ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 65 நாட்கள் நடக்கும் 18வது சீசனில் பைனல் உட்பட 74 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் 12 நாட்கள், தலா இரண்டு போட்டிகள் நடத்தப்படும். மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வரும் மார்ச் 22 ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. ஈடன்கார்டனில் நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, தனது முதல் போட்டியில் மும்பை அணியை மார்ச் 24ல் சென்னையில் சந்திக்கிறது.
ஹாக்கி சர்வதேசஹாக்கிகூட்டமைப்புசார்பில்பெண்களுக்கானபுரோலீக்6வதுசீசன்(2024,25)நடக்கிறது.மொத்தம்9 அணிகள்பங்கேற்கின்றன.ஒடிசாமாநிலம்புவனேஸ்வரில்நேற்று நடந்த லீக்போட்டியில்இந்தியா, இங்கிலாந்துஅணிகள்மோதின. இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது. கால்பந்து இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணிக்குகிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் வில்மர் ஜோர்டான்(19வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டென்னிஸ் புனேயில், மகாராஷ்டிரா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் எலியாஸ் மோதினர். ஒரு மணி நேரம்,52 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் 5-7, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் தடகளம் மாற்றுத் திறனாளிக்கான, தேசிய பாரா தடகளப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை துவங்குகிறது. பாரா தடகள வீரர், வீராங்கனைகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, இன்று காலை சென்னை வருகின்றனர். இதுவரை, 1,430க்கும் அதிகமான, வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 180க்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ளரங்கு தடகள போட்டி நடந்தன. இதன் 3000 மீ.,'ஷார்ட் டிராக்' போட்டியில் இந்தியா சார்பில் குல்வீர் சிங் பங்கேற்றார். ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், இம்முறை பந்தய துாரத்தை 7 நிமிடம், 38.26 வினாடி நேரத்தில் கடந்து இரண்டாவது இடம் பிடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
கோல்ப்கோல்கட்டாவில் நடந்த 'டாடா ஸ்டீல் புரோ பஷனல் கோல்ப் டூர் ஆப் இந்தியா (பி.ஜி.டி.ஐ.,) பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப்' தொடரில் சண்டிகரின் யுவராஜ் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார். டென்னிஸ் டில்லியில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வே யின் கர்ட்னி ஜான் லாக் ஜோடி, பிரிட்டனின் ஜே கிளார்க், டென்மார்க்கின் ஜோஹன்னஸ் லிட்சென் இங்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நிக்கி பூனாச்சா, ஜான்லாக் ஜோடி 6–2, 7-6 என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. பேட்மின்டன் சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.
உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டின் 38வது சீசன் ,18 நாள் நடந்த இதில், 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடந்தன.தமிழகத்தின் ரோகித் தனுஷ் (நீச்சல்),நர்மதா (துப்பாக்கிசுடுதல்), ஆரோக்கியா அலிஷ், அஜித் நாராயணா (பளு துாக்குதல்), வேலவன் செந்தில் குமார் (ஸ்கு வாஷ்), சதிஷ் குமார் (பாட்மின்டன் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), அபினவ் சண்முகம், மணிஷ் சுரேஷ் குமார் ஜோடி (டென்னிஸ்), செலினா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினர். ஸ்குவாஷ் (ஆண்கள் இரட்டையர்), கூடைப்பந்து, பீச் வாலி பாலில் தமிழகம் தங்கம் வசப்படுத்தியது. தடகளத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்திய தமிழகத்தின் வித்யா (400 மீ., தடை ஓட்டம்) 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். தவிர பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), பவித்ரா (போல் வால்ட்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல் ) அசத்தினர். தேசிய விளையாட்டில் தமிழகம் 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.முடிவில் தேசிய விளையாட்டு கொடி இறக்கப்பட்டது. 2027ல் தேசிய விளையாட்டு நடக்க உள்ள மேகாலயா முதல்வர் கான்ராடு சங்மாவிடம் கொடி வழங்கப்பட்டது." இந்திய விளையாட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த தயாராக உள்ளோம். அப்போது நமது நட்சத்திரங்கள் பதக்கங்கள் வென்று, இந்திய தேசியக் கொடியை உயரே பறக்கச் செய்வர்," என்று அமித் ஷா கூறினார்.
அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் நகரில் ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கின்றது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அமெரிக்காவின் ஷாஜகான்கானை எதிர் கொண்டார். முதல் இரு செட்டை 11-7, 11-4 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 9–11 என நழுவ விட்டார். நான்காவது செட்டில் 11-7 என சிறப்பாக செயல்பட்ட இவர், முடிவில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகா மோதினர்.முதல் இரு செட்டை கைப்பற்றிய செலினா, அடுத்த மூன்று செட்டுகளை இழந்து, கடைசி இரு செட்டை வசப்படுத்தினார்.நீண்ட போராட்டத்தின் முடிவில், 4-3 செலினா (11-7, என்ற 11-2, 6-11, 7-11, 8-11, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டி ராவின் ஜாஷ் மோடியை சந்தித்தார். சத்யன் 3-4 ) என்ற (7-11, 6-11, 11-7, 11-8, 14-12, 6-11, 11-6) கணக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜாஷ் மோடி தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் பைனலில் மேற்கு வங்கத்தின் ஆயிஹா, அனிர் பன் ஜோடி 3-2 என தங்கப் பதக்கம் வென்றார். ஹாக்கி பெண்களுக்கான ஹாக்கி பைனலில் ஹரியானா, மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4,1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. மல்யுத்தம் பெண்களுக்கான 'பிரீஸ் டைல்' மல்யுத்தத்தில் மகா ராஷ்டிராவின் சுவாதி(53 கிலோ), ஹரியானாவின் தப்ஸ்யா(57 கிலோ) தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய்தீப் (74 கிலோ), டில்லியின் முகுல் (86 கிலோ) தங்கம் வென்றனர்.
இந்திய கிரிக்கெட்போர்டு(PCCI) சார்பில் பெண்களுக்கான பிரிமியர் லீக்(டபிள்யு. பி.எல்.,) டி-20 தொடரில் மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வதோதரா(குஜராத்), லக்னோ(உ.பி.,) என இரு இடங்களில் நடக்க உள்ளன.இத்தொடரில் சர்வதேச வீராங்கனைகளுக்கு, இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சவால்கொடுத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.ஸ்ரேயான்கா, சைகா உள்ளிட்ட பலர் இத் தொடரின் சிறந்த கண்டு பிடிப்பாக திகழ்கின்றனர். முதல் இரண்டு சீசனில் மும்பை (2023), பெங்களூரு (2024) அணிகள் கோப்பை வென்றன. மூன்றாவது சீசன் இன்று, குஜராத்தில் உள்ள வதோதராவில் துவங்குகிறது.
பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நேற்று பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் நடந்தது.பாரிஸ் ஒலிம்பிக் 4X400 5., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் வித்யா 26, , 58.11 வினாடி நேரத்தில் ஓடிவந்து, தங்கப்பதக்கம் வென்றார். .மற்றொரு தமிழக வீராங்கனை ஸ்ரீவர்தானி (59.86) , மகா ராஷ்டிராவின் நேஹா (1:00.52) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். உயரம் தாண்டுதல்பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஹரியானாவின் பூஜா (1.84 மீ.,) தங்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா,1.79 மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபிநயா (1.77 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ,உ.பி.,வீரர் சச்சின் யாதவ், 84.39 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உ.பி., வீரர்கள் ரோகித் யாதவ் (86.23 மீ.,), விகாஷ் சர்மா (79.33 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம்ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் சவான் பார் வல் (13 நிமிடம், 45.93 வினாடி) தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரில், மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின.கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-10, 21-9 என மக்காவின் லியோங், வெங் சி ஜோடியை வீழ்த்தியது.ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-16, 21-12 என மக்காவ் வீரர் பாங் போங் புய்யை வென்றார். பெண்கள் ஒற்றையரில் இந்தியா வின் மாளவிகா 21-15, 21-9 என மக்காவின் ஹாவோவை சானை தோற்கடித்தார்.ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-9 என மக்காவின் புய் சி சோன், வோங் கோக் வெங் ஜோடியை வென் றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-5 என மக்காவின் வெங்சி, புய் சிவா ஜோடியை வீழ்த்தியது.முடிவில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.