பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங் களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இந் தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ் தான் 33.1 ஓவரில் 151/2 என வலுவாக இருந்தது. அப் போது 300 ரன் எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்திய பவுலர்கள் பிடியை இறுக்க, 34.5 ஓவரில் 165/5 ரன் என சரிந்தது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சூப்பர் துவக்கம் தந்தனர். நசீம் ஷா ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் கோலி, ஸ்ரேயாஸ் அபாரமாக ஆடினர். சல்மான் பந்தில் ஸ்ரேயாஸ் ஒரு இமா லய சிக்சர் (102 மீ., துாரம்) சிக்சர் விளாசினார். அரைச தம் கடந்த ஸ்ரேயாஸ், 56 ரன்னுக்கு குஷ்தில் பந்தில் இமாம் - உல்- ஹக்கின் சர்ச் சைக்குரிய 'கேட்ச்சில்' வெளி யேறினார். 42 ஓவரில் இந்தியா 238/4 ரன் எடுத்திருந்தது. அப்போது கோலி 95 ரன்னில் இருந்தார். வெற்றிக்கு 4 ரன், கோலி சதத்திற்கு 5 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது. குஷ்தில் வீசிய அடுத்த ஓவ ரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த கோலி 96 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் அக்சர் ஒரு ரன் எடுத்தார்.3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த கோலி, ஒருநாள் அரங்கில் 51வது சதம் எட்டினார். இந்திய அணி 42.3 ஓவரில் 244/4 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய இந்தியாவின் விராத் கோலி, ஒரு நாள் போட்டி அரங்கில் தனது 51வது சதத்தை பதிவு செய்தார். அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம்) உள்ளார்.இது கோலியின், 82வது சர்வதேச சதம் (டெஸ்ட்-30, ஒருநாள் -51, 'டி-20'-1) ஆனது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3வது வெற் றியை பதிவு செய்தது. இரு அணிகளும் 6 முறை மோதிய போட்டியில் இந்தியா 3 (2013, 2017, 2025), பாகிஸ்தான் 3ல் (2004, 2009, 2017) வெற்றி பெற்றன.பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கூறுகையில், "கோலி 'பார்ம்' இல்லாமல் தவிப்பதாக உலகமே விமர்சித்தது. ஆனால், முக்கிய போட்டியில் அனாயசமாக சதம் விளாசி, ஆட்ட நாயகனாக முத்திரை பதித்தார். இவரது சிறப்பான உடற்தகுதி, கடின உழைப்பை பாராட்டுகிறேன்," என்றார்.
கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் ஆப்கானிஸ் தான் அணி 208ரன்னில் அடங் கியது. இதனால் தென்ஆப்பி ரிக்க அணி 107 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. ஆப்பிரிக்க வீரர் ரையான் ரிக் கெல்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அணிகள், மோதுகின்றன. நாளை இந்தியா, பாகிஸ்தான் அணிகள், துபாயில் மோதுகின்றனர்.
தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை 'ரேங்கிங்' தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகு திச்சுற்று நடந்தது. இந்தியாவின் குஷால் தலால் (712 புள்ளி), கணேஷ் மணிரத்னம் (711), மானவ் கணேஷ்ராவ் (706) இணைந்து மொத்தம் 2129 புள்ளி எடுத்து, புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், இதே கூட்டணி, 2024ல் 2111 புள்ளிஎடுத்திருந்தது. தொடர்ந்து அணிகளுக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது.இந்திய 5-3 என்ற அணி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.'ரிகர்வ்' கலப்பு அணிகளுக்கான பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் பசந்தி, விஷ்ணு ஜோடி, மலேசியாவின் ஹரிஸ்யா, ஈவன்ரிச் ஜோடியை சந்தித்தது. போட்டி 4-4 என சமனில் முடிய, இந்திய அணி 'ஷூட் ஆப்' முறையில் 19-17 பெற்று, என வெற்றி பைனலுக்கு முன்னேறியது.'ரிகர்வ்' அணிகளுக்கான ஆண்கள் அரை யிறுதியில் இந்தியாவின் விஷ்ணு, கோல்டி, ராகுல் ஜோடி வெற்றி பெற்றது.
வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றிபெற்றது. சுப்மன் கில் 101 ரன்னுடனும் (129 பந்து, 9 பவுண்டரி, சிக்சர்), லோகேஷ் ராகுல் 41 ரன்னுட னும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத் தில் நாளை மறுதினம் (ஞாயிற் றுக்கிழமை) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.11 பிரிவில் அரியானா வீரர் அன்குர் தமா 18 நிமிடம் 22.29 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். வட்டு எறிதலில் எப்.55 பிரிவில் தமிழகவீரர் முத்துராஜா (36.20 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கானஈட்டி எறிதலில் எப்.53 பிரிவில் அரியானா வீராங்கனை காஞ்சன் லகானியும் (8.39 மீட் டர்), எப்.54 பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்திகாவும் (11.87 மீட்டர்) தங்கப்பதக்கம் பெற்றனர்.போட்டி முடிவில் அரியானா 49 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்தமிழ்நாடு 17 தங்கம், 18 வெள்ளி, 21வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழாவில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெயவந்த் குண்டு ஹமனவார், பொருளாளர் சுனில் பிரதான், துணைத் தலைவர் சந்திரசேகர், தமிழ் நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
38வதுதேசிய விளையாட்டு போட்டி ஜனவரி 28ந் தேதி முதல் கடந்த 14ந் தேதி வரைஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது.நாடுமுழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி யில் சர்வீசஸ் (முப்படை) 68 தங்கம், 26வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு 27 தங்கம்,30 வெள்ளி,35வெண்கலம் என்று 92பதக்கங்களு டன் 6வது இடம் பெற்றது. தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதில் தடகளத்தில் 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கம்,வாள்வீச்சில் 4 தங்கம்,ஒரு வெள்ளி, வெண்கலம் என6 பதக்கம், நீச்சலில் 3 தங்கம்,10 வெள்ளி,6 வெண்கலம் என 19பதக்கம் வென்றதும் அடங்கும்.இந்த நிலையில் தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது.
9வதுஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.கராச்சியில் பகல்,இரவு மோதலாக நேற்று தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.50 ஓவர்முடிவில் நியூசிலாந்து அணி5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் அணி47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா,வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த கிரிக்கெட்திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1476 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் கைப்பற்றிய சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ சுத்தின் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் காதுன்யா (வட்டு எறிதல்) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதில் அடங்குவார்கள்.நேற்று மாலை நடந்ததொடக்கவிழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்து ,வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுமேம்பாட்டுதுறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா, பொதுச் செயலாளர் சத்ய நாராயணா. முன்னாள் தலைவர் தீபா மாலிக், பாரா தடகள வீரர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் கிருபாகர ராஜா வரவேற்றார். முடிவில் சென்னை மாவட்ட பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் எம்.எஸ். நாகராஜ் நன்றி கூறினார். முன்னதாக நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.41 பிரிவு) அரியானா வீரா நவ்தீப் 39.93 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான குண்டு எறிதலில் (எப்.56 பிரிவு) அரியானா வீராங்கனை பூனம் ஷர்மா 6.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி ''ரேங்கிங்' பட்டியலில் 'டாப்-8' அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான * இந்திய அணி கோப்பை வெல்ல காத்திருக்கிறது. 29 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானில் 1996ல் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடந்தது. அப்போது அலைபேசி, சோசியல் மீடியா கிடையாது.29 ஆண்டுக்குப் பின், பாகிஸ்தான் மண்ணில் முதன் முறையாக ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகளும் (எதிர், வங்கதேசம், பாக்., நியூசி.,) துபாயில் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றால், போட்டிகள் துபாயில் நடக்கும்.