25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் தங்கப்பதக்கத்தை வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துப்பாக்கி சுடுதல், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் தங்கப்பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கி சுடுதல்.

உலககோப்பை துப்பாக்கி சுடுதல் பெருவில், தொடர். பெண்களுக்கான தனிநபர் 10 மீ.,'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் (582.24 புள்ளி), மனு பாகர் (578.25) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.

அடுத்துநடந்த பைனலில் சுருச்சி, 243.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். 

மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் 242.3 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். 

 பதக்கப்பட்டியலில் இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒருவெண்கலம் வென்ற இந்தியா, முதலிடத்தில் உள்ளது. 

 

கால்பந்து .

 

பெண்களுக்கான கால்பந்து தொடர் (ஐ.டபுள்யு.எல்.,) இந்தியாவில் 8வது சீசன் நடக்கிறது. 

நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை நேரு மைதானத்தில் தமிழகத்தின் சேது, டில்லியின் ஹாப்ஸ் அணிகள் தங்களது கடைசி போட்டியில் மோதின.

சேது அணி சார்பில், ஹதிஜா 38வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். ஹாப்ஸ் அணி சார்பில் கிளாடிஸ் அம்போபியா 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவாக முடிந்தது.

இதுவரை நடந்த  போட்டிகள் முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 35 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் முதலிடத்தை உறுதி செய்த ஈஸ்ட் பெங்கால், முதல் முறையாக சாம்பியன் ஆக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News