கோயம்புத்தூர் விமான நிலையத்தில் டிஜி யாத்ரா.. வசதி..!
டிசம்பர் 2024 க்குள் சென்னை, புவனேஸ்வர் மற்றும் கோவை உட்பட சில விமான நிலையங்களுக்கு முறையான டிஜி யாத்ரா திட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் கோவையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.டிஜி யாத்ரா திட்டம் விமான நிலையங்களில் விமானப் பயணத்தை எளிதாக்குகிறது. இது செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கும், பயணிகளுக்கு விஷயங்களை எளிதாக்குவதற்கும், காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், பேப்பர் பயன்பாட்டினை தவிர்ப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கான இ-பாஸ்போர்ட்டையும் இதில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். ஃபேஷியல் ரெகக்னிஷன் டெக்னாலஜி (எஃப்ஆர்டி) அடிப்படையிலான தொடர்பு இல்லாத மற்றும் தடையற்ற பயணிகள் இயக்கஅமைப்பாகும். தற்போது சில விமான நிலையங்களில் டிஜி யாத்ரா திட்டம் செயல்படும் நிலையில், இந்த வசதியை கோயம்புத்தூர் உள்ளிட்ட கூடுதல் விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
மத்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகத்தினால் விமான பயனாளிகளின் வசதியை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இது பெங்களூரு, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, அகமதாபாத் போன்ற விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மேலும் 11 விமான நிலையங்களில் டிஜி யாத்ராவைச் சேர்க்கும் திட்டமும் உள்ளது. பயணிகளுக்கு விஷயங்களை எளிதாக்கவும், விமான நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் இத்தகைய மாற்றங்களை செய்து வருகிறது.கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது, போர்டிங் பாஸ் பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டி இருக்கும். இதனை எளிதாக்கும் விதமாகவும் மற்றும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்திலும் இந்த டிஜி யாத்ரா செயலியை, மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் தங்களின் மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பயண விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
டிஜி யாத்ராவைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை பயணிகள் தேர்வு செய்யலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். பயணிகள் ஒப்புக்கொண்டால் மட்டுமே விமான நிலைய ஊழியர்கள் பயன்பாட்டிற்கான தகவல்களைச் சேகரிப்பார்கள், அவர்களின் தனியுரிமை மற்றும் விருப்பம் மதிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.டிஜி யாத்ராவைப் பயன்படுத்த, பயணிகள் தங்கள் ஆதாரை மற்றும் தங்களைப் படம் எடுத்துக்கொண்டு டிஜியாத்ரா செயலியில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் விமான நிலையத்தை அடைந்ததும், பார்கோடு கொண்ட அவர்களின் போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்யப்பட்டு, விவரங்கள் விமான நிலையத்திற்கு அனுப்பப்படும்.இ-கேட்டில், பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் FRT அவர்களின் அடையாளத்தையும், பயணப் பேப்பர்களை சரிபார்க்கிறது. எல்லாம் சரியாக இருந்தால், அவர்கள் இ-கேட் வழியாக உள்ளே செல்லலாம். டிஜி யாத்ராவை பல விமான நிலையங்களுக்கு கொண்டு வரவும், வெளிநாட்டு பயணிகளும் அதை பயன்படுத்த அனுமதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
0
Leave a Reply