புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை
மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும்.ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் சிறப்பாக திகழ்கிறது இச்சிறப்பு பெற்ற மகாளய அமாவாசை அக்டோபர் 02 ம் தேதி புதன் கிழமை மகாளய அமாவாசை தினம் வருகிறது.
மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை-
1.பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
2.பிறகு பகல் பொழுதில் முன்னோர்களின் படத்திற்கு முன் இலை பரப்பி அதில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை பரிமாறி வைத்து வழிபட வேண்டும்.
3.மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக யாராவது ஒருவருக்காவது உணவு, உடை போன்ற ஏதாவது ஒன்றை தானமாக வழங்க வேண்டும்.
4.நிறைவாக மாலை 6 மணிக்கு பிறகு வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
0
Leave a Reply