nov 27, 2024

நவ., 29ல் சித்தார்த்தின் 'மிஸ் யூ' ரிலீஸ்

' என்.ராஜசேகர் இயக்கத்தில் சித் தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 'மிஸ் யூ'. நாய கியாக ஆஷிகா ரங்கநாத்தும், முக் கிய வேடங்களில் கருணாகரன், பால சரவணன், லொல்லு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள் ளனர். ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை காதலிக்கிறான். அது ஏன் என் பது தான் படத்தின் கதை. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படம் நவ., 29ல் ரிலீஸ் என அறிவித்துள்ளது.இந்தாண்டு தமிழில் 200 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளது. ஆண்டின் கடைசி கட்டத்தில் இருப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீசாகி வருகின்றன. இந்த வாரம் நவ., 29ல் 'அந்த நாள், டப்பாங்குத்து, மாயன், மிஸ்யு, உறுதி பரமன், சைலண்ட், சாதுவன், சொர்க்கவாசல், திரும்பிப்பார்' ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளன. இதில் சித்தார்த்தின் 'மிஸ் யூ', ஆர்.ஜே. பாலாஜி யின் சொர்க்கவாசல்' மட்டுமே தெரிந்த நாயகர்கள் நடித்துள்ள படங்கள்.

Nov 27, 2024

ரீ ரிலீஸ் ஆகும் 'குணா' படம்

  'குணா' படம் நல்ல விமர்ச னங்களை பெற் றாலும், வெற்றி பெறவில்லை.. இப்படத்தில் உள்ள 'கண்மணி அன்போடு' பாடல் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இடம்பெற்றிருந்தது. அப்படம் ஹிட்டானதற்கு அப்பாடலும் ஒரு காரணம். இதனால் குணா படம் பற்றிய பேச்சுகளும் பரவலானது. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991ல் வெளிவந்த படம் 'குணா' .இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு பிறகு 'குணா' படத்தை முதல் முறையாக ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். நவ., 29ல் படம் வெளியாகிறது.

1 2 ... 61 62 63 64 65 66 67 ... 85 86

AD's



More News