25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


விளையாட்டு (SPORTS)

Feb 14, 2025

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு 38வது சீசன் பதக்கபட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்தது.

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டின் 38வது சீசன் ,18 நாள் நடந்த இதில், 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடந்தன.தமிழகத்தின் ரோகித் தனுஷ் (நீச்சல்),நர்மதா (துப்பாக்கிசுடுதல்), ஆரோக்கியா அலிஷ், அஜித் நாராயணா (பளு துாக்குதல்), வேலவன் செந்தில் குமார் (ஸ்கு வாஷ்), சதிஷ் குமார் (பாட்மின்டன் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), அபினவ் சண்முகம், மணிஷ் சுரேஷ் குமார் ஜோடி (டென்னிஸ்), செலினா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினர். ஸ்குவாஷ் (ஆண்கள் இரட்டையர்), கூடைப்பந்து, பீச் வாலி பாலில் தமிழகம் தங்கம் வசப்படுத்தியது. தடகளத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்திய தமிழகத்தின் வித்யா (400 மீ., தடை ஓட்டம்) 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். தவிர பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), பவித்ரா (போல் வால்ட்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல் ) அசத்தினர். தேசிய விளையாட்டில் தமிழகம் 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.முடிவில் தேசிய விளையாட்டு கொடி இறக்கப்பட்டது. 2027ல் தேசிய விளையாட்டு நடக்க உள்ள மேகாலயா முதல்வர் கான்ராடு சங்மாவிடம் கொடி வழங்கப்பட்டது." இந்திய விளையாட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த தயாராக உள்ளோம். அப்போது நமது நட்சத்திரங்கள் பதக்கங்கள் வென்று, இந்திய தேசியக் கொடியை உயரே பறக்கச் செய்வர்," என்று அமித் ஷா கூறினார். 

Feb 13, 2025

ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் வேலவன் செந்தில்குமார் வெற்றி .

அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் நகரில் ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கின்றது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அமெரிக்காவின் ஷாஜகான்கானை எதிர் கொண்டார். முதல் இரு செட்டை 11-7, 11-4 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 9–11 என நழுவ விட்டார். நான்காவது செட்டில் 11-7 என சிறப்பாக செயல்பட்ட இவர், முடிவில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

Feb 13, 2025

உத்தரகாண்ட் தேசிய விளையாட்டு போட்டிகள்

 டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகா மோதினர்.முதல் இரு செட்டை கைப்பற்றிய செலினா, அடுத்த மூன்று செட்டுகளை இழந்து, கடைசி இரு செட்டை வசப்படுத்தினார்.நீண்ட போராட்டத்தின் முடிவில், 4-3 செலினா (11-7, என்ற 11-2, 6-11, 7-11, 8-11, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டி ராவின் ஜாஷ் மோடியை சந்தித்தார். சத்யன் 3-4 ) என்ற  (7-11, 6-11, 11-7, 11-8, 14-12, 6-11, 11-6) கணக்கில்  வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜாஷ் மோடி தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் பைனலில் மேற்கு வங்கத்தின் ஆயிஹா, அனிர் பன் ஜோடி 3-2 என தங்கப் பதக்கம் வென்றார். ஹாக்கி பெண்களுக்கான ஹாக்கி பைனலில் ஹரியானா, மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4,1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. மல்யுத்தம்   பெண்களுக்கான 'பிரீஸ் டைல்' மல்யுத்தத்தில் மகா ராஷ்டிராவின் சுவாதி(53 கிலோ), ஹரியானாவின் தப்ஸ்யா(57 கிலோ) தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய்தீப் (74 கிலோ), டில்லியின் முகுல் (86 கிலோ) தங்கம் வென்றனர். 

Feb 13, 2025

இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) டி-20 தொடர் 

இந்திய கிரிக்கெட்போர்டு(PCCI) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக்(டபிள்யு. பி.எல்.,) டி-20 தொடரில் மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வதோதரா(குஜராத்), லக்னோ(உ.பி.,) என இரு இடங்களில் நடக்க உள்ளன.இத்தொடரில் சர்வதேச வீராங்கனைகளுக்கு, இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சவால்கொடுத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.ஸ்ரேயான்கா, சைகா உள்ளிட்ட பலர் இத் தொடரின் சிறந்த கண்டு பிடிப்பாக திகழ்கின்றனர். முதல் இரண்டு சீசனில் மும்பை (2023), பெங்களூரு (2024) அணிகள் கோப்பை வென்றன. மூன்றாவது  சீசன் இன்று, குஜராத்தில் உள்ள வதோதராவில் துவங்குகிறது.

Feb 12, 2025

தேசிய விளையாட்டுபோட்டிகள்

பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நேற்று பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் நடந்தது.பாரிஸ் ஒலிம்பிக் 4X400 5., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் வித்யா 26, , 58.11 வினாடி நேரத்தில் ஓடிவந்து, தங்கப்பதக்கம் வென்றார். .மற்றொரு தமிழக வீராங்கனை ஸ்ரீவர்தானி (59.86) , மகா ராஷ்டிராவின் நேஹா (1:00.52) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். உயரம் தாண்டுதல்பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஹரியானாவின் பூஜா (1.84 மீ.,) தங்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா,1.79 மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம்  வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபிநயா (1.77 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.  ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ,உ.பி.,வீரர் சச்சின் யாதவ், 84.39 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உ.பி., வீரர்கள் ரோகித் யாதவ் (86.23 மீ.,), விகாஷ் சர்மா (79.33 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம்ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் சவான் பார் வல் (13 நிமிடம், 45.93 வினாடி) தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். 

Feb 12, 2025

சீனாவில், ஆசிய பாட்மின்டன்

சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின.கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-10, 21-9 என மக்காவின் லியோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-12 என மக்காவ் வீரர் பாங் போங் புய்யை வென்றார். பெண்கள் ஒற்றையரில் இந்தியா வின் மாளவிகா 21-15, 21-9 என மக்காவின் ஹாவோவை சானை தோற்கடித்தார்.ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-9 என மக்காவின் புய் சி சோன், வோங் கோக் வெங் ஜோடியை வென் றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என மக்காவின் வெங்சி, புய் சிவா ஜோடியை வீழ்த்தியது.முடிவில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. 

Feb 12, 2025

கிரிக்கெட்

 இந்தியாவந்தஇங்கிலாந்துஅணிமூன்றுபோட்டிகள்கொண்டஒருநாள்தொடரில்பங்கேற்றது.இந்தியஅணி, தொடரை 20 என ஏற்கனவேகைப்பற்றிவிட்டது.மூன்றாவதுபோட்டிநேற்றுஉலகின்பெரியமோடிமைதானத்தில்(ஆமதாபாத்) நடந்தது.   இந்திய அணி 41 ஓவரில் 289/5 ரன் எடுத்து வெற்றி. இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.சச்சின் (21,741), சங்ககரா (18,423), ஜெய வர்தனாவுக்கு (17,386), அடுத்து கோலி (16,000) உள்ளார் இந்திய வீரர் சுப்மன் கில் நேற்று தனது 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன், 50 வது ஒருநாள் போட்டி யில் சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார். ஆசிய அளவில் அதிக ரன் குவித்த வீரர் களில்நேற்று 52 ரன் எடுத்த கோலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 4000 ரன் எடுத்த முதல் இந்தியர் ஆனார்.  ஆசிய மண்ணில் நடந்த மூன்று வித போட்டிகளில் அதி வேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவின் சச்சினை (353) முந்தினார் கோலி.     

Feb 11, 2025

தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் தேசிய விளையாட்டு 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஓட்ட பந்தயம் தமிழக வீரர் ராகுல் குமார் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் (21.06 வினாடி), நிதின் (21.07) இரண்டு, மூன்றாவது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன. ஒடிசா வீரர் அனிமேஷ் (20.58) தங்கம் வென்றார்.  தமிழகத்தின் தீபிகா, பெண்களுக்கான 'ஹெப் டத்லான்' போட்டியில், வெண்கலம் கைப்பற்றினார்.தமிழகம் 74 பதக்கங்கள் வென்று, முதலிடத்தில் உள்ளது. தேசிய விளையாட்டில் இதுவரை தமிழகம் 21 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கம் வென்று, 6வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் அணி (49 தங்கம், 18 வெள்ளி, 19 வெண் கலம் என 86) முதலிடத்தில் உள்ளது. டென்னிசில் தங்கம்தமிழகத்தின் அக்ஸ் பத் ரிநாத், லட்சுமி பிரபா ஜோடி,டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில், 6-4, 6-1 என கர்நாடகாவின் நிக்கி, சோகா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.  குஜராத்தின் ஜாவியாவை சர்வீசஸ் வீரர் இஷாக் இக்பால், 3-6, 6-4, 7-6 என  வென்று, தங்கம் வென்றார்.குஜராத்தின் வைதேகி பெண்கள் ஒற்றையர் பைனலில், 6-4, 6-4 என நேர் செட்டில் மகாராஷ்டிராவின் ஜீல் தேசாயை வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.அரையிறுதியில் வீழ்ந்த ஆமோதினி (கர்நாடகா),  ஆகான்ஷா (மகா ராஷ்டிரா), வெண்கலப் பதக்கம் பெற்றனர். 9 பேரும் சாதனை 11 பேர் பங்கேற்ற ,பெண்களுக்கான 10 கி.மீ., நடை பந்தயம் நேற்று நடந்தது.2 பேர் பாதியில் விலகினர். ஹரியானாவின் ரவினா (45.52 நிமிடம்), தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். அடுத்து வந்த உத்தரகாண்ட் வீராங்கனைகள் ஷாலினி  (46.12), บយល់ (47.36), மான்சி (48.32), உ.பி.,யின் முனிதா (46.23), ரேஷ்மா (48.16), மோகவி (46.23, தமிழகம்), சேஜல் (49.33 மகா ராஷ்டிரா), மோனிகா (51.45, ஹரியானா) என 8 பேரும் தேசிய சாதனை படைத்தனர்.தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக் கிறது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நேற்று நடந்தது. தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல், 16.50 மீ., நீளம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற் றினார்.தமிழகத்தின் மற்றொரு வீரர் முகமது சலாஹு தீன், 16.01 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார். கேரளாவின் முகமது முஹாசின் (15.57 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.   

Feb 11, 2025

விளையாட்டு போட்டிகள் FEBRUARY 12TH

  டென்னிஸ்இந்தியாவின் சசிகுமார் முகுந்த் டில்லி ஓபன் தொடரின் முதல் சுற்றில் ,பிரான்சின் சாஸ்ச்சா கய்மார்ட் வேயன்பர்க்கை 4-6, 6-2, 6-0 என்ற கணக்கில் வென்றார்.  பிரான்சில் ஆண்களுக் கான ஏ. டி. பி., டென்னிஸ் தொடர் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகிபாம்ப்ரி, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பெல், அமெரிக் காவின்பாட்ரிக் ஜோடியை எதிர்கொண்டது. செஸ் "நார்வே தொடர் உட்பட வரும் போட்டிகளில் வென்று கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதே இலக்கு," என்று தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி கூறினார். 

Feb 11, 2025

தேசிய இந்தியன் ஸ்னூக்கர் தொடரில் 36 வது கோப்பை வென்றார் அத்வானி

 தேசிய ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் மத்திய பிரதேசத்தின் இந்துார் தொடரின் 91வது சீசன் நடந்தது.  இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பங்கஜ் அத்வானி, ஆண்களுக்கான பைனலில் , கோல்கட்டாவின் பிரிஜேஷ் தமானி பலப்பரீட்சை நடத்தினர்.துவக்கத்தில் 2-4 என பின் தங்கினார் அத்வானி., அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.  36 வது கோப்பையை தேசிய தொடரில் அத்வானி வென்றார்.   

1 2 ... 171 172 173 174 175 176 177 ... 184 185

AD's



More News